IPL 2019 KXIP vs DC: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியது.
IE Tamil commentary
Indian Premier League, 2019Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali 28 January 2021
Kings XI Punjab 166/9 (20.0)
vs
Delhi Capitals 152 (19.2)
Match Ended ( Day - Match 13 ) Kings XI Punjab beat Delhi Capitals by 14 runs
Live Blog
IPL 2019: DC vs KXIP Live, Delhi Capitals vs Kings XI Punjab Live Score
Highlights
00:07 (IST)02 Apr 2019
17 பந்துகளில் 7 விக்கெட்
இப்படியொரு சொதப்பலை வேறு எங்காவது பார்த்ததுண்டா!! டெல்லி அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 17 பந்துகளில் இழந்திருக்கிறது. ஒரு ஹாட்ரிக் உட்பட... ஷமி, சாம் குர்ரன் ஆகிய இந்த இரு பவுலர்களும், டெல்லியின் ஓவர் கான்ஃபிடன்ட்டை சுக்கு நூறாக உடைத்து எறிந்துள்ளனர்.
23:53 (IST)01 Apr 2019
பஞ்சாப் வெற்றி, சாம் குர்ரன் ஹாட்ரிக்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட, ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய சாம் குர்ரன், பஞ்சாப் வெற்றியை அட்டகாசமாக தீர்மானித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் டெல்லி 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோற்றது.
23:44 (IST)01 Apr 2019
ஹனுமா விஹாரி போல்ட்
நாம சொன்னது ஷமி-க்கு கேட்டுடுச்சோ என்னமோ! பண்ட் ஸ்டெம்ப்பை பிடுங்கியவர், இப்போது ஹனுமா விஹாரியின் மிடில் மற்றும் லெக் ஸ்டெம்புகளை பிடுங்கி எறிந்திருக்கிறார். வெறும் 2 ரன்களில் ஹனுமா பெவிலியன் திரும்பினார்.
வாவ்.. அடுத்த அதிரடி... ஷமி ஓவரில், க்ரிஸ் மோரிஸ் தட்டிவிட்டு சிங்கிள் ஓட, நம்ம ரவிச்சந்திரன் அஷ்வினின் டேரக்ட் த்ரோ, துல்லியமாக ஸ்டெம்ப்பை தாக்க, மோரிஸ் அப்படியே ஓடியபடியே பெவிலியன் சென்றுவிட்டார். 2 இன் டூ...
23:29 (IST)01 Apr 2019
எங்கப்பா மிடில் ஸ்டெம்ப்பு?
ஷமி ஓவரில் பிரம்மாண்ட சிக்ஸ் அடித்த பண்ட், அடுத்த பந்திலேயே மிடில் ஸ்டெம்ப் பறக்க போல்டாக, டெல்லி வெற்றிக்கு 20 பந்துகளில் 23 ரன்கள் தேவை... காலின் இங்ரம், க்ரிஸ் மோரிஸ் களத்தில்...
23:20 (IST)01 Apr 2019
தம்பி நீங்க ஃபெயில்
முஜீப்-உர் ரஹ்மான் ஓவரை, இந்த சீசனில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சாத்தி வருகின்றனர். கடந்த சீசனில், நல்ல எஃபக்ட் காட்டிய முஜீப், இதுவரை இந்த சீசனில் ஃ பெயில் என்றே சொல்ல வேண்டும். இப்போது கூட, இங்ரமும், ரிஷப் பண்ட்டும் தாளித்து வருகின்றனர்.
23:11 (IST)01 Apr 2019
உயிரை விட்டு பாடுபடும் வில்ஜோன்
தென்னாப்பிரிக்க பவுலரான வில்ஜோன், எப்படியாவது தேசிய அணியில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் பிரிமீயர் லீக், வங்கதேச பிரீமியர் லீக், இந்தியன் பிரீமியர் லீக் என படாதபாடு பட்டு வருகிறார். ஆனால், மனுஷன் ஞாயஸ்தான்.. தான் சார்ந்திருக்கும் அணிக்காக, உயிரைவிட்டு சிறப்பாக போராடுகிறார்.
வாழ்த்துகள் வில்ஜோன்...
பி.கு - இவர் தென்.ஆ., அணிக்காக இதுவரை ஒரேயொரு சர்வதேச போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார்.
23:06 (IST)01 Apr 2019
ஃபோகஸில் ப்ரீத்தி ஜிந்தா
இந்த சீசனில் பஞ்சாப் போட்டிகளில் தலை காட்டாமல் இருந்த நடிகையும், அந்த அணியும் துணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, இன்றைய போட்டியில் 'களமிறங்க' கேமராக்கள் அவரை ஃபோகஸ் செய்யாமல் இருக்குமா?
22:59 (IST)01 Apr 2019
தவான் அவுட்
நம்ம கணிப்பு கண்ணாயிரம் சொல்லி முடிக்கல... அதுக்குள்ளே அஷ்வின் ஓவரில் ஷிகர் தவான் அவுட்.. 30 ரன்களில் அவர் வெளியேற, கோலின் இங்ரம் களத்தில்....
22:48 (IST)01 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்...
அண்ணே... வெல்கம்... அடிக்கடி வர்றீங்களே-னு கேட்டதுக்கு இவ்ளோ லேட்டா-வா வர்றது!?
கஷ்டம் பா... இன்னும் 90 ரன்கள் அடிக்கணும்... அதுக்கு இவங்க ரெண்டு பேருல ஒருத்தராவது 16 ஓவர் வரை நின்னே ஆகணும்.. காலிங் இங்ரம்-கிட்ட கண்சிஸ்டன்ஸி கிடையாது. அவன் அடிச்சா யோகம்... இல்லாட்டி போவேண்டியது தான்.. ஸோ, இந்த பார்ட்னர்ஷிப் அட்லீஸ்ட் 15 ஓவர் நின்னா பெட்டர்.
22:39 (IST)01 Apr 2019
ஸ்டெம்ப்புகள் சிதற...
வில்ஜோன் பந்துகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களில், ஆஃப் அன்ட் மிடில் ஸ்டெம்ப்புகள் சிதற போல்டானார். களத்தில் ரிஷப் பண்ட்.
22:30 (IST)01 Apr 2019
49-1
டெல்லி கேபிடல்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.
22:20 (IST)01 Apr 2019
முகம் காட்டாத முகமது ஷமி
இதுவரை மூன்று ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆடியுள்ளது. மூன்றிலும், முகமது ஷமியும் பந்து வீசியிருக்கிறார். ஆனால், சில தருணங்களை தவிர, அவரது பவுலிங்கில் பெரிய த்ரெட் இருப்பதாக தெரியவில்லை. அதற்காக ரன்களை வாரி இறைக்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால், ஷமி வந்தால் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஜெர்க் ஆவதில்லை. உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு, அவர் இன்னும் தனது பவுலிங்கில் பெப்பர் தூவினால் நல்லது!.
22:13 (IST)01 Apr 2019
களத்தில் ஐயர்...
ப்ரித்வி அவுட்டான பிறகு, டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியுள்ளார். இந்த தொடரில், ஐயரின் பேட்டிங் குறை சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், ஒரு பெரிய இன்னிங்ஸ் அவரால் கொடுக்க முடியவில்லை. இன்று, மேட்ச் வின்னிங் பெர்ஃபாமான்ஸ் கொடுப்பாரா?
22:07 (IST)01 Apr 2019
Mr.99 அவுட்
கொல்கத்தாவுக்கு எதிராக 99 ரன்கள் விளாசிய ப்ரித்வி ஷா, அஷ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கீப்பர் கேட்ச் ஆனார். கமான் அஷ்வின்!!
21:58 (IST)01 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்
சந்தோஷம் பா... சந்தோஷம்... பஞ்சாப் 167 அடிச்சது உண்மையிலேயே ஆச்சர்யம் தான். நா ஒரு 140 தான் அடிப்பாங்க-னு நினைச்சேன்... பட், சர்ஃபரஸ் என் கணிப்பை கொஞ்சம் தவறாக்கிட்டார். பட், எனிவே... ஐ ஆம் ஹாப்பி...
மந்தீப் சிங்கை குறைவாக எடைப் போட்டு லூஸ் பந்துகளை ரபாடா வீச, 19.5வது பந்தை பவுண்டரிக்கும், 19.6வது பந்தை சிக்சருக்கும் விளாச, ரபாடா முகத்தில் ஈயாடியதை மொஹாலி பார்த்தது.
21:42 (IST)01 Apr 2019
அஷ்வின் போல்ட்
டெய்ல் என்டர்ஸ் கொஞ்சமாவது அடிங்கப்பா... இப்படி பண்ணா எப்படி? அஷ்வின் 3 ரன்னில், க்ரிஸ் மோரிஸ் ஓவரில், தனது இடது ஸ்டெம்ப்பை பறிகொடுத்தார்.
அஷ்வின்.... இன்னைக்கு ஒரு மான்கட் பூஜை போட்டுட வேண்டியது தான்
21:39 (IST)01 Apr 2019
வில்ஜோன் அவுட்
அட்லீஸ்ட் ஒரு சிக்ஸராவது பறக்கவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வில்ஜோன், ரபாடா ஓவரில், ஒரு ரன்னில் கேட்ச் ஆனார்.
ஆர்ச்சர்-லாம் என்னா அடி அடிக்குறான்... கொஞ்சூண்டாவது அடிக்க முயற்சி பண்ணுயா!!
21:28 (IST)01 Apr 2019
மில்லர் அவுட்
க்ரிஸ் மோரிஸ் ஓவரில் 43 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மில்லர், டாப் எட்ஜ் ஆனதால் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பஞ்சாபின் கடைசி நம்பிக்கை பறிபோனது
21:26 (IST)01 Apr 2019
136-4
16 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.
21:16 (IST)01 Apr 2019
சர்ஃபரஸ் அவுட்
சந்தீப் லமிச்சனே ஓவரில், நல்ல ஃபார்மில் ஆடிக் கொண்டிருந்த சர்ஃபரஸ் கான் 39 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆனார். உண்மையில் சர்ஃபரஸ் ஆட்டம் மெச்சத்தக்கது.
21:04 (IST)01 Apr 2019
சர..சர...சர்ஃபரஸ் கான்
பரவாயில்லையே! என்று சொல்லும் அளவிற்கு சர்ஃபரஸ் கான் சிறப்பாக ஆடி வருகிறார். ராகுல், மாயங்க் போன்ற முக்கிய தலைகள் வீழ்ந்த பிறகு, சர்ஃபரஸ் வெளிப்படுத்தும் இந்த ஆட்டம், நிச்சயம் பஞ்சாப்புக்கு ஒரு பூஸ்ட் தான்.
20:50 (IST)01 Apr 2019
75/3
9 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
20:42 (IST)01 Apr 2019
இப்போ புரியுதா அஷ்வின் மன்காட் ஏன் பண்ணார்-னு?
இப்படியெல்லாம்மா அவுட்டாவீங்க?... 7.1வது ஓவரை ஹர்ஷல் படேல் வீச, சர்ஃபரஸ் கான் அதனை ஷிகர் தவானிடம் அடிக்கிறார். அப்போது எதிர்முனையில், நின்றிருந்த மாயங்க் அகர்வால், 4 ஸ்டெப் முன்னால் நிற்க, தவான் ஸ்டெம்ப்பை நோக்கி த்ரோ செய்ய, ஊதப்பட்டது சங்கு!. இதுக்கு தான், பவுலர் போடுறதுக்கு முன்னாடியே, கிரீஸை தாண்டி ஆர்வத்தில் போகக் கூடாதுன்னு சொல்றது!.
20:31 (IST)01 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்
இப்பவும் சொல்றேன்... பஞ்சாப்பை இனிமே காக்கப் போறது ரெண்டே பேரு தான்.. மாயங்க் அகர்வால், டேவிட் மில்லர். இந்த ரெண்டு பேரும் இன்னைக்கு தலைக்கு 50 அடிச்சே ஆகணும். எக்ஸ்ட்ரா ஸ்கோர் பஞ்சாப் அதிர்ஷ்டத்தை பொறுத்து.
என்னண்ணே... இன்னைக்கு அடிக்கடி கிராஸ் ஆகுறீங்க?
நம்ம அஷ்வின் கேப்டன்-பா... தமிழன்டா....
20:25 (IST)01 Apr 2019
சாம் குர்ரன் அவுட்!
சந்தீப் லமிச்சனே ஓவரில் ஸ்ட்ரெய்ட்டில் சூப்பர் சிக்ஸ் ஒன்றை அடித்த சாம், அடுத்த பந்தில் எல்பி ஆனார். பஞ்சாப் இழந்த இரு விக்கெட்டும் முதலில் சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் அவுட்டாகியுள்ளனர்.
எவனோ சூனியம் வச்சிருக்கான்!!
20:12 (IST)01 Apr 2019
ராகுல் அவுட்... 25% லாஸ்
க்ரிஸ் மோரிஸ் ஓவரில் ஃபைன் லெக்-ல் அபார சிக்ஸ் அடித்த லோகேஷ் ராகுல், அடுத்த பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார். தனது முதல் துருப்புச் சீட்டை இழந்தது பஞ்சாப். அதாவது, இங்கேயே 25 % தோற்றுவிட்டது இப்போட்டியை.
20:01 (IST)01 Apr 2019
களத்தில் ராகுல், சாம் குர்ரன்
பஞ்சாப் ஓப்பனர்கள் லோகேஷ் ராகுல், சாம் குர்ரன் களமிறங்கியுள்ளனர்.
இந்த சாம் குர்ரன் யார் தெரிகிறதா?
கடந்தாண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் அடி வாங்கியதே... அந்த அடிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் இவர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்தியாவை ரொம்பவே சோதித்தார்.
19:53 (IST)01 Apr 2019
எங்கயா கெயிலு?
பஞ்சாப் அணியின் க்ரிஸ் கெயில் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில், சாம் குர்ரன் களமிறக்கப்பட்டுள்ளார். கெயிலின் ஆட்டத்திற்கு என்றே தனி கூட்டம் டிவி முன் உட்காரும். ஆனால், கெயில் இல்லாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெயில் இல்லாமல், டெல்லியின் சரவெடியை சமாளிக்குமா பஞ்சாப்?
19:48 (IST)01 Apr 2019
பஞ்சாப் பிளேயிங் XI
லோகேஷ் ராகுல்(w), மாயங்க் அகர்வால், டேவிட் மில்லர், சர்ஃபரஸ் கான், மந்தீப் சிங், ஹர்டஸ் வில்ஜோன், சாம் குர்ரன், ரவிச்சந்திரன் அஷ்வின்(c), முருகன் அஷ்வின், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான்
டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஸோ, கெயில், ராகுல் இணை களமிறங்க காத்திருக்கிறது.
19:29 (IST)01 Apr 2019
வெல்லப் போவது யார்?
கணிப்பு கண்ணாயிரம் அண்ணே... நம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் சொத்தே... இன்னைக்கு ஜெயிக்கப் போவது யார்? சொல்லுங்கோ...
இந்த மேட்ச் Predict பண்றது ரொம்ப கஷ்டம் தம்பி.. பட், இருந்தாலும் சொல்றேன்...
பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்து லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், மில்லர்... இவங்க மூணு பேரும் கணிசமான ரன்கள் அடித்தால் பஞ்சாப் வெற்றிப் பெற வாய்ப்பு இருக்கு. இல்ல... டெல்லி முதலில் பேட்டிங் செய்து 180+ அடிச்சா, வெற்றிக்கு முயற்சிக்கலாம். கெயில் Exception
நீ என்னபத்தி என்ன சொல்லிருப்பனு தெரியும்... அதைவிடு... ஒரு எக்ஸ்க்ளூசிவ் விஷயம் சொல்றேன் கேளு...
என்னதுன்னே...
அஷ்வின், தனது அணி சகாக்களை கொஞ்சம் கடுமையாக எச்சரித்து இருக்கிறாராம். டிரெஸ்சிங் ரூமில் பேசிய அவர், இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடலனாலும், பின் விளைவுகளை நினைத்து வருந்தக் கூடாது என சொல்லியுள்ளாராம்.
என்ன பண்ணுவீங்களோ, எப்படி விளையாடுவீங்களோ, எனக்கு தேவை வெற்றி-ன்னு சொல்லியிருப்பதாக காற்று வாக்கில் நமக்கு தகவல் கிடைத்தது.
அண்ணே.. உண்மையா தான் சொல்றியா? இல்ல.... டீ குடிச்சப்ப யோசிச்சியா?
18:51 (IST)01 Apr 2019
இதோ வந்துட்டோம்ல...
வணக்கம், வணக்கம் நண்பர்களே! இதோ, உங்களுக்காக ஐஇ தமிழின் பிரத்யேக ஐபிஎல் லைவ் கிரிக்கெட் அப்டேட்ஸ்... சாரி இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.... உங்கள் ஃபேவரைட் கணிப்பு கண்ணாயிரம் வண்டியில் வந்துக் கொண்டே இருக்கிறார். டிராஃபிக்-ல மாட்டிக்கிட்டாராம். கத வுடுவாருங்க... எங்கயாச்சும் ஒதுங்கி டீ குடிச்சிக்கிட்டு இருக்கும் பெருசு...
இப்படியொரு சொதப்பலை வேறு எங்காவது பார்த்ததுண்டா!! டெல்லி அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 17 பந்துகளில் இழந்திருக்கிறது. ஒரு ஹாட்ரிக் உட்பட... ஷமி, சாம் குர்ரன் ஆகிய இந்த இரு பவுலர்களும், டெல்லியின் ஓவர் கான்ஃபிடன்ட்டை சுக்கு நூறாக உடைத்து எறிந்துள்ளனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட, ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய சாம் குர்ரன், பஞ்சாப் வெற்றியை அட்டகாசமாக தீர்மானித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் டெல்லி 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோற்றது.
நாம சொன்னது ஷமி-க்கு கேட்டுடுச்சோ என்னமோ! பண்ட் ஸ்டெம்ப்பை பிடுங்கியவர், இப்போது ஹனுமா விஹாரியின் மிடில் மற்றும் லெக் ஸ்டெம்புகளை பிடுங்கி எறிந்திருக்கிறார். வெறும் 2 ரன்களில் ஹனுமா பெவிலியன் திரும்பினார்.
சாம் குர்ரன் வீசிய 18வது ஓவரில் காலின் இங்ரம் 38 ரன்னிலும், ஹர்ஷல் படேல் ௦ ரன்னிலும் அவுட்டாக கடந்த 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்திருக்கிறது டெல்லி... அடக் கடவுளே!
வாவ்.. அடுத்த அதிரடி... ஷமி ஓவரில், க்ரிஸ் மோரிஸ் தட்டிவிட்டு சிங்கிள் ஓட, நம்ம ரவிச்சந்திரன் அஷ்வினின் டேரக்ட் த்ரோ, துல்லியமாக ஸ்டெம்ப்பை தாக்க, மோரிஸ் அப்படியே ஓடியபடியே பெவிலியன் சென்றுவிட்டார். 2 இன் டூ...
ஷமி ஓவரில் பிரம்மாண்ட சிக்ஸ் அடித்த பண்ட், அடுத்த பந்திலேயே மிடில் ஸ்டெம்ப் பறக்க போல்டாக, டெல்லி வெற்றிக்கு 20 பந்துகளில் 23 ரன்கள் தேவை... காலின் இங்ரம், க்ரிஸ் மோரிஸ் களத்தில்...
முஜீப்-உர் ரஹ்மான் ஓவரை, இந்த சீசனில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சாத்தி வருகின்றனர். கடந்த சீசனில், நல்ல எஃபக்ட் காட்டிய முஜீப், இதுவரை இந்த சீசனில் ஃ பெயில் என்றே சொல்ல வேண்டும். இப்போது கூட, இங்ரமும், ரிஷப் பண்ட்டும் தாளித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க பவுலரான வில்ஜோன், எப்படியாவது தேசிய அணியில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் பிரிமீயர் லீக், வங்கதேச பிரீமியர் லீக், இந்தியன் பிரீமியர் லீக் என படாதபாடு பட்டு வருகிறார். ஆனால், மனுஷன் ஞாயஸ்தான்.. தான் சார்ந்திருக்கும் அணிக்காக, உயிரைவிட்டு சிறப்பாக போராடுகிறார்.
வாழ்த்துகள் வில்ஜோன்...
பி.கு - இவர் தென்.ஆ., அணிக்காக இதுவரை ஒரேயொரு சர்வதேச போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார்.
இந்த சீசனில் பஞ்சாப் போட்டிகளில் தலை காட்டாமல் இருந்த நடிகையும், அந்த அணியும் துணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, இன்றைய போட்டியில் 'களமிறங்க' கேமராக்கள் அவரை ஃபோகஸ் செய்யாமல் இருக்குமா?
நம்ம கணிப்பு கண்ணாயிரம் சொல்லி முடிக்கல... அதுக்குள்ளே அஷ்வின் ஓவரில் ஷிகர் தவான் அவுட்.. 30 ரன்களில் அவர் வெளியேற, கோலின் இங்ரம் களத்தில்....
அண்ணே... வெல்கம்... அடிக்கடி வர்றீங்களே-னு கேட்டதுக்கு இவ்ளோ லேட்டா-வா வர்றது!?
என்னப்பா.. என்ன நிலைமை?
9 ஓவருக்கு 77/2... ரிஷப்பும், தவானும் களத்தில்-னே...
கஷ்டம் பா... இன்னும் 90 ரன்கள் அடிக்கணும்... அதுக்கு இவங்க ரெண்டு பேருல ஒருத்தராவது 16 ஓவர் வரை நின்னே ஆகணும்.. காலிங் இங்ரம்-கிட்ட கண்சிஸ்டன்ஸி கிடையாது. அவன் அடிச்சா யோகம்... இல்லாட்டி போவேண்டியது தான்.. ஸோ, இந்த பார்ட்னர்ஷிப் அட்லீஸ்ட் 15 ஓவர் நின்னா பெட்டர்.
வில்ஜோன் பந்துகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களில், ஆஃப் அன்ட் மிடில் ஸ்டெம்ப்புகள் சிதற போல்டானார். களத்தில் ரிஷப் பண்ட்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.
இதுவரை மூன்று ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆடியுள்ளது. மூன்றிலும், முகமது ஷமியும் பந்து வீசியிருக்கிறார். ஆனால், சில தருணங்களை தவிர, அவரது பவுலிங்கில் பெரிய த்ரெட் இருப்பதாக தெரியவில்லை. அதற்காக ரன்களை வாரி இறைக்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால், ஷமி வந்தால் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஜெர்க் ஆவதில்லை. உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு, அவர் இன்னும் தனது பவுலிங்கில் பெப்பர் தூவினால் நல்லது!.
ப்ரித்வி அவுட்டான பிறகு, டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியுள்ளார். இந்த தொடரில், ஐயரின் பேட்டிங் குறை சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், ஒரு பெரிய இன்னிங்ஸ் அவரால் கொடுக்க முடியவில்லை. இன்று, மேட்ச் வின்னிங் பெர்ஃபாமான்ஸ் கொடுப்பாரா?
கொல்கத்தாவுக்கு எதிராக 99 ரன்கள் விளாசிய ப்ரித்வி ஷா, அஷ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கீப்பர் கேட்ச் ஆனார். கமான் அஷ்வின்!!
சந்தோஷம் பா... சந்தோஷம்... பஞ்சாப் 167 அடிச்சது உண்மையிலேயே ஆச்சர்யம் தான். நா ஒரு 140 தான் அடிப்பாங்க-னு நினைச்சேன்... பட், சர்ஃபரஸ் என் கணிப்பை கொஞ்சம் தவறாக்கிட்டார். பட், எனிவே... ஐ ஆம் ஹாப்பி...
தப்பா கணிச்சுட்டு, என்னம்மா பிலடப் கொடுக்குது பாருங்க!!!
மந்தீப் சிங்கை குறைவாக எடைப் போட்டு லூஸ் பந்துகளை ரபாடா வீச, 19.5வது பந்தை பவுண்டரிக்கும், 19.6வது பந்தை சிக்சருக்கும் விளாச, ரபாடா முகத்தில் ஈயாடியதை மொஹாலி பார்த்தது.
டெய்ல் என்டர்ஸ் கொஞ்சமாவது அடிங்கப்பா... இப்படி பண்ணா எப்படி? அஷ்வின் 3 ரன்னில், க்ரிஸ் மோரிஸ் ஓவரில், தனது இடது ஸ்டெம்ப்பை பறிகொடுத்தார்.
அஷ்வின்.... இன்னைக்கு ஒரு மான்கட் பூஜை போட்டுட வேண்டியது தான்
அட்லீஸ்ட் ஒரு சிக்ஸராவது பறக்கவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வில்ஜோன், ரபாடா ஓவரில், ஒரு ரன்னில் கேட்ச் ஆனார்.
ஆர்ச்சர்-லாம் என்னா அடி அடிக்குறான்... கொஞ்சூண்டாவது அடிக்க முயற்சி பண்ணுயா!!
க்ரிஸ் மோரிஸ் ஓவரில் 43 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மில்லர், டாப் எட்ஜ் ஆனதால் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பஞ்சாபின் கடைசி நம்பிக்கை பறிபோனது
16 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.
சந்தீப் லமிச்சனே ஓவரில், நல்ல ஃபார்மில் ஆடிக் கொண்டிருந்த சர்ஃபரஸ் கான் 39 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆனார். உண்மையில் சர்ஃபரஸ் ஆட்டம் மெச்சத்தக்கது.
பரவாயில்லையே! என்று சொல்லும் அளவிற்கு சர்ஃபரஸ் கான் சிறப்பாக ஆடி வருகிறார். ராகுல், மாயங்க் போன்ற முக்கிய தலைகள் வீழ்ந்த பிறகு, சர்ஃபரஸ் வெளிப்படுத்தும் இந்த ஆட்டம், நிச்சயம் பஞ்சாப்புக்கு ஒரு பூஸ்ட் தான்.
9 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
இப்படியெல்லாம்மா அவுட்டாவீங்க?... 7.1வது ஓவரை ஹர்ஷல் படேல் வீச, சர்ஃபரஸ் கான் அதனை ஷிகர் தவானிடம் அடிக்கிறார். அப்போது எதிர்முனையில், நின்றிருந்த மாயங்க் அகர்வால், 4 ஸ்டெப் முன்னால் நிற்க, தவான் ஸ்டெம்ப்பை நோக்கி த்ரோ செய்ய, ஊதப்பட்டது சங்கு!. இதுக்கு தான், பவுலர் போடுறதுக்கு முன்னாடியே, கிரீஸை தாண்டி ஆர்வத்தில் போகக் கூடாதுன்னு சொல்றது!.
இப்பவும் சொல்றேன்... பஞ்சாப்பை இனிமே காக்கப் போறது ரெண்டே பேரு தான்.. மாயங்க் அகர்வால், டேவிட் மில்லர். இந்த ரெண்டு பேரும் இன்னைக்கு தலைக்கு 50 அடிச்சே ஆகணும். எக்ஸ்ட்ரா ஸ்கோர் பஞ்சாப் அதிர்ஷ்டத்தை பொறுத்து.
என்னண்ணே... இன்னைக்கு அடிக்கடி கிராஸ் ஆகுறீங்க?
நம்ம அஷ்வின் கேப்டன்-பா... தமிழன்டா....
சந்தீப் லமிச்சனே ஓவரில் ஸ்ட்ரெய்ட்டில் சூப்பர் சிக்ஸ் ஒன்றை அடித்த சாம், அடுத்த பந்தில் எல்பி ஆனார். பஞ்சாப் இழந்த இரு விக்கெட்டும் முதலில் சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் அவுட்டாகியுள்ளனர்.
எவனோ சூனியம் வச்சிருக்கான்!!
க்ரிஸ் மோரிஸ் ஓவரில் ஃபைன் லெக்-ல் அபார சிக்ஸ் அடித்த லோகேஷ் ராகுல், அடுத்த பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார். தனது முதல் துருப்புச் சீட்டை இழந்தது பஞ்சாப். அதாவது, இங்கேயே 25 % தோற்றுவிட்டது இப்போட்டியை.
பஞ்சாப் ஓப்பனர்கள் லோகேஷ் ராகுல், சாம் குர்ரன் களமிறங்கியுள்ளனர்.
இந்த சாம் குர்ரன் யார் தெரிகிறதா?
கடந்தாண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் அடி வாங்கியதே... அந்த அடிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் இவர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்தியாவை ரொம்பவே சோதித்தார்.
பஞ்சாப் அணியின் க்ரிஸ் கெயில் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில், சாம் குர்ரன் களமிறக்கப்பட்டுள்ளார். கெயிலின் ஆட்டத்திற்கு என்றே தனி கூட்டம் டிவி முன் உட்காரும். ஆனால், கெயில் இல்லாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெயில் இல்லாமல், டெல்லியின் சரவெடியை சமாளிக்குமா பஞ்சாப்?
லோகேஷ் ராகுல்(w), மாயங்க் அகர்வால், டேவிட் மில்லர், சர்ஃபரஸ் கான், மந்தீப் சிங், ஹர்டஸ் வில்ஜோன், சாம் குர்ரன், ரவிச்சந்திரன் அஷ்வின்(c), முருகன் அஷ்வின், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான்
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(c), ரிஷப் பண்ட்(w), கோலின் இங்ரம், ஹனுமா விஹாரி, ஹர்ஷல் படேல், க்ரிஸ் மோரிஸ், சந்தீப் லமிச்சனே, காகிசோ ரபாடா, ஆவேஷ் கான். (ரொம்ப ஆவேசமா இருப்பாரோ!)
டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஸோ, கெயில், ராகுல் இணை களமிறங்க காத்திருக்கிறது.
கணிப்பு கண்ணாயிரம் அண்ணே... நம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் சொத்தே... இன்னைக்கு ஜெயிக்கப் போவது யார்? சொல்லுங்கோ...
இந்த மேட்ச் Predict பண்றது ரொம்ப கஷ்டம் தம்பி.. பட், இருந்தாலும் சொல்றேன்...
பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்து லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், மில்லர்... இவங்க மூணு பேரும் கணிசமான ரன்கள் அடித்தால் பஞ்சாப் வெற்றிப் பெற வாய்ப்பு இருக்கு. இல்ல... டெல்லி முதலில் பேட்டிங் செய்து 180+ அடிச்சா, வெற்றிக்கு முயற்சிக்கலாம். கெயில் Exception
அண்ணே... வாண்ணே... இப்போதான் உன்ன பத்தி மக்கள்-ட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்... அதுக்குள்ளே நீயே வந்துட்ட...