IPL 2019 MI vs KXIP: ஐபிஎல் 2019 தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.
Live Blog
IPL 2019: MI vs KXIP
30 பந்துகளில் 63 ரன்கள் தேவை மும்பைக்கு வெற்றிப் பெற... ஆனால், ஹர்திக் பாண்ட்யாவோ 13 ரன்களில் 19 ரன்கள் மட்டும் எடுத்து ஷமி ஓவரில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இவன் என்ன அவுட்டாகிட்டு குரங்கு சேட்டையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான்!!?
'மும்பை இப்படியே ஆடுனா நிச்சயம் ஜெயிச்சிடும்-னு சொல்லி, நன்னா ஆடிக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ்வை 21 ரன்களில் காலி செய்துள்ளார் மிஸ்டர் கணிப்பு. அதுமட்டுமின்றி, அஷ்வின் ஓவரில், டி காக்-கையும் 24 ரன்களில் வெளியேற்றி இருக்கிறார் நம் எமகண்டம் அண்ணன் கணிப்பு கண்ணாயிரம் அவர்கள்...
சூர்யகுமார், டி காக் அவுட்
தெய்வமே வாங்க...
கண்ணாயிரம் - இப்போதுள்ள நிலைமைக்கு (54-1) மும்பை ஜெயிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கு. பொல்லார்ட், ஹர்திக், க்ருனால் என்று பிக் ஹிட்டர்ஸ் அந்த அணியில் இருக்காங்க... பவர்ஃபுல் லோ ஆர்டர் வச்சிருக்குற டீம் அது... ஸோ, இப்பவே விக்கெட் எடுக்காதொழிய, கடைசியில கன்டெய்ன் பண்ணிக்கலாம்-னு நினைச்ச கண்டம் தான்.
மும்பை - 60%
பஞ்சாப் - 40%
என்னண்ணே... இந்த ஏரியாவுலயே உங்களை ரொம்ப நேரமா காணோம்?
கண்ணாயிரம் - யோவ்... சும்மா என்னையே நோண்டிக்கிட்டு... என் Prediction-ஐ கேளுயா... இந்த 198 எனும் சேஸிங் மும்பைக்கு ஒன்னும் டஃப் தராது. ஆனால், நல்ல ஸ்டார்ட் கொடுக்கணும். 10 ஓவருக்கு 62-1 ன்னு இருந்தா கூட, மும்பை ஜெயிச்சிடும்... அம்புட்டு தான்!!
என்னமோ தெரில... கொஞ்ச நேரம் ஹை பிபி வந்தது மாதிரி அப்படியே கெயில் குத்த வச்சு உட்கார்ந்து இருந்தாப்ல... கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டு அடிச்சப்போ, முதல் பந்திலயே கேட்ச் ஆனார். பெஹ்ரேன்டோர்ஃப் ஓவரில் 36 பந்துகளில் 63 ரன்கள் விளாசிய கெயில் அவுட்... ஆடியன்ஸ் சேட்...
அல்சாரி ஓவரில், லோகேஷ் ராகுல் ஒரு சிக்ஸ் அடிச்சதுக்கே, அல்சாரிக்கு ஓடி வந்து ஆறுதல் சொன்னார் ஹர்திக் பாண்ட்யா.. ஆனால், இப்போது பாண்ட்யா ஓவரை கெயில் சிக்ஸர், பவுண்டரி என விளாச, பும்ரா வந்து அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கடைசி 2 டாட் பால் சேர்த்து, ஹர்த்திக்கின் 9வது ஓவரில் 17 ரன்கள்.
2018ல் நடந்த மெகா ஐபிஎல் ஏலத்தில், க்ரிஸ் கெயிலை யாருமே சீண்டவில்லை. இறுதி தடவையாக கேட்ட போதும் யாருமே அவரை எடுக்க முன் வராத போது, அவரது அடிப்படை விலையான 1 கோடிக்கே, ப்ரீத்தி ஜிந்தா வாங்கினார். ஒரு பொன் முட்டையிடும் வாத்தை ஒரு கோடிக்கு வாங்கிய அந்த மகாலட்சுமிக்காக, இன்று அடித்து பொளந்து கொண்டிருக்கிறார் அண்ணன் கெயில்.
அல்சாரி ஓவரில் லோகேஷ் ராகுல் ஒரு சிக்ஸு தான் அடிச்சாப்ல... அதுக்கே பொல்லார்ட் என்னமோ முறைக்குறார்... ஹர்திக் பாண்ட்யா வந்து ஆறுதல் சொல்றார்... என்னடா நடக்குது இங்க? ஒரு சிக்ஸுகே ஒரு டீம் இவ்ளோ பிரஷர் ஆகுதா? இப்போ தான் ஹர்பஜன் சொன்னது கரெக்ட்-னு புரியுது!!
ஒரு மெகா அதிரடி ஜோடி, எப்போதும் ஸ்லோ ஸ்டார்ட் செய்கிறது என்றால் அது கெயில், லோகேஷ் ராகுல் ஜோடி தான். தனது ரியல் வெயிட்டேஜ் என்ன என்பதை லோகேஷ் ராகுலே இன்னும் முழுமையாக அறியாமல் இருந்து நம்மை டென்ஷனாக்க, எல்லாம் தெரிந்த க்ரிஸ் கெயிலும், இன்னிங்சை தொடக்க ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என தெரியவில்லை.
மும்பை அணியில், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக களமிறங்கி இருப்பவர் சித்தேஷ் லட். இவரது தந்தை தினேஷ் லட் தான் ரோஹித் ஷர்மாவின் கோச் என்பது சுவாரஸ்ய தகவல். 2015 முதல் மும்பை அணியில் வாய்ப்பே கிடைக்காமல் அமர்ந்திருந்த சித்தேஷுக்கு, நான்கு வருடங்கள் கழித்து இன்று வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அண்ணே வணக்கம்ணே.... என்னண்ணே... நேற்று சென்னை மேட்சுல பேயடிச்ச மாதிரி உட்கார்ந்திருந்த நம்ம அட்லி மாதிரி ஆயிட்டீங்க...
கண்ணாயிரம் - அட... மதியம் துணி காய போட வெளில வந்தேன்பா... அந்த மூணு நிமிஷம் கேப்புல, வெயில் பண்ணின் கோலம் இது... சரி அதை விடு... ஒரு உண்மை சொல்லட்டுமா? இந்த மேட்சுல சந்தேகமே இல்லாம ஜெயிக்கப் போறது மும்பை இந்தியன்ஸ் தான்.
என்னண்ணே.. பொசுக்கு-ன்னு மேட்ச் முடிவையே சொல்லிட்டீங்க!!?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights