மும்பை வெற்றி! அறிமுக பவுலர் அல்சாரியிடம் டோட்டலாக சரண்டரான ஹைதராபாத்

MI vs SRH: மும்பை வெற்றி

IPL 2019 MI vs SRH Live Score Updates

IPL 2019 MI vs SRH: ஐபிஎல் 2019 தொடரில், ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க – பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. தோனி அதிரடி… அதிர்ந்த சேப்பாக்

IE Tamil commentary

Indian Premier League, 2019Rajiv Gandhi International Stadium, Hyderabad 09 April 2020

Sunrisers Hyderabad 96 (17.4)

vs

Mumbai Indians 136/7 (20.0)

Match Ended ( Day - Match 19 ) Mumbai Indians beat Sunrisers Hyderabad by 40 runs

Live Blog

IPL 2019: MI vs SRH

23:29 (IST)06 Apr 2019
போன் கால் ஃப்ரம் மலிங்கா...

மலிங்கா - நா அடுத்தா மேட்சுல கலந்துக்க மும்பை வரேன் ஓவர்...ஓவர்...

மும்பை அணி - நீங்க இலங்கையிலேயே இருக்கலாம் ஓவர்..ஓவர்..

23:27 (IST)06 Apr 2019
மும்பை வெற்றி

ஹைதராபாத் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களில் சுருண்டது. மும்பையின் அணியின் அறிமுக பவுலர் அல்சாரி ஜோசப் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒட்டுமொத்த ஹைதராபாத் அணிக்கும் சரிவை ஏற்படுத்தி அசத்தியுள்ளார். 

23:20 (IST)06 Apr 2019
சுருண்டது சன் ரைசர்ஸ்...

ஒரு ஓரத்தில் நம்பிக்கையாய் இருந்த முகமது நபி, பும்ரா ஓவரில் 11 ரன்களில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

ஐஇ தமிழ் அப்போதே சொன்னது... ஹைதராபாத்தின் மிடில் ஆர்டர் மிக பலவீனமாக இருக்குதுன்னு.. கேட்டாத் தானே!

23:15 (IST)06 Apr 2019
ரஷித் கான் அவுட்...

அடப் போங்கப்பா... ரஷித் கான் அவுட். அல்சாரியின் அதே ஓவரில் அடுத்த விக்கெட்டாக 0 ரன்களில் வெளியேறினார். 

23:10 (IST)06 Apr 2019
ஹூடா அவுட்

வாய்ப்புகளை பயன்படுத்துபவனே ஹீரோ ஆகிறான். அது ஹூடாவுக்கு வாய்க்கவில்லை. அல்சாரி ஜோசப் ஓவரில் 20 ரன்களில், ஸ்டெம்ப்புகள் சிதற தீபக் ஹூடா போல்டானார். 

23:07 (IST)06 Apr 2019
சிக்ஸ்...

வாவ்... பும்ரா வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தில், முகமது நபி லாங் ஆஃப்-ல் ஒரு ஸ்மார்ட் சிக்ஸ் அடித்து, மும்பைக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார். 

22:59 (IST)06 Apr 2019
தட்டி தட்டி கூட ஜெயிக்கலாம்..

ஹைதராபாத் அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. 

22:51 (IST)06 Apr 2019
பதான் அவுட்

சாஹர் ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற யூஸுப் பதான், டாப் எட்ஜ் ஆக, 0 ரன்னில் அவுட்டானார்.

22:48 (IST)06 Apr 2019
பாண்டே அவுட்

இதுவரை ஓர் லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் வாய்ப்புகள் கொடுத்தாச்சு மனீஷ் பாண்டே.....  முடியல... 

பெஹ் ஓவரில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து 16 ரன்களில் வெளியேறினார் மனீஷ் பாண்டே. 

22:45 (IST)06 Apr 2019
வாய்ப்பை வீணடித்த விஜய்...

தளபதி பேன்ஸ் சண்டைக்கு வர வேண்டாம்... நான் சொன்னது விஜய் ஷங்கரை... 

டார்கெட் வெறும் 137 தான்... ஆரம்பமே இரண்டு  விக்கெட்... பேட்டிங் திறமையை நிரூபிக்க அருமையான வாய்ப்பு இது. தோனியை விட மிக பொறுமையாக தட்டி தட்டி, கடைசி 5 அல்லது 4 ஓவர்களில் ஷாட்களை விளாசியிருந்தால், தன் கிரிக்கெட்டில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பார். 

யாரோ, அவர் ஆழ் மனசுல, நீ பெரிய அதிரடி பேட்ஸ்மேன்-னு நம்ப வச்சி நல்லா ஏமாற்றி இருக்காய்ங்க...

22:34 (IST)06 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்...

நா முன்னவே சொல்லிட்டேன். இது ஒரு டஃப் மேட்ச்-னு... ரோஹித்தின் அருமையான கள வியூகம், கேப்டன்சி.. ஹைதராபாத்தை இப்போதே பாடுபடுத்துகிறது. சன் ரைசர்சின் மிடில் ஆர்டர் படு மோசம். ஒருவேளை மனீஷ் பாண்டேவோ அல்லது யூஸுப் பதானோ அல்லது ரஷித் கானோ சிறப்பாக ஆடினால், வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

22:31 (IST)06 Apr 2019
விஜய் ஷங்கர் அவுட்

இல்லாத ஃபார்முக்கு கொஞ்சம் அதிகமாகவே துடிப்பு காட்டிக் கொண்டிருந்த விஜய் ஷங்கர், அல்சாரி ஜோசப் ஓவரில், ஒரு அருமையான குட் லென்த் பந்தில், ஒரு மட்டமான வலிமையே இல்லாத புல் ஷாட் அடித்து 5 ரன்களில் கேட்ச் ஆனார்.

22:24 (IST)06 Apr 2019
வார்னர் போல்ட்

வெஸ்ட் இண்டீஸ் பவுலர் அல்சாரி ஜோசப் வீசிய முதல் பந்திலேயே, டேவிட் வார்னர் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். அதேபோல், விஜய் ஷங்கர் கொடுத்த மிக எளிதான கேட்சை பொல்லார்ட் கோட்டைவிட, கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த ஹைதராபாத் ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.

22:15 (IST)06 Apr 2019
ஜானி ஷோ ரத்து

சாத்துமுறை வீரர் ஜானி பேர்ஸ்டோ சாஹர் ஓவரில், 16 ரன்களில் கேட்ச் ஆனார். 

அப்புறம் இன்னைக்கு ஜானி ஷோ வெல்லாம் கிடையாது... பிரஷாந்த் நடிச்ச 'ஜானி' படம் வேணும்னா போய் பாரு..கெளம்பு, கெளம்பு

22:12 (IST)06 Apr 2019
கலகலத்த பெஹ்ரன்டோர்ஃப்

சென்னைக்கு எதிரான போட்டியில், பவுன்ஸ் ஆடுகளத்தை பயன்படுத்தி, சிஎஸ்கே-வை பாடுபடுத்திய அதே பெஹ்ரன்டோர்ஃப்பின் ஒரே ஓவரில், 3 பவுண்டரிகள் விளாசப்பட்டது. 

அண்ணே.. அப்படி ஓரமான போங்க...

22:05 (IST)06 Apr 2019
கடும் சவால் காத்திருக்கு!

137 என்ற லோ டார்கெட் கேமாக இருந்தாலும், இந்தப் போட்டி நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. மலிங்கா இருந்திருந்தா இன்னும் கார சாரமான ஆட்டத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கும். 

21:57 (IST)06 Apr 2019
நம்பர்.1 ஓப்பனிங் ஜோடி களத்தில்...

நடப்பு ஐபிஎல் சீசனில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சன் ரைசர்ஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் இருப்பவர் மற்றொரு சன் ரைசர்ஸ் ஓப்பனர் ஜானி பேர்ஸ்டோ... இந்த அதி பயங்கர ஜோடியை பிரிப்பதே மும்பைக்கு பெரும் சவால் தான். ஆனால், பிரித்துவிட்டால் மும்பை சவால் அளிக்க முடியும்.

21:43 (IST)06 Apr 2019
137 ரன்கள் இலக்கு...

கடைசி இரு ஓவர்களில் பொல்லார்ட் காட்டிய அதிரடியால், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. 

பொல்லார்ட் 26 பந்துகளில் 46

21:41 (IST)06 Apr 2019
20.0

பொல்லார்ட் - 4

21:41 (IST)06 Apr 2019
19.5

பொல்லார்ட் - 6

21:40 (IST)06 Apr 2019
19.4

பொல்லார்ட் - 2

21:39 (IST)06 Apr 2019
19.3

பொல்லார்ட் - 0

21:39 (IST)06 Apr 2019
19.2

பொல்லார்ட் - 2 ரன்

21:38 (IST)06 Apr 2019
19.1

பொல்லார்ட் - 4

21:38 (IST)06 Apr 2019
19.1 புவனேஷ் குமார்

பொல்லார்ட் - வைட்

21:36 (IST)06 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே.. மும்பை 150 அடிக்கும்-னு சொன்னீங்களே.... இது என்ன கூத்து!?

ஆமா.... ஓவருக்கு ஒரு விக்கெட் விழுந்தா, எவனாலும் கணிப்பு சொல்ல முடியாது.

21:28 (IST)06 Apr 2019
ஹர்திக் பாண்ட்யா அவுட்...

ரஷித் கான் ஓவரில், மெகா சிக்ஸ் அடித்த ஹர்திக் பாண்ட்யா, அதே ஓவரில் சிக்ஸ் லைனில் விஜய் ஷங்கரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் வெளியேற, மும்பை 120-தாவது அடிக்குமா என் சந்தேகம் எழுந்துள்ளது.

21:21 (IST)06 Apr 2019
ஹர்திக், பொல்லார்ட் களத்தில்

ஐபிஎல் தொடரில் மிகவும் அபாயகரமான ஹிட்டர்களான ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் தான் மும்பையின் கடைசி நம்பிக்கை. இவ்விருவரும் இறுதி வரை நின்றால், 150 நிச்சயம். ஒருவர் நின்றால், 140+ நிச்சயம்...

21:10 (IST)06 Apr 2019
இஷான் கிஷன் அவுட்

கொடுக்குற ஒவ்வொரு அப்டேட்டும் அவுட்டா இருந்தா என்ன பண்றது? வொர்ஸ்ட் பேட்டிங்கில் மும்பை.. விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவால், 17 ரன்களில் இஷான் கிஷன் ரன் அவுட் செய்யப்பட்டார்.

20:59 (IST)06 Apr 2019
கருனால் அவுட்

சித்தார்த் கவுல் ஓவரில், க்ருனால் பாண்ட்யா 6 ரன்களில் கேட்ச் ஆனார். என்ன கணிப்பு அண்ணே... மும்பை ராஜ்ஜியம் சரிகிறதே...

கரெக்ட் தான்... 63/4 என்பது மிக மோசமான நிலை.... பொல்லார்ட், ஹர்திக் இந்த ஆட்டத்தில் ஜொலிப்பது கடினம்,

20:54 (IST)06 Apr 2019
52/3

10 ஓவர்கள் முடிவில், மும்பை இந்தியன்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. 

ரோஹித், சூர்யகுமார், டி காக் அவுட்

க்ருனால், இஷான் கிஷன் களத்தில்...

20:42 (IST)06 Apr 2019
டி காக் அவுட்...

ஹியூஜ் விக்கெட்.. டி காக் 19 ரன்களில், சித்தார்த் கவுல் ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்று, தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தனது 3வது விக்கெட்டை இழந்தது மும்பை.

20:29 (IST)06 Apr 2019
சூர்யகுமார் யாதவ் அவுட்

சந்தீப் ஷர்மா ஓவரில், ஸ்வீப் ஆட முயன்ற, இந்தியாவின் டி வில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ், 7 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். 

என்ன மும்பை..! ஆரம்பத்துலேயே முட்டுது!?

20:27 (IST)06 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்...

அண்ணே... சேப்பாக்-ல் இருந்து எப்படின்னே அதுக்குள்ள ஹைதராபாத் வந்தீங்க?

கண்ணாயிரம் - தம்பி மேட்டருக்கு வா... இன்றைய போட்டியில், மும்பை 150 - 180 அடிக்கும். பார்த்துக்கோ...

20:19 (IST)06 Apr 2019
ரோஹித் அவுட்...

மீண்டும் ஆப்கன் வீரர் முகமது நபியை வைத்து ஆட்டம் காட்டத் தொடங்கியிருக்கிறது ஹைதராபாத். மும்பை கேப்டன் ரோஹித், 11 ரன்களில் கேட்ச் ஆனார். 

20:16 (IST)06 Apr 2019
ஹைதராபாத் பிளேயிங் XI

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ(w), விஜய் ஷங்கர், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசுஃப் பதான், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ் குமார்(c), சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்

20:14 (IST)06 Apr 2019
மும்பை பிளேயிங் XI

ரோஹித் ஷர்மா, டி காக், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், க்ருனால் பாண்ட்யா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ராகுல் சாஹர், அல்சாரி ஜோசப், ஜஸ்பிரித் பும்ரா

20:06 (IST)06 Apr 2019
இது மேச்சு...

வணக்கம் நேயர்களே... மும்பை vs ஹைதராபாத் போட்டியின் லைவ் அப்டேட்ஸ் இதோ... தோற்கடிக்கவே முடியாத இந்த ஹைதராபாத் கோட்டையை, அம்பானி அசைத்துப் பார்ப்பாரா? ஐ... மீன் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி அசைத்துப் பார்க்குமா?

பலம் வாய்ந்த ஓப்பனர்கள் கொண்ட ஹைதராபாத் அணி இதுவரை இந்த சீசனில் உள்ளூரில் தோற்றதே கிடையாது. அப்படிப்பட்ட மெகா கோட்டையை மும்பை தகர்த்துள்ளது. அதுவும் சுக்கு நூறாக...

Web Title:

Ipl 2019 mi vs srh live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close