IPL 2019 RCB vs RR Live Cricket Score Updates: ஐபிஎல் 2019 தொடரில், இன்று நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
Live Blog
IPL 2019: Rajasthan Royals vs Kings Bangalore Royal Challengers
விராட் கோலி... இந்திய அணியின் கேப்டன்... வெற்றிக்காக பாடுபடுபவர். உலகின் எந்த களத்தில் ஆடினாலும், அங்கு அவர் தான் ஹீரோ. ஆனால், ஐபிஎல் எனும் உள்ளூர் பந்தயக் குதிரையில் மட்டும் அவரால் பயணம் செய்யவே முடியவில்லை... வீரராக அல்ல, ஒரு கேப்டனாக! இனிமேலும், கேப்டனாக நீடிக்க வேண்டுமா என்பதை நீங்கள் யோசிக்கும் தருணம் இது கோலி... சும்மா தோற்றதற்காக இதைச் சொல்லவில்லை. ஏதோ ஒன்று உங்கள் அணியில் மிஸ் ஆகிறது.
திறமையான பிளேயர்கள், அருமையான கோச், மேட்ச் விண்ணர்கள் என எல்லாம் இருந்தும் மீண்டும் மீண்டும் ஏன் தோற்கிறீர்கள்? இந்த நாலு மேட்ச் தோல்விக்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. உங்கள், கடைசி நான்கு வருட ரெக்கார்டை புரட்டிப் பாருங்கள்...
யோசிக்க வேண்டிய நேரமிது கோலி!
சாஹலின் 15வது ஓவரில், ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த மிக எளிதான கேட்சை, ஸ்வீப்பர் கவரில் நின்றுக் கொண்டிருந்த உமேஷ் யாதவ் நழுவ விட்டார். முன்னதாக, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பட்லர் கேட்சை கேப்டன் விராட் கோலி தவறவிட்டார்.
நீங்க விட்டது கேட்சையா, இல்ல உங்க டீமின் வெற்றி வாய்ப்பையா என்பது ஆட்டத்தின் முடிவில் தெரியும்.
2017ம் ஆண்டு புனே அணியில் விளையாடிய ராகுல் திரிபாதி ஸ்டிரைக் ரேட், கன்சிஸ்டன்ஸி என இரண்டிலும் பாராட்டப்பெற்றார். ஆனால், 2018 சீசன் அவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆனால், இந்த சீசனில், சென்னையில் நடந்த போட்டியில், தோனி கண்ணெதிரே ஆட்டம் காட்டிய திரிபாதி, இன்றைய போட்டியிலும் பயமறியா டச்-களை காட்டி வருகிறார்.
அண்ணே.... சான்ஸே இல்லானே நீங்க...Prediction-லாம் வேற லெவல்...
கண்ணாயிரம் - தம்பி டைம் இல்ல... Predict சொல்லிட்டு கிளம்பனும்... ஆரம்பத்தில் சற்று அதிவேகமாக ராஜஸ்தான் ஆட்டத்தை தொடக்கினாலும், இப்போது கொஞ்சம் கண்டெய்ன் செய்கிறது ஆர்சிபி.. சீக்கிரம் சாஹலை கொண்டு வந்து, விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுக்க வேண்டும். சாஹல் இன்று 2-4 விக்கெட்டுகளை கைப்பற்றுவார்-னு நினைக்கிறேன். அப்படிலாம் செஞ்சா, ஆர்சிபி டஃப் கொடுக்க ட்ரை பண்ணலாம்.
பட், இப்போதைக்கு ராஜஸ்தான் ஜெயிக்கவே 80% வாய்ப்பிருக்கு.
ராஜஸ்தான் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால், பெங்களூரு அணியை காலி செய்ததில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். 4 ஓவர்கள் வீசிய கோபால், விராட், டி வில்லியர்ஸ், ஹெட்மயர் எனும் மூன்று அதிபயங்கர ஹிட்டர்ஸ்களை அடுத்தடுத்து காலி செய்து, அந்த அணியின் ரன் ரேட்டை டேமேஜ் செய்துவிட்டார்.
உண்மையில் நல்ல நேரத்தில் தான் பார்த்திவ் அவுட் ஆகியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். பிக் ஹிட்டர் மொயீன் அலி இப்போது களமிறங்கி இருக்கிறார். ஸ்டாய்னிஸ் - அலி இணைந்து நிச்சயம் சிக்ஸர்களை பறக்க விட முடியும்.
பார்த்திவ் 41 பந்துகளில் 67 ரன்களில் அவுட்... ஏதோ, அவரால் முடிந்தது!!
யோவ் கண்ணாயிரம்... நாங்க என்னயா பாவம் பண்ணோம்... 'நல்லா போயிட்டு இருக்குன்னு' நீ சொல்லி வாயை மூடல... அதுக்குள்ளே கோலி, ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில் 23 ரன்களில் போல்ட்-யா..
கண்ணாயிரம் - இது கிரிக்கெட் தம்பி! எதுவும் நம்ம கையில் இல்ல...
யோவ்.. உன்னை கையெடுத்து கும்பிடுறேன்... போயிடுயா.. இன்னைக்காவது பெங்களூர் ஜெயிக்கட்டும்
பெங்களூரு அணியின் பேட்டிங் ஸ்டாய்னிஸ் வருகைக்குப் பிறகு, உண்மையில் சமன் பெற்றுள்ளது. நிச்சயம், நல்ல ஸ்கோர் அடிக்க முடியும். ஹெட்மயர் தனது பொறுப்பை உணர்ந்து ஆடினால் உசிதம்... இந்த வலிமையான அணியை வைத்து விளையாடியும் தோற்றால்....
ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!.
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரை, 5-௦ என ஆஸ்திரேலியா துவம்சம் செய்திருக்கும் நிலையில், ஆஸி., வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பெங்களூரு அணிக்கு திரும்பியிருக்கிறார். அவரது வருகை, சத்தியமாக ஆர்சிபியின் பேட்டிங் வலிமையை அதிகரிக்கும்.
இப்போ கேள்வி என்னென்னா, எந்த வீரருக்கு பதிலாக இவரை கோலி ரீபிளேஸ் செய்யப் போகிறார் என்பதே!?
மொயின் அலி, ஹெட்மயர், கோலின் டி கிரான்ட் ஹோம் என்று யாருக்கு பதிலாக ஸ்டாய்னிஸ் அணிக்குள் வரப் போகிறார்?
கிரான்ட் ஹோம்-க்கு பதிலாக வரவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அண்ணே... உங்க Prediction-ஐ அள்ளி தெளிச்சி விடுங்க... இன்னைக்கு ஜெயிக்கப் போவது யார்?
அணியின் சமநிலை, மன நிலை என இவையிரண்டையும் கருத்தில் கொண்டு, நாம் சொல்ல வருவது என்னவெனில், ராஜஸ்தான் வெற்றிப் பெற 65% வாய்ப்பும், பெங்களூரு வெற்றிப் பெற 35% வாய்ப்பும் உள்ளது.
கோலி, டி வில்லியர்ஸ் ஃபேக்டர் பெரியளவில் ஒர்க் அவுட் ஆனால், பெங்களூருவுக்கு வெற்றி உறுதி. அல்லது, சாஹல் தனது பவுலிங்கில் அட்டகாசம் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் கூட, வெற்றிக்கு வாய்ப்புள்ளது.
ஆனால், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பெங்களூருவை காட்டிலும் ராஜஸ்தான் சற்று வலிமையாக இருப்பதால், ராஜஸ்தானுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது.
போன மேட்சுல விராட்டியன்ஸ்-னு சொன்னோம், ஹைதராபாத்தில் கோலி மரண அடி வாங்கினார். ஆகையால் தான் கோலியன்ஸ்... இந்த முறையாவது ஒர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம்... உங்கள் ஃபேவரைட் கணிப்பு கண்ணாயிரத்துடன் நான் அன்பரசன் ஞானமணி... பெங்களூரு vs ராஜஸ்தான் லைவ் அப்டேட்ஸ் உங்களுக்காக இதோ...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights