Advertisment

ராஜஸ்தான் முதல் வெற்றி... ரொம்ப கஷ்டம் கோலி! யோசிக்க வேண்டிய நேரமிது!

IPL 2019, Rajasthan Royals vs Royal Challengers Bangalore: ராஜஸ்தான் வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
RR beat RCB by 7 Wickets

RR beat RCB by 7 Wickets

IPL 2019 RCB vs RR Live Cricket Score Updates: ஐபிஎல் 2019 தொடரில், இன்று நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Advertisment

 

Live Blog

IPL 2019: Rajasthan Royals vs Kings Bangalore Royal Challengers



























Highlights

    23:30 (IST)02 Apr 2019

    ராஜஸ்தான் வெற்றி

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5வது பந்தில் சிக்சர் அடித்து திரிபாதி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இந்ந தொடரில், ராஜஸ்தான் அணியின் முதல் வெற்றி இதுவேயாகும். அதேசமயம், ஆர்சிபி இதிலும் தோற்றுள்ளது.

    23:24 (IST)02 Apr 2019

    ஸ்மித் அவுட்

    இன்று வழக்கத்தை விட சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், 31 பந்தில் 38 ரன்கள் எடுத்து, சிராஜ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். வெற்றிக்கு இறுதி ஓவரில் தேவை 5 ரன்கள்....

    23:23 (IST)02 Apr 2019

    விராட்... நீங்க யோசிக்கணும்!

    விராட் கோலி... இந்திய அணியின் கேப்டன்... வெற்றிக்காக பாடுபடுபவர். உலகின் எந்த களத்தில் ஆடினாலும், அங்கு அவர் தான் ஹீரோ. ஆனால், ஐபிஎல் எனும் உள்ளூர் பந்தயக் குதிரையில் மட்டும் அவரால் பயணம் செய்யவே முடியவில்லை... வீரராக அல்ல, ஒரு கேப்டனாக! இனிமேலும், கேப்டனாக நீடிக்க வேண்டுமா என்பதை நீங்கள் யோசிக்கும் தருணம் இது கோலி... சும்மா தோற்றதற்காக இதைச் சொல்லவில்லை. ஏதோ ஒன்று உங்கள் அணியில் மிஸ் ஆகிறது. 

    திறமையான பிளேயர்கள், அருமையான கோச், மேட்ச் விண்ணர்கள் என எல்லாம் இருந்தும் மீண்டும் மீண்டும் ஏன் தோற்கிறீர்கள்? இந்த நாலு மேட்ச் தோல்விக்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. உங்கள், கடைசி நான்கு வருட ரெக்கார்டை புரட்டிப் பாருங்கள்...

    யோசிக்க வேண்டிய நேரமிது கோலி!

    23:15 (IST)02 Apr 2019

    வெற்றிக்கு அருகில் ஆர்ஆர்

    இதுவரை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்துள்ள ஆர்ஆர், வெற்றியை இன்னும் சில நிமிடங்களில் அடைந்து விடும். ஆக, இன்னைக்கு நம்ம கணிப்பு கண்ணாயிரம் சொன்னது 100% நடந்துவிட்டது.

    23:09 (IST)02 Apr 2019

    சாப்பிட்டு கை கழுவ மறந்த ஆர்சிபி

    சாஹலின் 15வது ஓவரில், ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த மிக எளிதான கேட்சை, ஸ்வீப்பர் கவரில் நின்றுக் கொண்டிருந்த உமேஷ் யாதவ் நழுவ விட்டார். முன்னதாக, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பட்லர் கேட்சை கேப்டன் விராட் கோலி தவறவிட்டார்.

    நீங்க விட்டது கேட்சையா, இல்ல உங்க டீமின் வெற்றி வாய்ப்பையா என்பது ஆட்டத்தின் முடிவில் தெரியும்.

    23:02 (IST)02 Apr 2019

    திரிபாதி ஆன் தி ஷோ.....

    2017ம் ஆண்டு புனே அணியில் விளையாடிய ராகுல் திரிபாதி ஸ்டிரைக் ரேட், கன்சிஸ்டன்ஸி என இரண்டிலும் பாராட்டப்பெற்றார். ஆனால், 2018 சீசன் அவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆனால், இந்த சீசனில், சென்னையில் நடந்த போட்டியில், தோனி கண்ணெதிரே ஆட்டம் காட்டிய திரிபாதி, இன்றைய போட்டியிலும் பயமறியா டச்-களை காட்டி வருகிறார். 

    22:58 (IST)02 Apr 2019

    பட்லர் அவுட்...

    இன்று 3வது கியரிலேயே ஆடிக் கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து, யுவேந்திர சாஹல் ஓவரில், சிக்ஸ் லைனில் கேட்ச் ஆனார். சாஹலின் 2வது விக்கெட் இது

    22:42 (IST)02 Apr 2019

    80-1

    10 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துகாரரும், ஆஸ்திரேலியகாரரும் களத்தில்...

    22:35 (IST)02 Apr 2019

    அடக்கி வாசிக்கும் ஸ்டீவ் ஸ்மித்

    என்னமோ தெரியல... டீம் புடிக்கலையா? இல்ல, விளையாடவே பிடிக்கலையா-னு தெரில. ஸ்டீவன் ஸ்மித், இந்த சீரிஸில் இதுவரை அடக்கி வாசிப்பது போன்றே இருக்கு.

    இல்ல.. எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா?

    22:28 (IST)02 Apr 2019

    சாஹல்-க்கு முதல் விக்கெட்!

    சில நிமிடங்களுக்கு முன்பு தான், நமது கண்ணாயிரம் அண்ணன், சாஹல் இன்னைக்கு 2-4 விக்கெட் எடுப்பார்-னு சொன்னார். இப்போ, சாஹல் தான் வீசிய முதல் ஓவரிலேயே ரஹானேவை 22 ரன்களில் எல்.பி. ஆக்கி வெளியேற்றி இருக்கிறார். 

    கண்ணாயிரம் ராக்ஸ்....

    22:25 (IST)02 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    அண்ணே.... சான்ஸே இல்லானே நீங்க...Prediction-லாம் வேற லெவல்...

    கண்ணாயிரம் - தம்பி டைம் இல்ல... Predict சொல்லிட்டு கிளம்பனும்... ஆரம்பத்தில் சற்று அதிவேகமாக ராஜஸ்தான் ஆட்டத்தை தொடக்கினாலும், இப்போது கொஞ்சம் கண்டெய்ன் செய்கிறது ஆர்சிபி.. சீக்கிரம் சாஹலை கொண்டு வந்து, விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுக்க வேண்டும். சாஹல் இன்று 2-4 விக்கெட்டுகளை கைப்பற்றுவார்-னு நினைக்கிறேன். அப்படிலாம் செஞ்சா, ஆர்சிபி டஃப் கொடுக்க ட்ரை பண்ணலாம். 

    பட், இப்போதைக்கு ராஜஸ்தான் ஜெயிக்கவே 80% வாய்ப்பிருக்கு. 

    22:16 (IST)02 Apr 2019

    46-0

    5 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் 46 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர், சுத்து சுத்து-னு சுத்துறார். ரஹானே நிதானம் காட்டுகிறார். (அவர் எப்பவுமே நிதானம் தானே காட்டுவாப்ள)

    22:03 (IST)02 Apr 2019

    இப்படி இருந்தா எப்படி கோலி?

    சைனி ஓவரில், ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலி, பட்லர் கேட்சை கோட்டை விட்டிருக்காப்ள... கஷ்டமான கேட்ச் கூட இல்லை அது... ஏற்கனவே நாம அடி வாங்கிக்கிட்டு இருக்கோம்.. இப்படி இருந்தா எப்படி கோலி..? சரி...சரி பிளே போல்ட்!!!

    21:58 (IST)02 Apr 2019

    அடேங்கப்பா!

    ராஜஸ்தான் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வரை எட்டு பேட்ஸ்மேன்கள் இருக்குறாய்ங்க.... பெங்களூரு ஜெயிக்க நிறைய பிராயசப் பட வேண்டியிருக்கும். இப்பவும் சொல்றோம்... யுவேந்திர சாஹல் மற்றும் மொயீன் அலி ஓவர் தான் வெற்றியை தீர்மானிக்கும் பாருங்க...

    21:50 (IST)02 Apr 2019

    களமிறங்கியது ராஜஸ்தான்...

    159 ரன் இலக்கை நோக்கி களமிறங்கியது ராஜஸ்தான்... ரஹானே, பட்லர் களத்தில்....

    21:44 (IST)02 Apr 2019

    இப்படி பண்ணிட்டீங்களே கோபால்...

    ராஜஸ்தான் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால், பெங்களூரு அணியை காலி செய்ததில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். 4 ஓவர்கள் வீசிய கோபால், விராட், டி வில்லியர்ஸ், ஹெட்மயர் எனும் மூன்று அதிபயங்கர ஹிட்டர்ஸ்களை அடுத்தடுத்து காலி செய்து, அந்த அணியின் ரன் ரேட்டை டேமேஜ் செய்துவிட்டார்.

    21:37 (IST)02 Apr 2019

    159 ரன்கள் இலக்கு

    ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் திரட்டப்பட, ராஜஸ்தானுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பெங்களூர். 

    கடைசியில் நம்ம கணிப்பு கண்ணாயிரம் சொன்னது நடந்துடுச்சே!! 161 - 163 அடிக்கும்-னு சொன்னார்... 158 அடிச்சிருக்கு...

    21:35 (IST)02 Apr 2019

    19.6

    4 - ஸ்டாய்னிஸ் 

    21:34 (IST)02 Apr 2019

    19.5

    1 - மொயீன் அலி

    21:33 (IST)02 Apr 2019

    19.4

    4 - மொயீன் அலி

    21:33 (IST)02 Apr 2019

    19.3

    1 - ஸ்டாய்னிஸ்

    21:32 (IST)02 Apr 2019

    19.2

    1 - மொயீன் அலி

    21:31 (IST)02 Apr 2019

    19.1 - ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலிங்

    6 - மொயீன் அலி

    21:30 (IST)02 Apr 2019

    141-4

    19 ஓவர்கள் முடிவில், பெங்களூரு  4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி ஓவரில் 2௦ ரன்கள் எடுத்தால், நம்ம கணிப்பு கண்ணாயிரம் Predict பண்ண ஸ்கோர் வந்துவிடும். 

    கடவுளே... அது மட்டும் நடந்திடக் கூடாது...

    21:24 (IST)02 Apr 2019

    பார்த்திவ் அவுட்

    உண்மையில் நல்ல நேரத்தில் தான் பார்த்திவ் அவுட் ஆகியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். பிக் ஹிட்டர் மொயீன் அலி இப்போது களமிறங்கி இருக்கிறார். ஸ்டாய்னிஸ் - அலி இணைந்து நிச்சயம் சிக்ஸர்களை பறக்க விட முடியும். 

    பார்த்திவ் 41 பந்துகளில் 67 ரன்களில் அவுட்... ஏதோ, அவரால் முடிந்தது!!

    21:21 (IST)02 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்...

    அண்ணே.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்... நீங்க ஒரு ஆணியும் இங்கே சொல்ல வேண்டாம்...

    கண்ணாயிரம் - என் கடமையை தடுக்காத தம்பி. மக்கள் காத்துக்கிட்டு இருக்காங்க... இந்த மேட்சுல, ஆர்சிபி 161-163 க்குள்ள அடிக்கும்... 

    21:15 (IST)02 Apr 2019

    117-3

    16 ஓவர்கள் முடிவில், பெங்களூரு அதே 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது. பார்த்திவ் படேல், ஸ்டாய்னிஸ் களத்தில்.... ஸ்டாய்னிஸ் நினைத்தால், அடுத்த 24 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க முடியும். பார்த்திவ்வாலும் முடியும் என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று.

    21:07 (IST)02 Apr 2019

    வாவ் பார்த்திவ்...

    எந்த அணிக்காக ஆடினாலும், தன்னால் முடிந்ததை நிறைவாக செய்ய முயற்சிக்கும் திருவாளர் பார்த்திவ் படேல் அவர்கள், 29 ரன்களில் அரைசதம் அடித்துள்ளார். 

    நீங்க அசத்துங்க பார்த்தி....

    21:00 (IST)02 Apr 2019

    92-3

    12 ஓவர்கள் முடிவில், பெங்களூரு 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

    20:49 (IST)02 Apr 2019

    ஹெட்மயர் அவுட்

    இந்த தம்பி பெங்களூர் அணிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடல.... ஓவருக்கு ஓவர் விக்கெட் கைப்பற்றி வரும் ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில், 9 பந்துகளை சந்தித்த ஹெட்மயர் 1 ரன்னில் அவுட்.

    20:37 (IST)02 Apr 2019

    டி வில்லியர்ஸ் அவுட்

    அடப் பாவமே! ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில், டி வில்லியர்ஸ் 13 ரன்களில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, பெங்களூரு 71/2. 

    யோவ் கணிப்பு... நீ வா உன்னை கவனிச்சுக்குறேன்... 

    20:30 (IST)02 Apr 2019

    கோலி அவுட்!

    யோவ் கண்ணாயிரம்... நாங்க என்னயா பாவம் பண்ணோம்... 'நல்லா போயிட்டு இருக்குன்னு' நீ சொல்லி வாயை மூடல... அதுக்குள்ளே கோலி, ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில் 23 ரன்களில் போல்ட்-யா.. 

    கண்ணாயிரம் - இது கிரிக்கெட் தம்பி! எதுவும் நம்ம கையில் இல்ல...

    யோவ்.. உன்னை கையெடுத்து கும்பிடுறேன்... போயிடுயா.. இன்னைக்காவது பெங்களூர் ஜெயிக்கட்டும் 

    20:20 (IST)02 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்...

    கண்ணாயிரம் - நல்லா போயிட்டு இருக்கு.... இப்படியே போனா, கண்டிப்பா 200 கூட அடிக்கலாம். 

    சொல்லிட்டீல, இதோ இப்போ விக்கெட் விழும் பாரு...

    20:17 (IST)02 Apr 2019

    கெளதம் - கோலி... என்ன தான் பிரச்சனை?

    கடந்த சீசனில், வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னரான கிருஷ்ணப்பா கெளதம் ஓவரில் ரொம்பவே திணறினார். இந்த சீசனிலும் அது தொடர்வது போல தெரிகிறது. கெளதம் ஓவரில், கோலி ரொம்பவே திணறிவிட்டார்.

    20:05 (IST)02 Apr 2019

    இதோ வந்துட்டுல நம்ம சிங்கம்...

    இந்த சீசனில் ஆர்சிபி அணியின் 2589 ஒப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக பார்த்திவ் படேல் - விராட் கோலி இணை களமிறங்கியுள்ளது. அடுத்த மேட்சுல யாரோ!! 

    19:56 (IST)02 Apr 2019

    இன்றும் தோற்றால் வாய்ப்பே இல்லை...

    பெங்களூரு அணியின் பேட்டிங் ஸ்டாய்னிஸ் வருகைக்குப் பிறகு, உண்மையில் சமன் பெற்றுள்ளது. நிச்சயம், நல்ல ஸ்கோர் அடிக்க முடியும். ஹெட்மயர் தனது பொறுப்பை உணர்ந்து ஆடினால் உசிதம்... இந்த வலிமையான அணியை வைத்து விளையாடியும் தோற்றால்....

    ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!.

    19:53 (IST)02 Apr 2019

    வருண் ஆரோன் ஈஸ் பேக்

    இந்த மனிதரை நியாபகம் உள்ளதா? மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசக் கூடிய மிகச் சில இந்திய பவுலர்களில் ஒருவர். அடிக்கடி காயம் காரணமாக, ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார். இப்போது, மீண்டும் இவரை ஐபிஎல்-ல் பார்ப்பது ஃப்ரெஷ் பீலிங் தான்.

    19:45 (IST)02 Apr 2019

    ஆர்ஆர் பிளேயிங் XI:

    அஜின்க்யா ரஹானே(c), ஜோஸ் பட்லர்(w), ராகுல் திரிபாதி, ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி, கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், தவல் குல்கர்னி, வருண் ஆரோன்

    19:43 (IST)02 Apr 2019

    ஆர்சிபி பிளேயிங் XI:

    பார்த்திவ் படேல்(w), மொயீன் அலி, விராட் கோலி(c), ஏபி டி வில்லியர்ஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அக்ஷ்தீப் நாத், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, யுவேந்திர சாஹல், முகமது சிராஜ்

    19:34 (IST)02 Apr 2019

    பெங்களூர் பேட்டிங்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜின்க்யா ரஹானே டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். கோலியன்ஸ்.... பீ ரெடி... உங்க டீம் தான் பேட்டிங்!

    19:30 (IST)02 Apr 2019

    பிட்ச் ரிப்போர்ட்

    டாஸ் இன்னும் சில நொடிகளில்.... ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் இருந்து. பிட்ச் ரிப்போர்ட் படி, ஃபாஸ்ட் பவுலிங் அண்ட் பேட்டிங் என இரண்டிற்கும் பிட்ச் சாதகமாக இருக்குமாம்.

    19:24 (IST)02 Apr 2019

    பறந்து வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்...

    பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரை, 5-௦ என ஆஸ்திரேலியா துவம்சம் செய்திருக்கும் நிலையில், ஆஸி., வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பெங்களூரு அணிக்கு திரும்பியிருக்கிறார். அவரது வருகை, சத்தியமாக ஆர்சிபியின் பேட்டிங் வலிமையை அதிகரிக்கும்.

    இப்போ கேள்வி என்னென்னா, எந்த வீரருக்கு பதிலாக இவரை கோலி ரீபிளேஸ் செய்யப் போகிறார் என்பதே!?

    மொயின் அலி, ஹெட்மயர், கோலின் டி கிரான்ட் ஹோம் என்று யாருக்கு பதிலாக ஸ்டாய்னிஸ் அணிக்குள் வரப் போகிறார்?

    கிரான்ட் ஹோம்-க்கு பதிலாக வரவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

    19:10 (IST)02 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    அண்ணே... உங்க Prediction-ஐ அள்ளி தெளிச்சி விடுங்க... இன்னைக்கு ஜெயிக்கப் போவது யார்?

    அணியின் சமநிலை, மன நிலை என இவையிரண்டையும் கருத்தில் கொண்டு, நாம் சொல்ல வருவது என்னவெனில், ராஜஸ்தான் வெற்றிப் பெற 65% வாய்ப்பும், பெங்களூரு வெற்றிப் பெற 35% வாய்ப்பும் உள்ளது. 

    கோலி, டி வில்லியர்ஸ் ஃபேக்டர் பெரியளவில் ஒர்க் அவுட் ஆனால், பெங்களூருவுக்கு வெற்றி உறுதி. அல்லது, சாஹல் தனது பவுலிங்கில் அட்டகாசம் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் கூட, வெற்றிக்கு வாய்ப்புள்ளது. 

    ஆனால், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பெங்களூருவை காட்டிலும் ராஜஸ்தான் சற்று வலிமையாக இருப்பதால், ராஜஸ்தானுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது.  

    18:51 (IST)02 Apr 2019

    ஹாய், ஹலோ கோலியன்ஸ்....

    போன மேட்சுல விராட்டியன்ஸ்-னு சொன்னோம், ஹைதராபாத்தில் கோலி மரண அடி வாங்கினார். ஆகையால் தான் கோலியன்ஸ்... இந்த முறையாவது ஒர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம்... உங்கள் ஃபேவரைட் கணிப்பு கண்ணாயிரத்துடன் நான் அன்பரசன் ஞானமணி... பெங்களூரு vs ராஜஸ்தான் லைவ் அப்டேட்ஸ் உங்களுக்காக இதோ... 

    Virat Kohli Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment