IPL 2019 RR vs CSK: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.
Live Blog
IPL 2019: RR vs CSK
ரெய்னா ரன் அவுட்டானது உண்மையில் கொடுமையான ஒன்று தான். அவர் இதற்கு முன்பு, இவ்வளவு மட்டமாக ரன் அவுட் ஆனதில்லை. ஷாட் ஃபைனில் ஆர்ச்சரிடம் அடித்துவிட்டு, பந்தை பார்த்தபடியே ரெய்னா மெதுவாக ஓடுகிறார். அதை புயல் வேகத்தில் ஆர்ச்சர் வீசியெறிய, ரெய்னா 4 ரன்களில் காலி.
என்னம்மா இந்த பையன் வேகமா ஓடுவான் தெரியுமா!
ஐபிஎல்-ல் இன்று தனது 100வது வீழ்த்தி இருக்கிறார் நம்ம சர் ரவீந்திர ஜடேஜா. ஆம்! இன்றையப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜத்து... ஐபிஎல்-ல் உங்களுக்கு வாய்ப்பு, வாழ்க்கை என இரண்டையும் அளித்த அதே ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரா 100வது விக்கெட்டை கைப்பற்றி இருக்கீங்க... வாழ்த்துகள்!
தீபக் சாஹர பாரு... உன் கூட தானே வளர்ந்தான்.. டெத் ஓவர்ஸ்-லாம் எப்படி போடுறான்? நீ இன்னும் கத்துக்குட்டி கிட்டலாம் அடி வாங்கிக்கிட்டு இருக்க!!!?
ஷர்துள் தாக்கூர் கடைசி ஓவரில், 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 18 ரன்கள் குவிக்கப்பட்டது.
சென்னைக்கு 152 ரன்கள் இலக்கு
இந்த போட்டியிலாவது சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் த்ரிபாதி 10 ரன்களில், ஜடேஜா ஓவரில், கேதர் ஜாதவ்விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2017ம் சீசனில், தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் மிகச் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி, அதன்பின், இப்போதுவரை ஒரு ஆணியும் எடுக்கவில்லை.
அண்ணே.. உங்களுக்காகவே வெயிட்டிங்...
கண்ணாயிரம் - வணக்கம் நண்பர்களே... இன்று ராஜஸ்தானை சந்திக்கிறோம். பெரிய சவால் ஒன்றும் இல்லை. ஆனால், வெற்றி பெறுவது எளிதல்ல... வாட்சன், ரெய்னா, ராயுடு என மூவரும் ஃபார்ம் அவுட்டில் இருக்க, பிரம்மாண்ட ஸ்கோர்களை அடிக்க முடியாமல் தடுமாறுகிறது சிஎஸ்கே. பந்துவீச்சில் ஓகே... தோனி பேட்டிங்கில் ஆறுதல் தான் மிகப்பெரிய ஆறுதல்.
எனினும், இன்றைய போட்டியை சிஎஸ்கே வெல்லவே அதிக வாய்ப்புள்ளது
சிஎஸ்கே - 60%
ஆர்ஆர் - 40%
ஐபிஎல் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் தோனி மட்டுமே. வேறு எந்த அணிக்கும், ஐபிஎல் தொடங்கியது முதல் இன்று வரை ஒரே வீரர் கேப்டனாக இருந்ததில்லை. ஆனால், நம்ம தல அந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் ரிட்டையர்டானால் கூட, சென்னை அணிக்கு வேறு கேப்டன் வரலாம். ஆனால், சென்னையின் ஆல்டைம் ஃபேவரைட் கேப்டன் என்றால் அது தோனி தான்!
அப்படிப்பட்ட நம்ம தல இன்றைய போட்டியை வென்றால், ஐபிஎல்-ல் கேப்டனாக வெல்லும் 100வது போட்டியாக இது அமையும்!!
என்ன சிஎஸ்கே மேட்சுக்கு ரெடியா? நாங்களும் ரெடி... உங்க கணிப்பு கண்ணாயிரமும் ரெடி... சென்னையில் வைத்து ராஜஸ்தானை நாம சம்பவம் பண்ணிட்டோம். இப்போ அவங்க ஊரான ஜெய்ப்பூருக்கு வந்திருக்கோம். என்ன நடக்கப் போகுது-னு பார்க்கலாம். நான் உங்கள் அன்பரசன் ஞானமணி லைவ் அப்டேட்ஸுக்காக....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights