தோனியின் சூடான வாக்குவாதம்… கடைசி பந்தில் சிக்ஸ்… சென்னை த்ரில் வெற்றி!

IPL CSK vs RR: சென்னை வெற்றி

RR vs CSK Live Score, RR vs CSK Playing 11 Live Score

IPL 2019 RR vs CSK: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.

Live Blog

IPL 2019: RR vs CSK

00:09 (IST)12 Apr 2019
100வது வெற்றி

நாம் முன்னரே சொன்னது போன்று, தல தோனிக்கு கேப்டனாக இது 100வது ஐபிஎல் வெற்றியாகும். 

23:55 (IST)11 Apr 2019
கடவுளே... எனக்கு இருப்பது பிஞ்சு நெஞ்சு...

வெற்றியா தோல்வியா.. .தோல்வியா வெற்றியா.-னு கடைசி பந்து பரபரத்துக் கொண்டிருந்த மேட்சில் கடைசி பந்தில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து சுபம் போட்டு முடித்து வைத்திருக்கிறார். 

லாஸ்ட் ஓவரில் மட்டும் எத்தனை டிராமா?

23:47 (IST)11 Apr 2019
சிஎஸ்கே வெற்றி

கடைசி பந்தில் சான்ட்னர் ஒரு அபார ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் அடிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றிப் பெற்றது.

23:46 (IST)11 Apr 2019
20.0

சான்ட்னர் - சிக்ஸ்

23:45 (IST)11 Apr 2019
20.0

சான்ட்னர் - வைட் (1 ரன்)

23:44 (IST)11 Apr 2019
19.5

சான்ட்னர் - 2 ரன்கள்

23:43 (IST)11 Apr 2019
19.4

சான்ட்னர் - 2 ரன்கள்

23:39 (IST)11 Apr 2019
19.3

தோனி - போல்ட் 

43 பந்துகளில் 58 ரன்கள் அடித்து தோனி அவுட்

23:38 (IST)11 Apr 2019
19.2 (ஃப்ரீ ஹிட்)

தோனி - 2 ரன்

23:37 (IST)11 Apr 2019
19.2 (நோ-பால்)

ஜடேஜா - 1

23:36 (IST)11 Apr 2019
19.1 - பவுலர் பென் ஸ்டோக்ஸ்

ஜடேஜா - 6 (படுத்துக்கிட்டு அடிச்ச சிக்ஸ்)

23:35 (IST)11 Apr 2019
6 பந்துகளுக்கு 18 டார்கெட்

சிஎஸ்கே கடைசி ஓவரில் 18 ரன்கள் அடித்தால் வெற்றி

23:33 (IST)11 Apr 2019
தோனிக்கு என்னாச்சு?

அதிக ரன் ஓடியதால், பேட்டிங் செய்ய முடியாமல், அப்படியே கிளவுஸை கழட்டி கிரவுண்டில் படுத்துவிட்டார் தோனி. சென்னை ஃபிசியோ வந்து தோனிக்கு அவசர அவசரமாக உதவி செய்து வருகிறார். 

23:31 (IST)11 Apr 2019
தோனி 50

ஐபிஎல்-ல் தனது 22வது அரைசதத்தை பூர்த்தி செய்தார் மகேந்திர சிங் தோனி... 

ஓடி ஓடியே தல-க்கு மூச்சு வாங்குது!

23:25 (IST)11 Apr 2019
ராயுடு அவுட்

47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்த அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ் ஓவரில் லாங் ஆன்-ல் சிக்ஸ் அடிக்க முயன்ற போது, ஷ்ரேயாஸ் கோபாலின் சமயோஜித் கேட்சால் வெளியேறினார். 

ஒட்டுமொத்த பிரஷரும் இப்போ தோனி மீது...

23:19 (IST)11 Apr 2019
தோனி டார்கெட் யார்?

இன்னும் 3 ஓவர் இருக்கு... வீசப் போறது

ஸ்டோக்ஸ்

ஆர்ச்சர்

உணட்கட்

இதில், எந்த இரு பவுலர்களை டார்கெட் செய்யப் போகிறார்? இனி கெஸ்?

23:18 (IST)11 Apr 2019
என்னமோ நினைச்சிட்டோமே...

ராஜஸ்தான் பவுலிங்குல சிஎஸ்கே சொதப்புனதைப் பார்த்து, நம்ம கணிப்பு கண்ணாயிரம் கூட, சென்னை தோற்கும்-னு சொல்லிட்டாரே பா... எங்க அந்தாளு?

23:08 (IST)11 Apr 2019
ஃபார்முக்கு வருகிறாரா? ராயுடு 50

இந்த சீசன் முழுவதும் இதுவரை தட்டித் தடவிக் கொண்டிருந்த அம்பதி ராயுடு, இந்தப் போட்டியில் பெயர் சொல்லும் பிள்ளையாக ஆடி வருகிறார். ரிசல்ட் 50.

யெஸ்... இந்த சீசனில் முதல் 50 ராயுடுவுக்கு...

கமான் ராயு...

23:04 (IST)11 Apr 2019
88-4

14 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 

களத்தில் தோனி, ராயுடு...

22:56 (IST)11 Apr 2019
போடு தகிட... தகிட...

இன்னைக்கு இருக்கு ராஜஸ்தானுக்கு... நம் தல தோனியின் டச், இந்தப் போட்டியில் கடந்த சீசனில் தோனியின் டச்சை நினைவுப்படுத்துகிறது. இந்த 'டச்'க்கு தல ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள் என்றால் அது மிகையல்ல...

இன்னைக்கு இருக்கு ஒரு கூத்து!!

22:54 (IST)11 Apr 2019
சிக்ஸ்...

எனக்காடா ஸ்பின் போட்டு கன்டெய்ன் பண்றீங்க..!?

ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில், தோனி ஒரு அசால்ட் லாங் ஆன் சிக்ஸ் அடிக்க, இந்தப் போட்டியில் தோனியின் மூன்றாவது சிக்ஸ் என்ற பெருமையை அந்த சிக்ஸ் பெற்றது. 

கொஞ்சம் ஓவரா இருக்கோ!!

22:49 (IST)11 Apr 2019
தோனி ஏன் இவ்ளோ டென்ஷன் ஆனப்புல?

பொதுவாக, 10வது ஓவரில்-லாம் விளையாட வாய்ப்பு கிடைத்தால், சிக்ஸர் என்ன, பவுண்டரி கூட அடிக்கமாட்டார் தல தோனி. ஆனால், எதைப் பார்த்து காண்டானாரோ என்னவோ, இரு சிக்ஸர்களை இன்று களமிறங்கிய உடனேயே அடித்திருக்கிறார். 

எங்கயோ இடிக்குதே!!

22:44 (IST)11 Apr 2019
என்ன ஒரு ஆச்சர்யம்...

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில் பிரம்மாண்ட சிக்ஸ் ஒன்றை பறக்கவிட்ட தோனி, இப்போது ரியான் பராக் ஓவரில் மற்றொரு சிக்ஸரை விளாசியுள்ளார்.

22:22 (IST)11 Apr 2019
கேதர் ஜாதவ் அவுட்

ஆர்ச்சர் ஓவரில், கேதர் ஜாதவ் அடித்த அட்டகாசமான ஷாட்டை, படுபயங்கர அட்டகாசத்துடன் கேட்ச் செய்தார் பென் ஸ்டோக்ஸ். 1 ரன்னில் கேதர் ஜாதவ் அவுட்

22:13 (IST)11 Apr 2019
டு பிளசிஸ் அவுட்...

ஜெயதேவ் உணட்கட் பற்றி தான் நமக்கு தெரியுமே... அது வேற கதை. அவருடைய பந்தில் சிக்ஸ் அடிக்க நினைத்து, தூக்கி விளாசிய டு பிளசிஸ், ராகுல் திரிபாதியின் அருமையான டைவ் கேட்சால், 7 ரன்களில் கேட்ச் செய்யப்பட்டார். 

22:11 (IST)11 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே... சென்னைக்கு நட்டுக்கும் போலிருக்கே...

கண்ணாயிரம் - சரியா சொன்னீங்க தம்பி... ராஜஸ்தான் இவ்ளோ ஆக்ரோஷமா விளையாடுறதை பார்த்தா, எனக்கும் அதே டவுட்டு தான். ஸோ, என் கணிப்பு கொஞ்சம் மாறுது!. ராஜஸ்தான் ஜெயிக்கவே அதிக வாய்ப்பிருக்கு.

22:05 (IST)11 Apr 2019
இவ்ளோ ஸ்லோ-வா ஓடுவ?

ரெய்னா ரன் அவுட்டானது உண்மையில் கொடுமையான ஒன்று தான். அவர் இதற்கு முன்பு, இவ்வளவு மட்டமாக ரன் அவுட் ஆனதில்லை. ஷாட் ஃபைனில் ஆர்ச்சரிடம் அடித்துவிட்டு, பந்தை பார்த்தபடியே ரெய்னா மெதுவாக ஓடுகிறார். அதை புயல் வேகத்தில் ஆர்ச்சர் வீசியெறிய, ரெய்னா 4 ரன்களில் காலி. 

என்னம்மா இந்த பையன் வேகமா ஓடுவான் தெரியுமா!

22:00 (IST)11 Apr 2019
என்ன இப்படி போடுறாய்ங்க!?

குல்கர்னி வீசிய முதல் ஓவர் விக்கெட் மெய்டனாக அமைய... அடுத்து நடந்தது தான் சோகம்.... உணட்கட் வீசிய முதல் ஓவரில், ரெய்னா ரன் அவுட்டாகி இருக்கிறார். 

உடம்பை குறை-னு சொன்னா கேட்டதான!!

21:53 (IST)11 Apr 2019
வாட்சன் அவுட்

குல்கர்னி ஓவரில், வாட்சன் 0 ரன்னில் போல்ட்... 

சொல்லி வாய மூடல... அதுக்குள்ள வாட்சன் அவுட்... நீங்க பேயாம பொட்டிய கட்டிக்கிட்டு ஆஸ்திரேலியா கிளம்பிடுங்க... 

21:51 (IST)11 Apr 2019
சென்னை களத்தில்...

வாட்சன் ப்ரோ... இன்னைக்காவது அடிங்க...

டு பிளசிஸ் ப்ரோ.. நீங்க அதே ஃபார்ம கண்டினியூ பண்ணுங்க...

எண்ட குருவாயூரப்பா... நீ தான் சிஎஸ்கே டீமை காப்பாத்தணும்!

21:43 (IST)11 Apr 2019
100வது விக்கெட்டாம்

ஐபிஎல்-ல் இன்று தனது 100வது வீழ்த்தி இருக்கிறார் நம்ம சர் ரவீந்திர ஜடேஜா. ஆம்! இன்றையப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஜத்து...  ஐபிஎல்-ல் உங்களுக்கு வாய்ப்பு, வாழ்க்கை என இரண்டையும் அளித்த அதே ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரா 100வது விக்கெட்டை கைப்பற்றி இருக்கீங்க... வாழ்த்துகள்!

21:33 (IST)11 Apr 2019
இதுக்கு தான் சேர்க்குறது இல்ல...

தீபக் சாஹர பாரு... உன் கூட தானே வளர்ந்தான்.. டெத் ஓவர்ஸ்-லாம் எப்படி போடுறான்? நீ இன்னும் கத்துக்குட்டி கிட்டலாம் அடி வாங்கிக்கிட்டு இருக்க!!!? 

ஷர்துள் தாக்கூர் கடைசி ஓவரில், 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 18 ரன்கள் குவிக்கப்பட்டது.

சென்னைக்கு 152 ரன்கள் இலக்கு

21:28 (IST)11 Apr 2019
குச்சிகள் தெறிக்க...

தீபக் சாஹரின் லென்த் பந்தில், மிடில் மற்றும் ஆஃப் ஸ்டெம்ப்பு சிதற 28 ரன்களில் வெளியேறினார் பென் ஸ்டோக்ஸ்...

சிஎஸ்கே உஷார்.. Ben Stokes there-னு சொன்னவன யாராச்சும் பார்த்தீங்களா?

21:23 (IST)11 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

பிட்சில் எந்த பிரச்சனையும் இல்ல... ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களிடம் தான் பிரச்சனை. சில தேவையில்லாத ஷாட்கள் மூலம் தங்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்துள்ளனர். இருந்தாலும், 150 டார்கெட் வைத்தால், சென்னைக்கு சிறிது டஃப் கொடுத்து பார்க்கலாம். 

21:14 (IST)11 Apr 2019
பராக் அவுட்

இப்போ தான் இன்ட்ரோ கொடுத்தோம். அதற்குள் அவுட். தாகூர் ஓவரில் 16 ரன்களில் ரியான் பராக் கேட்ச் ஆனார்.

20:58 (IST)11 Apr 2019
ரியான் பராக்...

பில்டப்பு வார்த்தை அல்ல. இந்த அறிமுக வீரரின் பெயரே அதுதான். ரியான் பராக். 

வந்து பார்றா... வந்து பார்றா... என் ஏரியா பக்கம் வந்து பார்றா..!

20:52 (IST)11 Apr 2019
ஸ்மித் அவுட்

ஸ்மித்து கண்ணு... என்னாது இது... நீங்க வேற லெவல்ல திரும்பி வந்துருக்குறதா, ஆஸ்திரேலியா டீம் நம்பிக்கிட்டு இருக்கு. வேர்ல்டு கப்பு வேற வருது!! இப்படி கட்டைய போட்டு அடிக்குறீங்க.... இல்லனா இப்படி பொட்டு பொட்டு-னு அவுட்டாகி போயிடுறீங்க!!! கதை என்ன?

20:49 (IST)11 Apr 2019
74-4

10 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் தனது கோட்டையில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. 

20:45 (IST)11 Apr 2019
திரிபாதி அவுட்...

இந்த போட்டியிலாவது சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் த்ரிபாதி 10 ரன்களில், ஜடேஜா ஓவரில், கேதர் ஜாதவ்விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2017ம் சீசனில், தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் மிகச் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி, அதன்பின், இப்போதுவரை ஒரு ஆணியும் எடுக்கவில்லை. 

20:30 (IST)11 Apr 2019
சஞ்சு.... என்னாச்சு?

இன்ஃபார்ம் பேட்ஸ்மேன், எங்கள் பொக்கிஷம் என்றெல்லாம், ராஜஸ்தான் ரசிகர்களால் ஏகத்துக்கும் பில்டப் கொடுக்கப்படும், பில்டப்பை அவ்வப்போது நியாயப்படுத்தும் சஞ்சு சாம்சன் அவுட். சான்ட்னர் ஓவரில், 6 ரன்களில் கேட்ச் ஆனார்.

20:21 (IST)11 Apr 2019
ஹாட்ரிக்.... ட்ரிக்... கிக்

ஷர்துள் தாக்கூர் ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய ஜோஸ் பட்லர், அவரது நான்காவது ஸ்லோ பந்தில், ஒரு மட்டமான ஷாட் அடித்து, ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்களில் வெளியேறினார். 

20:16 (IST)11 Apr 2019
DRS ஸ்பெஷலிஸ்ட்க்கு ஒரு பிரியாணி பார்சல்!!

தீபக் சாஹர் வீசிய இரண்டாவது ஓவரில், நன்றாக செட் ஆகி ஆடிக் கொண்டிருந்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பேடில் பந்து பட, தோனி DRS போக, பந்து ஸ்டம்ப்பை தாக்க, அவுட்... ரஹானே 14 ரன்களில் அவுட்!

20:07 (IST)11 Apr 2019
என்னது இது தம்பி!?

கன்டெய்ன் பண்ணுவதில் சிஎஸ்கே-வுக்கு இருந்த ஒரு ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹரின் முதல் ஓவரிலேயே, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ஆரம்பத்துலயே அடிக்க ஆரம்பித்துவிட்டார் ஜோஸ் பட்லர். 

20:02 (IST)11 Apr 2019
களத்தில் ராஜஸ்தான்...

வழக்கம் போல், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஜின்க்யா ரஹானே, ஜோஸ் பட்லர் களமிறங்கியுள்ளனர். 

இந்த பட்லர் ஃபார்ம்-லயே இலலை.... அடிக்கவுட்டு ஃபார்முக்கு கொண்டு வந்துடாதீங்க சிஎஸ்கே...!

19:55 (IST)11 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே.. உங்களுக்காகவே வெயிட்டிங்...

கண்ணாயிரம் - வணக்கம் நண்பர்களே... இன்று ராஜஸ்தானை சந்திக்கிறோம். பெரிய சவால் ஒன்றும் இல்லை. ஆனால், வெற்றி பெறுவது எளிதல்ல... வாட்சன், ரெய்னா, ராயுடு என மூவரும் ஃபார்ம் அவுட்டில் இருக்க, பிரம்மாண்ட ஸ்கோர்களை அடிக்க முடியாமல் தடுமாறுகிறது  சிஎஸ்கே. பந்துவீச்சில் ஓகே... தோனி பேட்டிங்கில் ஆறுதல் தான் மிகப்பெரிய ஆறுதல். 

எனினும், இன்றைய போட்டியை சிஎஸ்கே வெல்லவே அதிக வாய்ப்புள்ளது

சிஎஸ்கே - 60%

ஆர்ஆர் - 40%

19:47 (IST)11 Apr 2019
கேப்டனாக 100வது வெற்றி...?

ஐபிஎல் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் தோனி மட்டுமே. வேறு எந்த அணிக்கும், ஐபிஎல் தொடங்கியது முதல் இன்று வரை ஒரே வீரர் கேப்டனாக இருந்ததில்லை. ஆனால், நம்ம தல அந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் ரிட்டையர்டானால் கூட, சென்னை அணிக்கு வேறு கேப்டன் வரலாம். ஆனால், சென்னையின் ஆல்டைம் ஃபேவரைட் கேப்டன் என்றால் அது தோனி தான்!

அப்படிப்பட்ட நம்ம தல இன்றைய போட்டியை வென்றால், ஐபிஎல்-ல் கேப்டனாக வெல்லும் 100வது போட்டியாக இது அமையும்!!

19:43 (IST)11 Apr 2019
ராஜஸ்தான் பிளேயிங் XI

அஜின்க்யா ரஹானே(c), ஜோஸ் பட்லர்(w), ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், ரியான் பராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், ஜெயதேவ் உணட்கட், தவால் குல்கர்னி

19:39 (IST)11 Apr 2019
சென்னை பிளேயிங் XI

ஷேன் வாட்சன், டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி(w/c), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், மிட்சல் சான்ட்னர், ஷர்துள் தாகூர், இம்ரான் தாஹிர்

19:36 (IST)11 Apr 2019
ராஜஸ்தான் பேட்டிங்

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

19:25 (IST)11 Apr 2019
வணக்கம் பாஸுங்களா...

என்ன சிஎஸ்கே மேட்சுக்கு ரெடியா? நாங்களும் ரெடி... உங்க கணிப்பு கண்ணாயிரமும் ரெடி... சென்னையில் வைத்து ராஜஸ்தானை நாம சம்பவம் பண்ணிட்டோம். இப்போ அவங்க ஊரான ஜெய்ப்பூருக்கு வந்திருக்கோம். என்ன நடக்கப் போகுது-னு பார்க்கலாம். நான் உங்கள் அன்பரசன் ஞானமணி லைவ் அப்டேட்ஸுக்காக....

Web Title:

Ipl 019 rr vs csk live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close