IPL 2019 RR vs KKR: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்ரல்.7) இரவு எட்டு மணிக்கு நடைபெற்ற போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்று அசத்தியுள்ளது.
மேலும் படிக்க - சாரி விராட் கோலி! பெங்களூருவின் 6வது தோல்வி! டெல்லி வெற்றி
Live Blog
IPL 2019: RR vs KKR
குல்கர்னி ஓவரில் முதல் பந்தில் க்ரிஸ் லின் கொடுத்த கேட்சை ராகுல் திரிபாதி கோட்டைவிட, அடுத்த பந்தில், அவரது லெக் ஸ்டம்ப்பை பந்து தாக்கியது. ஆனால், பைல்ஸ் கீழே விழாத காரணத்தால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. பந்து வேகமாக ஸ்டெம்ப் மீது மோதியும் பைல்ஸ் விழாதது எப்படி என்று தான் புரியவில்லை.
கண்ணாயிரம் - பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ்... இவங்க மூன்று பேரும் ஒரு சேர திணறியதை காணக் கிடைத்த நாள் இது. அரிதிலும் அரிது. மந்தமான பிட்ச் என்றாலும், அதை கச்சிதமாக பயன்படுத்திய தினேஷ் கார்த்திக், ஸ்பின் கொண்டு கடுமையாக அட்டாக் செய்ய, டெத் ஓவர்களை பிரசித் கிருஷ்ணாவும், அறிமுக வீரர் கர்னே-வும் மிக துல்லியமாக பிளேஸ் செய்தது வாவ் ரகம்...
எனினும், கொல்கத்தாவுக்கு இது சற்று கடினமான இலக்கு தான். ரசல் தான் ஒரே அச்சுறுத்தல். அவர் தரை வழியே அடிப்பதில்லை என்பதால், அவரது விக்கெட் க்ரூஷியல்.
ஆர்ஆர் - 40%
கேகேஆர் - 60%
பிரசித் கிருஷ்ணா வீசிய 18வது ஓவரில் இரண்டு நோ-பால் போடப்பட்ட போதும், அவையிரண்டும் பென் ஸ்டோக்ஸால் வீணடிக்கப்பட்டது. பிரசித் தாறுமாறாக போடுகிறார் என்பதில் சந்தேகமில்லை.
யப்பா இவரை மாதிரியான பவுலர்களை கன்சிடர் பண்ணுங்கப்பா. கண்ணுல ஒரு துளி பயம் கூட இல்ல...
மிக மிக மந்தமாக இருக்கும் ஜெய்ப்பூர் சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில், இப்போதுள்ள நிலைமைக்கு ராஜஸ்தான் 150 அடித்தாலே, டஃப் கொடுக்கலாம் போல... ஆனால், நீங்க ஸ்லோவா போட்டாலும், ஃபாஸ்ட்டா போட்டாலும் சிக்ஸ் அடிக்குற ரசல் இருக்குறத நினைச்சாத் தான் பீதியா இருக்கு
5 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் அடித்துள்ளது. இந்த 5 ஓவர்களும், ராஜஸ்தான் பொறுமையாக ஆடவில்லை. அடிக்க முடியவில்லை. ஷாட்களை விளாச முடியவில்லை. இந்த 5 ஓவர்களில், 3 ஓவர்கள் வீசிய பியூஷ் சாவ்லா மிகச் சிறப்பாக பந்துகளை பிளேஸ் செய்தார். கிரேட்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights