IPL 2019 RR vs KKR: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்ரல்.7) இரவு எட்டு மணிக்கு நடைபெற்ற போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்று அசத்தியுள்ளது.
மேலும் படிக்க – சாரி விராட் கோலி! பெங்களூருவின் 6வது தோல்வி! டெல்லி வெற்றி
ராஜஸ்தானை ஜெயப்பூரில் வைத்து சம்பவம் செய்திருக்கிறது கொல்கத்தா அணி. 140 ரன்களை இலக்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 13.5 ஓவர்களில் எட்டி அசத்தியிருக்கிறது.
இலக்கு பெரிதாக இல்லாத காரணத்தினால், ஆந்த்ரே ரசல்-க்கு பதில் ஷுப்மன் கில் இறக்கிவிடப்பட்டுள்ளார். இந்த ஸ்கோரை எல்லாம் நீ ஏன்பா போய் அடிக்கணும் சொல்லி உட்கார வச்சிட்டாங்க போல…
ராஜஸ்தானுக்கு இதைவிட அவமானம் இருக்க முடியாது!
கண்ணாயிரம் – இனிமேலும், நான் Prediction சொல்லனுமா? கொல்கத்தாவுக்காக, ஜெய்ப்பூரில் வெற்றி, மலர் மாலையுடன் காத்திருக்கிறது.
நரைனை தொடர்ந்து களமிறங்கிய உத்தப்பாவும், கேஷுவலாக பவுண்டரிகளை பறக்க விடுகிறார். உண்மையிலேயே பிட்ச் தான் மோசமா? இல்ல… கேகேஆர் பவுலிங் அவ்ளோ பிரமாதமா?
மந்தமான ஆடுகளத்தால் சொந்த மண்ணில் தாறுமாறாய் திணறியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால், கேகேஆர் ஓப்பனர்ஸ் பிரித்து மேய்ந்துள்ளனர். முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 91 ரன்கள்.
ரசல் எந்தளவுக்கு காட்டடியோ, அதற்கு சற்றும் குறைவில்லாத சாத்து மன்னன் க்ரிஸ் லின். ஆனால், அவரது பேட்டிங்-கிலும் சரி, அதிரடியிலும் சரி.. கண்சிஸ்டன்சி இல்லாத காரணத்தால் அவரது சுயரூபம் வெளியே தெரியவில்லை.
அடிக்க ஆரம்பிச்சா இடி தான்…
6 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா 65/0…..
இது ஜெய்ப்பூரா இல்ல கொல்கத்தாவா?
குல்கர்னி ஓவரில் முதல் பந்தில் க்ரிஸ் லின் கொடுத்த கேட்சை ராகுல் திரிபாதி கோட்டைவிட, அடுத்த பந்தில், அவரது லெக் ஸ்டம்ப்பை பந்து தாக்கியது. ஆனால், பைல்ஸ் கீழே விழாத காரணத்தால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. பந்து வேகமாக ஸ்டெம்ப் மீது மோதியும் பைல்ஸ் விழாதது எப்படி என்று தான் புரியவில்லை.
கிருஷ்ணப்பா கௌதமும் ஸ்பின் பவுலர் தான். ஆனால், அவரது ஓவரில், சுனில் நரைன் அடித்த ரன்கள் தான் இவை…
என்னடா இது… மந்தமான பிட்சு-னு சொல்லுறாய்ங்க… ஆனா, இவைங்க ஸ்பின்னரா இப்படி பொளந்திருக்காப்ள!!!
கொல்கத்தா அணியின் ஓப்பனர்கள், க்ரிஸ் லின் மற்றும் சுனில் நரைன் களமிறங்கியுள்ளனர்.
நாரையோ, கொக்கோ… அடிக்கச் சொல்லு பா
கண்ணாயிரம் – பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ்… இவங்க மூன்று பேரும் ஒரு சேர திணறியதை காணக் கிடைத்த நாள் இது. அரிதிலும் அரிது. மந்தமான பிட்ச் என்றாலும், அதை கச்சிதமாக பயன்படுத்திய தினேஷ் கார்த்திக், ஸ்பின் கொண்டு கடுமையாக அட்டாக் செய்ய, டெத் ஓவர்களை பிரசித் கிருஷ்ணாவும், அறிமுக வீரர் கர்னே-வும் மிக துல்லியமாக பிளேஸ் செய்தது வாவ் ரகம்…
எனினும், கொல்கத்தாவுக்கு இது சற்று கடினமான இலக்கு தான். ரசல் தான் ஒரே அச்சுறுத்தல். அவர் தரை வழியே அடிப்பதில்லை என்பதால், அவரது விக்கெட் க்ரூஷியல்.
ஆர்ஆர் – 40%
கேகேஆர் – 60%
கர்னே வீசிய கடைசி ஓவரில், ஸ்மித் மற்றும் பென் ஸ்டோக்ஸால் அடிக்கப்பட்ட ரன்கள் இது… இதிலிருந்தே பிட்ச் எவ்ளோ கொடூரமா இருக்கு-னு புரிஞ்சிகோங்க… கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு.
பிரசித் கிருஷ்ணா வீசிய 18வது ஓவரில் இரண்டு நோ-பால் போடப்பட்ட போதும், அவையிரண்டும் பென் ஸ்டோக்ஸால் வீணடிக்கப்பட்டது. பிரசித் தாறுமாறாக போடுகிறார் என்பதில் சந்தேகமில்லை.
யப்பா இவரை மாதிரியான பவுலர்களை கன்சிடர் பண்ணுங்கப்பா. கண்ணுல ஒரு துளி பயம் கூட இல்ல…
18 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித்தும், ஸ்டோக்ஸும் தலைகீழ் நின்று தண்ணி குடிக்கிறார்கள்… ம்ஹூம்….
உங்க நினைப்பு எங்கேயோ போறதுக்கு நாங்க காரணம் இல்லை… அவர் தனது கையுறையை மாற்றியுள்ளார்.
இப்போ அடிப்பாரு பாருங்க சிக்ஸு
16 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் 106 -3 .
எல்லாம் பிட்ச் படுத்துற பாடு…
அவரும் என்ன தான் பண்ணுவாரு… பந்து வேகமாகவும் பேட்டுக்கு வர மாட்டேங்குது… ஸ்பின்னையும் அடிக்க முடில… கர்னே ஓவரில், 6 ரன்களில், எல்ஐசி கட்டிட உயர கேட்ச் கொடுத்து வெளியேறினார் திரிபாதி.
கமான் பென் ஸ்டோக்ஸ்
மிக மிக மந்தமாக இருக்கும் ஜெய்ப்பூர் சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில், இப்போதுள்ள நிலைமைக்கு ராஜஸ்தான் 150 அடித்தாலே, டஃப் கொடுக்கலாம் போல… ஆனால், நீங்க ஸ்லோவா போட்டாலும், ஃபாஸ்ட்டா போட்டாலும் சிக்ஸ் அடிக்குற ரசல் இருக்குறத நினைச்சாத் தான் பீதியா இருக்கு
கணிப்பு கண்ணாயிரம் – உயிரற்று கோமாவில் இருப்பது போன்று தான் பிட்ச் செயல்பாடு இருக்கிறது. பேட்ஸ்மேன்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 160 அடிப்பது கடினமே. அப்படி அடித்துவிட்டால், வெற்றிக்காக கடும் சவால் அளிக்க முடியும்.
கர்னே வீசிய ஸ்லோ பந்தில், ஜோஸ் பட்லர் 37 ரன்களில் கேட்ச் ஆனார். கர்னே-வின் ஸ்லோ பந்தில், Cow Corner-ல் தூக்கி அடிக்க, ஷுப்மன் கில், ஒரு இன்ச் கூட நகராமல், சிக்ஸ் லைனில் கேட்ச் பிடிக்க, நம்ம பட்டூ அவுட்.
ராகுல் திரிபாதி இன்..
ஒரு வழியாக 11வது ஓவரில் 6 ரன் ரேட்டை தாண்டியது ராஜஸ்தான். ஜாலி..ஜாலி… அண்ணே கணிப்பு அண்ணே… 180 வந்துடுமா?
கண்ணாயிரம் – நான் 160 – 180 சொன்னேன்-பா… கோத்து விடாதா!
10 ஓவர்கள் ஆகப் போகுது.. இதுவரை ஒரு சிக்ஸர் கூட ராஜஸ்தான் அடிக்கல.. அந்தளவுக்கு கொல்கத்தாவின் ஸ்பின்னர்கள் பாடுபடுத்திவிட்டனர்.
ஆனால், களத்தில் நிற்பது இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் ஆச்சே!! ம்ம்ம்… பட்டையை கிளப்புங்கள்
இப்போ கூட ரன் ரேட் 6 தொடலை பாரேன்…
ராஜஸ்தான் 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. நமது கணிப்பு கண்ணாயிரம் அண்ணன் சொன்னது போன்று, பட்லரும், ஸ்மித்தும் 10 வது ஓவர் வரை நின்றுவிடுவார்கள் போல…
அண்ணனுக்கு ரெண்டு புரோட்டா பார்சல்ல்ல்லல்….
7 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. ரன் ரேட் – 5
களத்தில் நிற்பது ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித்
ஆனா, ஒரே நல்ல விஷயம் என்னன்னா, மேற்கொண்டு விக்கெட் ஏதும் போகல… மணிமேகல…
வேற யாரு? ஸ்மித்தை தான் சொல்றோம்… இந்த சீசனில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படி, ஸ்டீவ் ஸ்மித் ஆடவில்லை. ஒரு வருட தடைக் காலத்துக்குப் பிறகு, வார்னர் காட்டும் ‘தீப்பொறி திருமுகம்’, இவரிடத்தில் பார்க்க முடிவதில்லை.
5 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் அடித்துள்ளது. இந்த 5 ஓவர்களும், ராஜஸ்தான் பொறுமையாக ஆடவில்லை. அடிக்க முடியவில்லை. ஷாட்களை விளாச முடியவில்லை. இந்த 5 ஓவர்களில், 3 ஓவர்கள் வீசிய பியூஷ் சாவ்லா மிகச் சிறப்பாக பந்துகளை பிளேஸ் செய்தார். கிரேட்…
கண்ணாயிரம் – தொடக்கத்திலேயே ரஹானே அவுட்டானது பெரிய பின்னடைவு. இது தற்போது களத்தில் நிற்கும் ஜோஸ் பட்லர் – ஸ்மித்-க்கு தான் பிரஷர் தரும். இருவரும் 10 ஓவர்கள் வரை நிச்சயம் பார்ட்னர்ஷிப் போட்டாக வேண்டும்… அப்படி நடக்கும் பட்சத்தில், 160 – 180 சாத்தியமே!
கொல்கத்தா வீசிய முதல் 3 ஓவர்களில் அபாரமான கேம் பிளான் பளிச்சிட்டது.. உத்தப்பாவின் தூக்கம் வழிந்த பீல்டிங் தவிர, மற்ற அனைத்தும் அருமை!! அடுத்த 17 ஓவர்கள் எப்படி போகிறது என்று பார்ப்போம்…
பிரசித் கிருஷ்ணா-வின் இன் ஸ்விங் பந்தில், ரஹானே 5 ரன்களில் ப்ளம்ப் செய்யப்பட்டார்.
நல்ல வேளை… ரிவியூ கேட்டு வேஸ்ட் பண்ணல…
ராஜஸ்தான் அணியின் வழக்கமான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரஹானே, பட்லர் ஜோடி களமிறங்கியது.
ரசல் இருக்காப்ள ரஹானே… நல்லா அடிச்சு வச்சுக்கோங்க…
ஹாய், ஹலோ… விராட் கோலியின் பெங்களூரு அணியுடைய 6வது தோல்வியை வேதனையுடன் லைவ் செய்த பிறகு, நமது ஐஇ தமிழ் உடனடியாக ஜெய்ப்பூர் பறந்துள்ளோம்.
எதுக்கா?
ராஜஸ்தான் vs கொல்கத்தா மேட்ச் லைவுக்கு தான்…