IPL 2019 DC vs SRH Live Score Updates: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று(ஏப்ரல்.4) இரவு 8 மணிக்கு டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
Web Title:Ipl 2019 srh vs dc live cricket score updates
கண்ணாயிரம் - நடப்பு சீசனில் பலம் வாய்ந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் வேகப்பந்து வீச்சு பலவீனத்தை, மும்பை எப்படி அம்பலப்படுத்தியதோ, அதைப் போன்று, மற்றொரு பலம் பொருந்திய அணியான சன் ரைசர்ஸின் மிடில் ஆர்டர் பலவீனத்தை, தோல்விப் பெற்றாலும் டெல்லி அணி இன்று அம்பலப்படுத்தியது.
சம்பந்தப்பட்ட அணிகள் இதை மாற்றிக் கொண்டால் தான் கோப்பை பற்றி சிந்தித்துப் பார்க்க முடியும்.
அப்புறம் என்ன... அண்ணனே சொல்லிட்டாரு... ஆ..ஆ... கெளம்பு கெளம்பு..
சன் ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், பேர்ஸ்டோ விரைவில் ஆட்டமிழந்தால், சன் ரைசர்ஸ் என்ன ஆகும் என்று இன்று தெரிந்து விட்டது. இவ்வளவு பலவீனமான மிடில் ஆர்டர் கொண்டதா சன்!?
17 ஓவர்கள் முடிவில், சன் ரைசர்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.
இது என்ன டா... சன்னுக்கு வந்த சோதனை!
டெல்லியில் ஏதோ ஒன்று நடக்கிறது. சன் ரைசர்ஸ் அணியின் அடுத்த விக்கெட்டாக தீபக் ஹூடா 10 ரன்களில் அவுட். 24 பந்துகளில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை... கைவசம் 5 விக்கெட்டுகள்
ஹைதராபாத் அணியில் இப்போது ஹீரோவாகிவிட்ட நம்ம சென்னை பையன் விஜய் ஷங்கர், 16 ரன்களில் அக்ஷர் படேல் ஓவரில், ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, நான்காவது விக்கெட்டை இழந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
நீங்க யாரை நினைக்குறீங்க? நான் மனீஷ் பாண்டேவை சொன்னேன்... ஐபிஎல் வரலாற்றிலேயே சதம் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்ற மனீஷ் பாண்டே, இஷாந்த் ஷர்மா ஓவரில், 10 ரன்களில் கேட்ச் ஆனார்.
அடுத்தப் போட்டியில் இங்ரம் பதிலாக காலின் மன்ரோ-வுக்கு வாய்ப்பளிக்கலாம். மிடில் ஆர்டரில் செய்ய வேண்டிய மிக முக்கிய மாற்றம் இதுதான். இந்த சீரிஸில் டோட்டலாக இங்ரம் ஃபெயிலியராகி இருக்கிறார்.
தல... 2 விக்கெட் அடுத்தடுத்து போயிட்டு... டெல்லி ஜெயிக்க வாய்ப்பிருக்கா?
கண்ணாயிரம் - டெல்லி இப்போ ஊறுகா விற்கக் கூட வாய்ப்பில்லை தம்பி...
என்னண்ணே இப்டி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க!!
18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர், ரபாடா ஓவரில், க்ரிஸ் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 8 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள்...
ராகுல் டெவாட்டியா ஓவரில், 28 பந்துகளில் 48 ரன்கள் விளாசிய ஜானி அவுட்...
இனி வயசுக்கு வந்தா என்ன... வராட்டி என்ன!
ரன் ரேட் 10 என்கிற விகிதத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்து வருகிறது. ரசிகர்கள், அனைவரும் விரைவில் இல்லங்களுக்கு பத்திரமாக திரும்பிச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில், சன் ரைசர்ஸ் ஆடி வருகிறது...
லமிச்சனே வீசிய 2வது ஓவரில், ஒரு பிரம்மாண்ட சிக்ஸ் மற்றும் பவுண்டரி விளாசியுள்ளார் ஜானி. இந்த ஓவரில், வார்னருக்கு ஒரு எல்பிடபிள்யூ ரிவியூ கேட்கப்பட்டது. விக்கெட் கீப்பர் பண்ட் கேட்க வேண்டாம் என சொல்லியும், பவுலர் சொன்னதால் கேப்டன் ஷ்ரேயாஸ் கேட்க, எல்லாம் வீணாய் போனது.
லமிச்சனே வீசிய முதல் ஓவரில், தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தனது இன்னிங்ஸுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தார் ஜானி பேர்ஸ்டோ
சித்தார்த் கவுல் வீசிய கடைசி ஓவரில், கடைசி மூன்று பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 14 ரன்கள் திரட்டினார் அக்ஷர் படேல்.... இதனால் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.
சித்தார்த் கவுல் ஓவரில், ரபாடா 3 ரன்களில் வெளியேறினார்.
அண்ணே... பவுலிங்கில் உங்களை நம்பித் தான் டெல்லியே இருக்கு
கடைசி ஓவரில் 2 சிக்சர்களையாவது அடிப்பார் என டெல்லி ஆவலோடு எதிர்பார்க்க, டெல்லியின் கடைசி ஆயுதமும் மண்ணோடு மண்ணாகிப் போனது. புவனேஷ்வர் ஓவரில், க்ரிஸ் மோரிஸ் 17 ரன்களில் கேட்ச் ஆனார்.
வாங்கண்ணே.. டெல்லி தேறாது போல...
கண்ணாயிரம் - இப்படி விளையாடினால், எந்த அணியும் தேறாது... அதிரடியை மட்டும் வைத்துக் கொண்டு ஜெயித்துவிடலாம் என ரிக்கி பாண்டிங் கணித்தது பொய்த்து போய் விட்டது. இனி, ஸ்டிராடஜியை மாற்றியே தீர வேண்டும்....
ரஷீத் கான் ஓவரில், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் கிளீன் போல்ட் ஆக, முழு சரண்டரை நோக்கி டெல்லி கேபிடலஸ்
15 ஓவர் ஆகிறது. களத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும், க்ரிஸ் மோரிஸும் உள்ளனர். இந்த இரு பெரும் ஹிட்டர்களும் இறுதி வரை நின்றுவிட்டால், அட்லீஸ்ட் 150 ரன்னாவது அடிக்கலாம்... இதை வைத்து எதிரணியை டிஃபண்ட் செய்ய முயற்சிக்கலாம்.
அடக்கடவுளே.... கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையையும் வீணாக்கிய கோலின் இங்ரம் 5 ரன்களில் சித்தார்த் கவுல் ஓவரில், இந்தியாவின் பெஸ்ட் ஃபீல்டர்களில் ஒருவரான மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
காலக் கொடுமை!
சந்தீப் ஷர்மா, ரொம்ப காலமா பஞ்சாப் அணிக்காக பந்து வீசியவர், தற்போது ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். ஓவரை கன்டெய்ன் செய்வதில் இவர் ஸ்பெஷலிஸ்ட்... 2015ல் இந்திய அணிக்காக, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதன்பின், லக் இவருக்கு கிட்டவில்லை.
அதன்பின்னர், ஐபிஎல்-லிலும் இவரது பழைய ஃபார்ம் இல்லை.
எப்படியோ வந்திருக்க வேண்டிய பவுலர்...
குருவே.. டெல்லி-யின் நிலைமை மகா மட்டமாக போயிட்டு இருக்கு... அவங்க எவ்ளோ அடிப்பாங்க... கணிப்பை அவுத்து விடுங்க குருவே...
இங்ரம் ஒரு 30
க்ரிஸ் மோரிஸ் ஒரு ஃபாஸ்ட் 27,
ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு 60 னு அடிச்சா, டெல்லி பிழைக்க வாய்ப்பிருக்கு. இல்லைனா கஷ்டம்
யோவ்.... தண்ணி குடிக்க விடுங்கய்யா... இப்டி வரிசையா அவுட்டான என்ன பண்றது?
சந்தீப் ஷர்மா ஓவரில், ராகுல் டெவாட்டியா 5 ரன்களில் அவுட். 61 ரன்னுக்கெல்லாம் 4 விக்கெட்...
ரஷித் கான் ஓவரில், ரிஷப் பண்ட் 5 ரன்களில் சிக்ஸ் லைனில், தீபக் ஹூடாவின் வாவ் கேட்சால் வெளியேறினார்...
சில ஐபிஎல் டீம்களுக்கு மட்டும் சூனியம் வச்சிருப்பாய்ங்க போல...
அதிரடி மன்னன்... சிக்சர்களின் காதலன், அப்புறம் என்ன டா?... ஆங்.. சிக்குன்னு இருக்கும் நாயகன்... அண்ணன் ரிஷப் பண்ட் அவர்கள் தற்போது மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கியுள்ளார்.
முகமது நபி ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆடிய தவான், 12 ரன்களில் கேட்ச் ஆனார்.
இந்த சீசனில் தவான் ரொம்பவே அமைதி காக்கிறார் என்று நாம் முன்பே சொல்லியிருந்தோம். இது அமைதி கேட்டகரி-ல கூடாது போலிருக்கே...12 ரன்-லாம் எந்த மூலைக்கு தவான் ஜி...
சிக்ஸ்... தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்ததால், தடுமாற்றமான இன்னிங்ஸ் ஆடி வந்த டெல்லி அணிக்கு ஒரு சிறிய டானிக்காக, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், சித்தார்த் கவுல் ஓவரில், லாங் ஆனில் ஒரு ஸ்வீட் சிக்ஸ் அடித்துள்ளார்.
வாரே வா...
என்ன ப்ரித்வி ப்ரோ... போன மேட்சு டக் அவுட் ஆனீங்க... இந்த மேட்சுலயும் 11 ரன்னுலையே போயிட்டீங்க... சச்சினே அக்மார்க் சீல் குத்தின பிளேயர் ஆச்சே ப்ரோ நீங்க... க்யா ஹுவா?
இந்த சீசனில் குச்சிகள் பறந்து பார்த்து இருக்கீங்களா? அதுவும், ஆஃப் குச்சி மூணு டைவ் அடிச்சு பார்த்து இருக்கீங்களா? ப்ரித்வி விக்கெட்டை பாருங்க. புவனேஷ் குமார் ஓவரில், 11 ரன்களில் ப்ரித்வி ஏவுகணை வங்கக் கடல் பக்கம் விழுந்தது.
டெல்லி தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா களமிறங்கினர்.
சிங்கம் களம் இறங்கிடுச்சே!!!
டெல்லி அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், இதுவரை இந்த சீசனில் பெரும் அமைதி காத்து வருகிறார். தவான் என்கிற பேட்ஸ்மேன் எங்கே என்று சல்லடை போட்டு தேடி வேண்டியிருக்கிறது. ஒருவேளை புயலுக்கு முன் அமைதியோ? அல்லது அமைதிக்கு பின் புயலோ?
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(c), ரிஷப் பண்ட்(w), கோலின் இங்ரம், க்ரிஸ் மோரிஸ், அக்ஷர் படேல், ராகுல் டெவாட்டியா, காகிசோ ரபாடா, சந்தீப் லமிச்சனே, இஷாந்த் ஷர்மா
ஜானி பேர்ஸ்டோ(w), டேவிட் வார்னர், விஜய் ஷங்கர், யூஸுப் பதான், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ரஷித் கான், முஹம்மத் நபி, புவனேஷ் குமார்(c), சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்
டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் புவனேஷ் குமார் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
அண்ணே வணக்கம்ணே.... எப்படி இருக்கீங்க...
கண்ணாயிரம் - தம்பி.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாசகர்கள்கிட்ட நீ என்னை என்ன சொல்லி அறிமுகப்படுத்தின-னு தெரியும்... இருந்தாலும் பரவாயில்ல...ஐ ஆம் ஃபைன்...
இன்னைக்கு மேட்சுல யாருக்கு-னே வெற்றி வாய்ப்பு?
கண்ணாயிரம் - டெல்லி, ஹைதராபாத் என இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.. இந்த போட்டியின் முடிவை கணிப்பது கடினம். இருந்தாலும், ஹைதராபாத் - 60%, டெல்லி 40% என வெற்றி வாய்ப்பு இருக்கு!
பெங்களூருவுக்கு எதிரான கடைசிப் போட்டியின் சாத்து முறை நிகழ்த்தி சதம் விளாசியது ஜானி பேர்ஸ்டோ, வார்னர் ஜோடி. இந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலிய ஜோடியை ஆரம்பத்திலேயே பிரித்தால், களமாடலாம். இல்லையெனில், அவர்கள் மட்டுமே ஆடுவார்கள்.
உஷார் டெல்லி... உஷார்
என்னடா, ஆரம்பமே ரணகளமா இருக்குன்னு பார்க்குறீங்களா? மேட்ச் அப்படி... உள்ளூரில் கோட்டை காட்டும் ஹைதராபாத், வெளியூரில் இந்த சீசனில் இதுவரை ஜெயிக்கவில்லை. ஸோ, இன்று அவர்கள் வென்று கெத்து காட்டியே ஆக வேண்டும். அதேசமயம், என் ஊரில் நான் தோற்பதா என்று 'பயமறியா சிங்கங்கள்' என்று வர்ணிக்கப்படும் ஐயரின்.... ஐ மீன் ஷ்ரேயாஸ் ஐயரின் டெல்லி கேபிடல்ஸ் கர்ஜிக்கிறது.
இந்த பரபரப்பான போட்டியை உங்களுக்கு பிரத்யேகமான லைவ் அப்டேட்ஸுடன் வழங்க காத்திருப்பது நான் அன்பரசன் ஞானமணி... அப்புறம், ஒரு கேரக்டர் இங்க குறுக்கா, மறுக்கா சுத்திக் கிட்டு இருக்குது... கணிப்பு கண்ணாயிரம் என்ற அதே கேரக்டர் தான்.... நேற்று வரை அண்ணா-னு தான் வாய் நிறைய கூப்பிட்டுகிட்டு இருந்தேன்... ஆனா, எப்போ நேற்று சிஎஸ்கே கண்டிப்பா தோற்கும்-னு கணிப்பு சொல்லி தோற்கடிச்சாரோ... இனி ஓட்டும் இல்லை,,, உறவும் இல்லை-னு சொல்லியாச்சு.
என்னா அடி நேத்து!!!