IPL 2020 CSK Players List: அதே 'கூட்டுக் குடும்பம்' ஃபார்முலா! - ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி

IPL 2020 CSK Team Full Players List, Full Squad: வேகப்பந்து வீச்சுக்கு ஜோஷ் ஹேசில்வுட்டை எடுத்திருப்பது 'வாவ்' மொமன்ட். இதனால், சிஎஸ்கேவின் பேஸ்...

IPL 2020 CSK Team Players List: ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற கூட்டுக் குடும்ப ஃபார்முலாவைத் தான் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபாலோ செய்து வருகிறது. இது சிஎஸ்கேவின் ஃபார்முலா என்று சொல்வதை விட, கேப்டன் தோனியின் ஃபார்முலா என்று சொன்னால் தான் கச்சிதமாக இருக்கும்.

தனக்கு ஏற்ற, தனக்கு செட்டாகும் டீமை கட்டமைத்து வைத்திருக்கும் தோனி, உலகின் வேறு எப்பேற்பட்ட ராக் ஸ்டார் கிரிக்கெட்டராக இருந்தாலும் அணியில் எடுத்துக் கொள்ள மாட்டார். இது தோனியின் ஸ்டைல். சுமாரான டீமை வைத்துக் கொண்டே, ஒவ்வொரு முறையும் குறைந்தது அரையிறுதிப் போட்டி வரை அணியை கரை சேர்ப்பது தோனியின் வாடிக்கை. பெரும்பாலும் இறுதிப் போட்டியில் தோற்பது அணியின் சிஎஸ்கே அணியின் வாடிக்கை.


இம்முறை நடந்த ஏலத்திலும், எதிர்பார்த்தபடியே பெரியளவில் அலட்டிக் கொள்ளாத தோனி&கோ செலக்டிவாக சில வீரர்களை மட்டும் எடுத்து அணியை லைட்டாக பட்டி பார்த்திருக்கிறது.

ஏலத்தில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரனை 5.5 கோடிக்கு எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். உண்மையில், இது ஒரு செம மூவ். சாம் குர்ர்ன் இந்திய பிட்ச்களில் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர். டெடிகேஷன், டிகாஷன் உள்ள வீரர். டெத் ஓவர்களில் இவரது ஸ்பெல் கடந்த சீசனில் பேசப்பட்டது. பஞ்சாப் அணி நிர்வாகம் இவரின் பெர்ஃபாமன்ஸை பார்த்து, இவருக்கான ஸ்பேஸை பேஷாகவே கொடுத்தார்கள். ஆனால், அதனை முழுமையாக சாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இப்போது, சர்வதேச தரத்தில் இவரது ரேட்டிங் ஓரளவிற்கு உயர்ந்துள்ளது. எனினும், தோனி போன்ற பழுத்த அனுபவசாலி ஸ்டெம்ப்புகளுக்கு பின்னால் நிற்பதால், அதன் பிரதிபலிப்பு சாம் பவுலிங்கில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று முழுமையாக நம்பலாம்.

தவிர, இவரது ‘பேபி பி அதிரடி ஷாட்கள்’ அணியின் ரன் ரேட்டை எதிர்பார்த்ததை விட, 15 ரன்கள் கூடுதலாக உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அடுத்ததாக பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு எடுத்த சிஎஸ்கே-வின் கேம் பிளான் சற்று புரியவில்லை. எனினும், ஹர்பஜனுக்கு சரியான மாற்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அண்டர் எஸ்டிமேட் பவுலர் அல்ல பியூஷ் சாவ்லா. சற்று காத்திரமான வீரன் தான். தனது ஓவரில் சிக்ஸ் அடித்துவிட்டால், தனது கான்ஃபிடன்ட் லெவல் குறையாமல் பந்து வீசுவது இவரது நம்பர்.1 திறன். தவிர, பேட்டிங்கிலும் சில பவுண்டரிகள் கியாரண்டி தருகிறார். ஆனால், 6.75 கோடி கொடுத்து எடுத்திருக்க வேண்டுமா? என்ற நெருடலைத் தவிர, பியூஷ் சாவ்லாவுக்கு மகிழ்ச்சியுடன் வெல்கம் கொடுக்கலாம்.

வேகப்பந்து வீச்சுக்கு ஜோஷ் ஹேசில்வுட்டை எடுத்திருப்பது ‘வாவ்’ மொமன்ட். இதனால், சிஎஸ்கேவின் பேஸ் டிபார்ட்மென்ட் மேலும் பலம் பெறுகிறது.

சையத் அலி முஷ்டக் டிராபி 2019 சீசனில், 12 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் எடுத்த சாய் கிஷோர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே எடுத்திருக்கிறது. இந்த சீசனில் அதிக விக்கெட் டேக்கர் இவர் தான்.

ஏலத்திற்கு முன்னர் விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் ஷோரே, ஸ்காட் குகலீஜ்ன், சைதன்யா பிஷ்னோய்

சி.எஸ்.கே தற்போதைய அணி:

பேட்ஸ்மேன்கள்

டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, எம் விஜய், ருதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா

பந்து வீச்சாளர்கள்

ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம். ஆசிப், லுங்கி இங்கிடி, ஷார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா (ரூ. 6.75 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (ரூ .2 கோடி), ஆர் சாய் கிஷோர் (ரூ .20 லட்சம்)

ஆல் ரவுண்டர்கள்

ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மோனும்குமார், கர்ன் சர்மா, சாம் குர்ரன் (ரூ .5.5 கோடி)

விக்கெட் கீப்பர்கள்

எம்.எஸ்.தோனி, என் ஜெகதீசன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close