scorecardresearch

வழக்கத்திற்கு மாறான சிக்ஸர்கள் – யெஸ்! தோனி ரிட்டர்ன்ஸ் (வீடியோ)

2005 காலக்கட்டத்தில் சடையனாக வந்து எதிரணியின் பேஸ்மெண்ட், பில்டிங், சீலிங் என அனைத்தையும் தனது அதிரடியால் தகர்த்தெறிந்த தோனியை காண முடிந்தது

வழக்கத்திற்கு மாறான சிக்ஸர்கள் – யெஸ்! தோனி ரிட்டர்ன்ஸ் (வீடியோ)
தனது ஃபார்மை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை

விண்டேஜ் தோனியைப் பார்த்து என்ன ஒரு 10, 12 வருஷம் இருக்குமா? எப்போ அவர் கேப்டன் ஆனாரோ, அப்போதே தனது ‘அதிரடி’ எனும் முகத்தில், பொறுப்பு எனும் மாஸ்க்கை மாட்டிக் கொண்டார்.

கேப்டன் பதவியில் இருந்து முன்பே விலகினாலும், ‘தி உலகின் பெஸ்ட் ஃபினிஷர்’ , ‘தோனி இன்னும் அவுட் ஆகல-ல?’ போன்ற தன்னை சுற்றி வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட் கேள்விகளுக்கும், முத்திரைகளுக்கும் பிடித்தோ, பிடிக்காமலோ கட்டுப்பாட்டு, தனது மாஸ்க்கை கழட்டாமல் வைத்திருந்தார்.

இத்தனை ஆண்டுகால இந்த சுமைக்கு, ஆகஸ்ட் 15 அன்று, தனது கேஷுவல் ஸ்டைலிலேயே ஜஸ்ட் ஒரு ‘இன்ஸ்ட்டா’ பதிவில் தனது ஓய்வை அறிவிக்க, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ஐபிஎல்-ல் அவரது வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

தமிழகத்தின் மாரியப்பன், ரோஹித் ஷர்மாவுக்கு கேல் ரத்னா விருது!

சிஎஸ்கே டீமும் இன்று(ஆக.21) ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப, செப். 19 எனும் நாளுக்காக ரசிகர்கள் ஹெவியாக வெயிட் செய்துக் கொண்டிருக்க, சிஎஸ்கே ட்விட்டர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிட்டு அதற்கு ஃபியூயல் சேர்த்திருக்கிறது.

சென்னை சேப்பாக்கில் தோனியின், வழக்கத்துக்கு மாறான அதிரடியை அப்படியே பதிவு செய்து வெளியிட்டுள்ளது சிஎஸ்கே.

2005 காலக்கட்டத்தில் சடையனாக வந்து எதிரணியின் பேஸ்மெண்ட், பில்டிங், சீலிங் என அனைத்தையும் தனது அதிரடியால் தகர்த்தெறிந்த தோனியை காண முடிந்தது.

பந்துகள் அனைத்தும் தாறுமாறாக இன்ஸ்டண்ட் சிக்ஸர்களாக பறந்து கொண்டிருக்க, அதனை கவனித்த சக வீரர்களுக்கு மட்டும் புரிந்தது ஏன் இந்த உறுமல் என்று!.

தோனியை இத்தனை ஆண்டுகளாக ஃபாலோ செய்யும் நமக்கு மட்டும் தெரியாதா என்ன?

ஆம்! தேசிய கடமையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இனி சர்வதேச கிரிக்கெட்டுக்காக, தனது உடலை பொத்தி பொத்தி பாதுகாக்க தேவையில்லை.

ரிஸ்கி டைவ் வேண்டாம் என்ற மனநிலை இனி தேவையில்லை

எல்லாவற்றுக்கும் மேலாக, தனது ஃபார்மை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை.

‘பொறுப்பு’ எனும் மாஸ்க் கழட்டப்பட்டு, ‘அதிரடி’ எனும் ஒரிஜினல் முகத்துக்கு தோனி திரும்பியிருக்கிறார் என்பதற்கு சான்று இந்த வீடியோவில் ‘டவுன் டூ தி டிராக்’ கிளைமேக்ஸ் சிக்ஸும், அதற்கு பறக்கும் ரெய்னாவின் விசிலும்!.

யெஸ்! தோனி ரிட்டர்ன்ஸ்!!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2020 dhoni chennai super kings