CSK VS KKR final Tamil News: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன.
It's Finale Day! Time to shower Whistles and 💛! Are we ready Super fans? 🥳#CSKvKKR #IPL2021Final #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/wYn865035A
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 15, 2021
கடந்த சீசனில் (2020) லீக் சுற்றோடு வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் எழுச்சி பெற்றது. அந்த அணி முதல் அணியாக பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறியதோடு முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. இதேபோல், இந்த சீசனில் இந்திய மண்ணில் நடந்த ஆட்டங்களில் தோல்வியை தழுவி பெரும் பின்னடைவை சந்திருந்த கொல்கத்தா அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 7 ஆட்டங்களில் 2-யை தவிர மற்ற 5 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தது. தொடர்ந்து நடந்த பிளே- ஆப் மற்றும் 2வது தகுதி சுற்றில் பெங்களூரு மற்றும் டெல்லியை அணிகளை வீழ்த்திய அந்த அணி இறுதிப்போட்டி வாய்ப்பை வசப்படுத்தியது.
𝐖𝐇𝐀𝐓𝐄𝐕𝐄𝐑 𝐈𝐓 𝐓𝐀𝐊𝐄𝐒. #KKR #CSKvKKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/D6fS22nu2H
— KolkataKnightRiders (@KKRiders) October 15, 2021
இந்நிலையில், இன்று பல சுவரஷ்யங்களுடன் இந்த இரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி அரங்கேறவுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணையாளருமான சடகோபன் ரமேஷ், சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோரின் பந்துவீச்சு தான் கொல்கத்தா - சென்னை அணிகளின் வெற்றியை தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர் "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டிற்கு சேர்த்துவைத்து விளையாடி தற்போது இறுதிப்போட்டிக்கு வந்துள்ளார்கள். இறுதிப்போட்டியில் சென்னை அணியினர் வெற்றி பெற கொல்கத்தாவின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் வீசும் 8 ஓவர்களை திறம்பட ஆட வேண்டும். இந்த இருவரின் பந்துவீச்சை பொறுத்துதான் கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பும் உள்ளது." என்றார்.
இறுதிப்போட்டி தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் ராதா கிருஷ்ணனுடன் (ஆர்.கே) நாம் நடத்திய உரையாடலில் அவர், "எந்தவொரு இறுதிப்போட்டியும் ஈஸியான ஒன்றாக இருந்ததில்லை. இன்றைய ஆட்டமும் அப்படி தான் அமையும் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் கொல்கத்தா அணியில் இரு அபாயகரமான (வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன்) பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"கொல்கத்தா அணி இந்திய மண்ணில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருந்து. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்த அணி நல்ல காம்பேக் கொடுத்துள்ளது. இதேபோல் அந்த அணியின் வெற்றியும் சுவாரசியமான ஒன்றாகவே இருந்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் அது தொடரும் என்றே நினைக்கிறேன்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சார்ஜா ஆடுகளம் ஒரு மந்தமான ஆடுகளமாக இருப்பதால் அங்கு சுழற்பந்து வீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது. ஆனால், அபுதாபி, துபாய் போன்ற மைதானங்கள் வேகப்பந்துவீச்சிற்கு நன்கு ஒத்துழைத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே சென்னை அணியிடமிருந்து நல்ல பந்துவீச்சை எதிர்பார்க்கலாம் என சடகோபன் ரமேஷ் தெரிவிக்கிறார்.
கொல்கத்தாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், சென்னை அணியின் தொடக்க வீரர்கள் மிகச்சிறப்பாக சமாளித்து அணிக்கு தரமான தொடக்கம் கொடுத்துள்ளார்கள் என வர்ணனையாளர் ஆர்.கே தெரிவித்துள்ளார்.
"சென்னை அணியின் ஃபாஃப் டு ப்ளெசிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி எல்லா பந்து வீச்சாளர்களையும் அட்டாக் செய்து ஆட நினைப்பதில்லை. பவர் பிளேவின் போது வருண் சக்கரவர்த்தி - சுனில் நரைன் பந்துவீச வந்தால், வருண் சக்கரவர்த்தியை டு ப்ளெசிஸ் எதிர்கொள்வார். சுனில் நரைனை ருதுராஜ் பார்த்துக்கொள்வார்." என்றும் அவர் தெரிவித்தார்.
"சென்னை அணிக்கு தற்போது வரை நல்ல தொடக்கம் கிடைத்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபாஃப் டு ப்ளெசிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் வலுவான ரன்களை சேர்த்துள்ளனர். குறிப்பாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (603 ரன்) அழுத்தமான நேரத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முக்கியமான ஆட்டங்களில் அணி நல்ல ஸ்கோரை எட்ட பங்காளித்துள்ளார். அவருடைய அதிரடி ஆட்டம் இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம் என்று சடகோபன் ரமேஷ் தெரிவிக்கிறார்.
கொல்கத்தாஅணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர் – சுப்மன் கில் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் இந்த ஜோடியை தொடர்ந்து ஊக்கப்படுத்தியும் வருகிறார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கும் நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி போன்ற மற்ற வீரர்களும் அணிக்கு தேவையான ரன்களை சேர்க்கின்றனர். எனினும், கொல்கத்தா அணி இந்த வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுக்கும் பட்சத்தில் அந்த அணி ரன்கள் சேர்க்க திணறும் என்கிறார் வர்ணனையாளர் ஆர்.கே.
மேலும் அந்த அணியின் மிடில்-ஆடரில் களமிறங்கும் வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகின்றனர். இதனால் அந்த அணி தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தால் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி நிச்சயம் ஆட்டம் காணும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஐபில் கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 முறை (2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதில் 3 முறை (2010, 2011, 2018 ) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது 9வது முறையையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அந்த அணி கொல்கத்தா அணியை 2 வது முறை இறுதிப்போட்டிக்கான களத்தில் சந்திக்கிறது.
இதுவரை 2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய (2012, 2014) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது அந்த அணி 3-வது பட்டத்துக்கு குறிவைத்துள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.