IPL 2021, RR vs DC Team Predicted Playing 11 for Today Match LIVE Updates: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரின் வெற்றிடத்தை சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஜோஸ் பட்லர், சிவம் துபே மற்றும் ரியான் பராக் போன்றோர் உள்ளனர். தொடரின் முதல் ஆட்டத்தில் பெரிதும் சோபிக்கதாக மனன் வோஹ்ரா (12), பட்லர் (25) டியூப் (23), பராக் (25) ஆகிய வீரர்கள் இன்றை ஆட்டத்தில் பேட்டை சுழற்றி அசத்துவார்கள் என்று நம்பலாம்.
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்த இளம் வீரர் சேதன் சாகரியா, இந்த போட்டியிலும் விக்கெட் வேட்டையை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். இந்த ஆட்டத்தில் இறுதி வரை போராடிய அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உத்வேகத்துடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்கும் டெல்லி அணி அதன் பேட்டிங் வரியில் வலுவான நிலையில் உள்ளது. சிஎஸ்கே அணிக்கெதிரான ஆட்டத்தில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா ஜோடி 138 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.
துல்லியமாக பந்துகளை வீசிய கிறிஸ் வோக்ஸ் (2/18), அவேஷ் கான் (2/23) போன்ற பந்து வீச்சாளர்கள் தங்களின் பலத்தை நிரூபித்துள்ளனர். மேலும் அந்த அணியில் உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், டாம் குர்ரான், அமித் மிஸ்ரா மற்றும் ஸ்டோய்னிஸ் போன்ற பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சில் இன்றை ஆட்டத்தை சுவாரஷ்யமானதாக மாற்றுவார்கள் என நம்பலாம். அசுர பலம் பொருந்தி காணப்படும் இந்த இரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)
டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மிடில்-ஆடரில் களமிறங்கிய மில்லர் அரைசதம் அடித்து உதவினார். தொடர்ந்து களமிறங்கிய ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ் ஜோடி சிறிது நேரம் நிதானம் காட்டவே அந்த அணிக்கு தேவையான ஸ்கோர் வந்து சேர்ந்தது. அவ்வப்போது பேட்டை சுழற்றி சிக்ஸர்களை பறக்கவிட்ட மோரிஸ், இறுதி ஓவரில் 2 சிக்ஸர்களை சிதற விட்டு கெத்து காட்டினார். 18 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட மோரிஸ் அந்த அணியின் பினிஷர் அவதாரம் எடுத்துள்ளார்.
கடந்த சீசனில் நடந்த 2 போட்டிகளில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவிய ராஜஸ்தான், இந்த சீசனில் பதிலடி கொடுக்கும் விதமாக அந்த அணியுடனான முதல் லீக் போட்டியை வென்று வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. சென்னையுடனான முதல் ஆட்டத்தில் வென்ற டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த ராஜஸ்தான் அணிக்கு ஆறுதல் தரும் விஷயமாக, அந்த அணியின் டேவிட் மில்லர் அரைசதம் கடந்தார். மேலும் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் கடந்த மில்லர் 15.5 ஓவரில் அவேஷ் கான் வீசிய பந்தில் லலித் யாதவ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி அதன் முன்னணி வீரர்களான மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் சிவம் டியூபே ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், துவக்க வீரர் ஜோஸ் பட்லரின் விக்கெட்டையும் பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது.
ராஜஸ்தான் அணியின் அசாத்திய பந்து வீச்சால் டெல்லி அணியின் முக்கிய வீக்கெட்டுகளை சிரித்தது போல், தற்போது பந்து வீசி வரும் டெல்லி அணி ராஜஸ்தான் அணியின் பாணியை தொடர்ந்துள்ளது. அந்த அணியின் முக்கிய வீரர்களான மனன் வோஹ்ரா, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுத்துள்ளது டெல்லி அணி.
பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாகவே பந்துகளை வீசியுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்திய அந்த அணிக்கு தற்போது 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியை பந்து வீச்சில் மிரள செய்த உனட்கட் 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிஸூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சிற்கு தாக்குபிடிக்காமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணியை, அதன் கேப்டன் ரிஷாப் பந்த் சிறிது நேரம் தடுத்து நிறுத்தினார். இதற்கிடையில் சிக்ஸர் ஏதும் அடிக்காமல் 9 பவுண்டரிகளை மட்டும் ஓடவிட்டு அரைசதம் கடந்த பந்த், ரன் ஓட முயலுகையில், அதை மடக்கி பிடித்த ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் ஸ்டம்ப்பை நோக்கி நேராக வீசவே, பந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. பந்த் அவுட்டா இல்லையா என்பதை டிவி கூறுவதற்குள், தான் நிச்சம் அவுட் தான் என தெரிந்த பந்து தலையை குனிந்தவாறு வெளியேறினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், பிருத்வி ஷா தங்கள் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், பின்னர் களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே, மார்கஸ் ஸ்டோய்னிஸ் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்து, சோகத்துடன் பெவிலியன் திரும்பினர். 10 ஓவர்களில் அந்த அணியின் முக்கிய விக்கெட்டுகளை சாய்க்கும் திட்டத்துடன் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், பிருத்வி ஷா விக்கெட்டை வீழ்த்திய , ராஜஸ்தான் அணியின் ஜெய்தேவ் உனட்கட், பிருத்வி ஷாவின் விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கிய அஜிங்க்யா ரஹானேவை வெளியேற்றியுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர் பிருத்வி ஷா, ராஜஸ்தான் அணியின் ஜெய்தேவ் உனட்கட் வீசிய 2 ஓவரில் ஆட்டமிழ்ந்த நிலையில், அந்த அணியின் ஸ்டார் துவக்க வீரர் ஷிகர் தவான் உனட்கட் வீசிய 4 வது ஓவரில் அவுட் ஆகி நடையை கட்டினார். தொடக்க ஆட்டக்காரர்களை கதி கலங்க செய்துள்ள ராஜஸ்தான் அணியின் விக்கெட் வேட்டை தொடருமா?
சென்னை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர் பிருத்வி ஷா, ராஜஸ்தான் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் 2 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.
OUT! ☝️Early wicket for @rajasthanroyals as @JUnadkat strikes in his first over. 👏👏#dc lose Prithvi Shaw early. #vivoipl #rrvdc @Vivo_IndiaFollow the match 👉 https://t.co/SClUCyADm2 pic.twitter.com/8eXhTZ2Ed9
— IndianPremierLeague (@IPL) April 15, 2021
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான், பிருத்வி ஷா களம் காண்கிறார்கள். முதல் ஓவரை சேதன் சகரியா வீசுகிறார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), அஜிங்க்யா ரஹானே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், லலித் யாதவ், ககிசோ ரபாடா, டாம் குர்ரான், அவேஷ் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ்
மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஜோஸ் பட்லர், சிவம் டியூப், ரியான் பராக், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், சேதன் சகரியா, ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிஸூர் ரஹ்மான்
டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளாது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த 2 போட்டிகளிலும் டெல்லி அணி வென்றது. அந்த இரு போட்டிகளிலும் இலக்கை துரத்த தவறவிட்டது ராஜஸ்தான் அணி. தற்போது இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கவுள்ள அந்த அணி பதிலடி கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில், ஜோஸ் பட்லர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. பட்லர் டெல்லிக்கு எதிராக சிறப்பாக ஆடியுள்ளார். மேலும் அந்த அணிக்கெதிராக 200 ரன்களை சேர்க்கும் நிலையிலும் உள்ளார்.
https://t.co/zANSKPdTuI pic.twitter.com/w08tyddhnK
— Rajasthan Royals (@rajasthanroyals) April 14, 2021
இதுவரை நடந்த 22 போட்டிகளில் இந்த இரு அணிகளும் 11 முறை வென்றுள்ள.
ராஜஸ்தான் ராயல்ஸ்
மனன் வோஹ்ரா, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன் அல்லது டேவிட் மில்லர், சிவம் டியூப், ராகுல் தெவதியா, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேதன் சகரியா.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஷிகர் தவான், பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், கிறிஸ் வோக்ஸ், டாம் குர்ரன் அல்லது ககிசோ ரபாடா, ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, அவேஷ் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோஹ்ரா, அனுஜ் ராவத், ரியான் பராக், டேவிட் மில்லர், ராகுல் திவாத்தியா, மஹிபால் லோமர், ஸ்ரேயாஸ் கோபால், மாயங்க் மார்க்கண்டே, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி, சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசூர் ரஹ்மான், சேதன் சகரியா, கே.சி. காரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்தீப் யாதவ், ஆகாஷ் சிங்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
ரிஷாப் பந்த்(கேப்டன்) ஷிகர் தவான், பிருத்வி ஷா, அஜின்கியா ரஹானே, சிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோயினிஸ், கிறிஸ் வோக்ஸ், ஆர் அஸ்வின், அமித் மிஸ்ரா, லலித் யாதவ், பிரவீன் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்த்ஜே அவேஷ் கான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிப்பால் படேல், விஷ்ணு வினோத், லுக்மான் மேரிவாலா, எம் சித்தார்த், டாம் குர்ரான், சாம் பில்லிங்ஸ்.