ஐ.பி.எல். கிரிக்கெட்: தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி!

SRH pacer Natarajan tests positive for COVID-19 ahead of DC-SRH match Tamil News: ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

IPL 2021 Tamil News: Natarajan tests positive for COVID-19 ahead of DC-SRH match

 T Natarajan tests positive for COVID-19 Tamil News:  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 33-வது லீக் ஆட்டத்தில் இளம் வீரர் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்திற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட 6 வீரர்கள் தனிமைப்படுபட்டுள்ளனர் என்றும், ஹைதராபாத் – டெல்லி இடையேயான இன்றைய போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2021 tamil news natarajan tests positive for covid 19 ahead of dc srh match

Next Story
டோக்கியோ ஒலிம்பிக்; புகைப்படத்தால் இதயங்களை வென்ற தமிழர்!Tokyo Olympic Tamil News: story behind International Photographer sukumar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X