CSK vs GT – IPL 2023 Qualifier 1 Tamil News: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையேயான குவாலிபையர் 1-க்கு முன்னதாக பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “அவர்கள் தந்திரோபாய ரீதியாக மிகவும் ஒத்த அணிகளாக உள்ளனர். இந்த இரு அணிகளும் அதிக மாற்றங்களைச் செய்ய விரும்புவதில்லை. டிரஸ்ஸிங் அறையில் மென்மையான அமைப்பை பார்க்க முடிகிறது. எனவே, பிளேஆஃப் போட்டியில் இந்தஇரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.” என்று கூறினார்.
மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டுள்ளது துல்லியமான மதிப்பீடு என்றால் நிச்சயம் மிகையாகாது. சென்னை – குஜராத் ஆகிய இரு அணிகளும் ஆடும் லெவனில் பெரிய மாற்றங்களை செய்வதில்லை. சில வீரரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். வெளியில் அமர்ந்து இருக்கும் வீரர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துகின்றனர். ஏனென்றால், காயம் காரணமாக அவர்கள் மாற்று வீரராக எந்த நேரத்திலும் களமிறக்கப்படலாம். ஒவ்வொரு வீரர் மீதான தனி கவனம் அவர்கள் குடும்பமாக இணைந்து செயல்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

குஜராத் – சென்னை அணிகளின் கேப்டன்களை பொறுத்தவரையில், எம்எஸ் தோனியின் தலைமைப் பண்புகள் அவரது முன்னாள் சகவீரரான ஹர்திக் பாண்டியாவிடம் தென்படுகிறது. ஜூனியர் வீரர்களை பேக்அப் செய்வதில் தொடங்கி ஒரு போட்டியில் கூட விளையாட வீரர்களை ஊக்கப்படுத்துவது வரை அவர்களது பண்புகள் மிகவும் ஒத்ததாக உள்ளது.
உதாரணமாக தோனி சில சமயங்களில் ஷிவம் துபேவை தனக்கு முன்னால் பேட் செய்ய அனுமதித்துள்ளார் மற்றும் அஜிங்க்யா ரஹானே, துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதீஷா பத்திரனா போன்றவர்களை அவர்களில் சிறந்ததை வெளியே கொண்டு வர புத்திசாலித்தனமாக கையாண்டார். இதேபோல் தான் விஜய் சங்கர், நூர் அகமது மற்றும் ஜோஷ் லிட்டில் ஆகியோருக்கு ஹர்திக் பாண்டியா செய்துள்ளார்.
குஜராத் அணியில் விஜய் சங்கர், ஐபிஎல்லில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக நெட் பவுலராக இருந்த மோஹித் ஷர்மா அணிக்கு முக்கியமானவராக இருந்து வருகிறார். சென்னை அணியில், மூத்த இந்திய வீரரான ரஹானே கம்பேக் கொடுத்துள்ளார். தோனியின் வழிகாட்டுதலின் கீழ் அவர் டி20 போட்டிகளில் முன்னணி வீரராக மாறியது மட்டுமல்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி அணியிலும் தனக்கான இடத்தைப் பிடித்தார். நிச்சயமாக இந்த இரண்டு விஷயங்களும் மற்ற வீரர்களின் ஏற்பட்ட காயத்தால் வந்தன. ஆனால் ரஹானே தனது வாழ்க்கைக்கு மற்றொரு தொடக்கத்தை கொடுத்துள்ளார்.

ஐபிஎல் குவாலிஃபையர் 1, சேப்பாக்கத்தில் இதேபோன்ற ஆனால் மிகவும் வித்தியாசமான அணிகள் நேருக்கு நேர் சந்திப்பதை காண உள்ளோம். சென்னை அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தவே முயலும். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறவே நடப்பு சாம்பியனான குஜராத் நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil