ஐபிஎல் 2018ம் ஆண்டு தொடருக்கான ஏலம் பெங்களூருவில் பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று முதல் நாள் முடிந்துள்ளது. அதில் வீரர்களை தக்க வைப்பதிலும், புதிய இளம் வீரர்களை வாங்குவதற்கும் அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பெரும்பாலான அணிகள் இன்னும் ஃபாஸ்ட் பவுலிங் மற்றும் ஸ்பின் பவுலர்களை தேர்வு செய்யாமல் உள்ளன. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வயதான வீரர்களை மட்டும் எடுத்துள்ளதாக ட்விட்டரேட்டிகள் ட்ரால் செய்து வருகின்றனர். இதனால், இன்றைய ஏலத்தில் சென்னை அணி இளம் புயல்களை களமிறக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, இன்றும் சுவாரஸ்யமான நிறைய நிகழ்வுகளை காணலாம் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய இரண்டாம் நாள் ஏலத்தின் லைவ் அப்டேட்ஸ் உங்களுக்காக ஐஇதமிழ் பிரத்யேகமாக வழங்குகிறது. எங்கு இருந்தாலும், ஐஇதமிழ் மூலம் வீரர்களின் தேர்வை நீங்கள் அறியலாம்.
மதியம் 13.21 – தென்னாப்பிரிக்காவின் லுன்கிசனி ங்கிடி எனும் வேகப்பந்து வீச்சாளரை 50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது. மேலும், கனிஷ்க் சேத் எனும் வீரரை 20 லட்சத்துக்கு சென்னை வாங்கியுள்ளது. துருவ ஷோரே எனும் வீரரை 20 லட்சத்துக்கு சென்னை வாங்கியுள்ளது.
மதியம் 13.17 – சந்தீப் லச்சிமானே எனும் முதல் நேபாள் நாட்டின் வீரரை டெல்லி அணி 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
The first Nepali player in the history of the Vivo IPL! It gives us great pleasure to welcome the 17-year-old leg-spinner @IamSandeep25 into the #DDSquad!#IPLAuction#DilDilli
மதியம் 13.11 – பென் த்வார்ஷஸ் எனும் வீரரை பஞ்சாப் அணி 1.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
மதியம் 13.05 – ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி எனும் வீரரை சன் ரைசர்ஸ் அணி 1 கோடிக்கு வாங்கியுள்ளது.
மதியம் 13.01 – அக்ஷ்தீப் நாத் எனும் வீரரை 1 கோடிக்கு பஞ்சாப் வாங்கியுள்ளது.
மதியம் 12.58 – கேமரான் டெல்போர்ட் எனும் வீரரை 30 லட்சத்துக்கு கொல்கத்தாவும், தில்லான் எனும் வீரரை 55 லட்சத்துக்கு மும்பை அணியும் ஏலம் எடுத்துள்ளன. ஷ்ரேயாஸ் கோபால் எனும் வீரரை 20 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
மதியம் 12.55 – தீபக் சாஹர் எனும் வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் 80 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.
மதியம் 12.48 – ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை எனும் வீரரை பஞ்சாப் அணி 7.20 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சென்னையும், பஞ்சாப்பும் இதிலும் மல்லுக்கட்ட, இறுதியில் பஞ்சாப் வென்றது.
Once again, we go head-to-head with CSK for a player. This time it’s for Andrew Tye and the bid is currently at 7.2 crores. #LivePunjabiPlayPunjabi#IPLAuction
காலை 11.50 – 19 வயதான ஷிவம் மவி எனும் வீரரை 3 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலை 20 லட்சமே!.
காலை 11.45 – அங்கித் ஷர்மாவை 20 லட்சத்துக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.
காலை 11.40 – அபூர்வ் வான்கடே எனும் வீரரை 20 லட்சத்துக்கும், ரின்கு சிங் என்பவரை 80 லட்சத்துக்கும் கொல்கத்தா வாங்கியுள்ளது. சச்சின் பேபியை 20 லட்சத்துக்கு ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. மன்ஜோத் கல்ரா எனும் வீரரை டெல்லி அணி வாங்கியுள்ளது.
RCB has made a super comeback. MI struck gold with Cutting and Lewis. CSK struggling. KKR in a mess. KXIP neither here nor there. #IPLAuction
காலை 11.08 – நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டை 2.20 கோடிக்கு டெல்லி வாங்கியது.
காலை 11.05 – இந்தியாவின் ஜெயதேவ் உனட்கட் எனும் வேகப்பந்து வீச்சாளரை 11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இவரது அடிப்படை விலை 1.50 கோடியாகும். சென்னையும், பஞ்சாப்பும் இவரை எடுக்க கடும் போட்டியிட்டன. 11 கோடி வரை இரு அணிகளும் சென்றன. பிறகு ராஜஸ்தான் தட்டிச் சென்றது.
காலை 10.37 – ஆஸ்திரேலியாவின் பென் கட்டிங் எனும் வீரரை மும்பை அணி 2.20 கோடிக்கு வாங்கியுள்ளது.
காலை 10.25 – டேனியல் கிரிஸ்டியனை 1.50 கோடிக்கும், ஜெயந்த் யாதவை 50 லட்சத்திற்கும் டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும், குர்கீரத் சிங் எனும் வீரரை 75 லட்சத்துக்கு டெல்லி வாங்கியுள்ளது.
காலை 10.20 – தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பெங்களூரு அணி 3.20 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சென்னை அணி இவரை ஒருமுறை கூட ஏலம் கேட்கவில்லை.
காலை 10.17 – மனோஜ் திவாரியை பஞ்சாப் அணி 1 கோடிக்கு வாங்கியுள்ளது.
காலை 10.14 – பஞ்சாப் அணிக்காக ஆடிவந்த மன்தீப் சிங்கை பெங்களூரு அணி 1.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
காலை 10.07 – தோனியை போன்று சடை முடி வைத்து, அதே ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த சௌரப் திவாரி எனும் வீரரை நினைவிருக்கலாம். இவரை மும்பை அணி 80 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு அணியால் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 10.04 – எவின் லெவிஸ் எனும் அதிரடி பேட்ஸ்மேனை மும்பை இந்தியன்ஸ் அணி 3.80 கோடிக்கு வாங்கியுள்ளது.
காலை 09.50 – கெளதம் கிருஷ்ணப்பா எனும் வீரரை ராஜஸ்தான் அணி 6.20 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது, இவரது அடிப்படை விலை 20 லட்சமாகும்.
Gowtham Krishnappa
காலை 09.45 – ஷாபாஸ் நதீம் எனும் வீரரை 3.20 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இவரது அடிப்படை விலை 40 லட்சமாகும்.
காலை 09.35 – ராகுல் சாஹர் எனும் வீரரின் அடிப்படை விலை 20 லட்சம் தான். ஆனால், மும்பை அணி இவரை 1.90 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது . பல அணிகளும் இவரை எடுக்க போட்டியிட்டன.