IPL Auction 2021 Updates: 2021 ஐபிஎல் ஏலத்தில் வரலாறு படைத்த கிறிஸ் மோரிஸ்

IPL Auction 2021, IPL 2021 New Players Auction Live: 2021 -ம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள போகும் வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

IPL 2021 Players Auction Live Updates: 2021 -ம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள போகும் வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதில் 164 வீரர்கள் இந்தியர்கள், 125 வீரர்கள் வெளிநாட்டவர்கள். இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ள 8 அணிகளில் வெறும் 61 காலியிடங்களே உள்ளன. இந்த 292 வீரர்களில் யார் யார் அந்த இடங்களை நிரப்ப உள்ளனர் என்பதில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் தொற்றியுள்ளது.

11 காலியிடங்களை கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, வெறும் 35.4 கோடி ரூபாய் மட்டுமே கையில் வைத்துள்ளது. அதே நேரத்தில் வெறும் 3 காலியிடங்களை நிரப்ப ரூபாய் 10.75 கோடியை கையில் வைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

9 காலியிடங்களை கொண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) சுமார் 53.20 கோடியை கையில் வைத்துள்ளது.

கொரோனா பெருத்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஏலத்தில் அதிரடி காட்டும் வீரர்களையும், மிதவேக பந்து வீச்சளர்களையும் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மேக்ஸ்வெல், இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஏதிராக நடைபெற்ற தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே அவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதோடு இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

IPL Auction 2021 Live News: ஐபிஎல் ஏலம் 2021

ஐபிஎல் 2021 ஏலம் எப்போது?

இந்தியன் பிரீமியர் லீக் 2021-ம் ஆண்டுக்கான ஏலம் இன்று (பிப்ரவரி 18 வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

ஏலம் ஆரம்பிக்கும் நேரம்?

இன்று மதியம் 3 மணி.

ஏலம் எங்கே நடைபெறுகிறது?

ஐபிஎல் 2021-ம் ஆண்டுக்கான ஏலம், இந்த ஆண்டு சென்னையில் நடைபெறுகிறது.

எந்த தொலைக்காட்சியில் ஐபிஎல் 2021 ஏலத்தை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது?

ஐபிஎல் 2021 ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம்.

ஐபிஎல் 2021 ஏலம் லைவ் ஸ்ட்ரீம்?

ஐபிஎல் 2021 ஏலத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Live Blog

IPL AUCTION 2021 LIVE Update : Latest IPL AUCTION 2021 tamil news Today!

ஐபிஎல் 2021 ஏலம் குறித்த செய்திகளைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்து இருங்கள்.


15:19 (IST)18 Feb 2021

ஐபிஎல் ஏலம் 2021 – ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்தை 2 கோடியே 20 லட்சத்திற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி வாங்கியுள்ளது 

15:11 (IST)18 Feb 2021

ஐபிஎல் ஏலம் 2021 – வீரர்களின் முதல் தொகுப்பு

முதல் செட்டில் ஏலம் விடப்படும் வீரர்கள் இங்கே: ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், எவின் லூயிஸ், கருண் நாயர், ஜேசன் ராய், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஹனுமா விஹாரி. ஸ்மித் மற்றும் ராய் ஆகியோர் தங்கள் அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக பட்டியலிட்டுள்ளனர்.

15:08 (IST)18 Feb 2021

ஐபிஎல் ஏலம் 2021 – டெல்லி கேபிட்டல்ஸ் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

 ஷிகர் தவான், பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, ஆர் அஸ்வின், லலித் யாதவ், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், பிரவீன் துபே, ககிசோ ரபாடா மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், கிறிஸ் வோக்ஸ், டேனியல் சாம்ஸ்.

15:08 (IST)18 Feb 2021

ஐபிஎல் ஏலம் 2021 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

டேவிட் வார்னர் (இ), அபிஷேக் சர்மா, பசில் தம்பி, புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத் கோஸ்வாமி, சித்தார்த் டி நடராஜன், விஜய் சங்கர், விருத்திமான் சஹா, அப்துல் சமத், மிட்செல் மார்ஷ், ஜேசன் ஹோல்டர், பிரியம் கார்க், விராட் சிங்

15:05 (IST)18 Feb 2021

ஐபிஎல் ஏலம் 2021 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், தேவ்துத் பாடிக்கல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் பிலிப், ஷாபாஸ் அகமது மற்றும் பவன் தேஷ்பாண்டே.

15:05 (IST)18 Feb 2021

ஐபிஎல் ஏலம் 2021 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து வீரர்களை விடுவித்து 17 வீரர்களை ஏலத்திற்கு முன்னதாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஈயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக், நிதீஷ் ராணா, சுப்மான் கில், ரிங்கு சிங், ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், பாட் கம்மின்ஸ், பிரசீத் கிருஷ்ணா, சந்தீப் வாரியர், சிவன் ஆண்ட்ராவ் சுனில் நரைன், டிம் சீஃபர்ட்.

15:04 (IST)18 Feb 2021

ஐபிஎல் ஏலம் 2021- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:

எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, என் ஜகதீசன், ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், சாம் குர்ரான், ரவி ஜடேஜா, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஜோஷ் ஹேஸ்லூட், ஷார்துல் தாகூர், கர்ன் ஷர்மா, கே.எம். ஆசிஃப் , ஆர்.சாய் கிஷோர், தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி.

15:04 (IST)18 Feb 2021

ஐபிஎல் ஏலம் 2021- மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:

ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கிறிஸ் லின், அன்மோல்பிரீத் சிங், ச ura ரப் திவாரி, ஆதித்யா தாரே, கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, அனுகுல் ராய், ஜஸ்பிரந்த் பும்ரா , ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், தவால் குல்கர்னி, மொஹ்சின் கான்

IPL AUCTION 2021 LIVE Update: 2021 -ம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள போகும் வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl auction 2021 live update a to z on ipl auction total teams captions money in teams hands star players on todays auction etc

Next Story
ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express