/tamil-ie/media/media_files/uploads/2018/01/a218.jpg)
IPL Auction 2018
* 2018 ஐபிஎல் தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில், அணிகளால் வாங்கப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை 169. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 113. வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 56. சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர்களின் எண்ணிக்கை 91. மொத்தம் செலவிடப்பட்ட ஏலத் தொகை 431.70 கோடி.
*சென்னை அணியின் மொத்த வீரர்கள் - 25. செலவிடப்பட்ட தொகை 73.5 கோடி.
டெல்லி அணியின் மொத்த வீரர்கள் - 25. செலவிடப்பட்ட தொகை 78.4 கோடி.
மும்பை அணியின் மொத்த வீரர்கள் - 25. செலவிடப்பட்ட தொகை 79.35 கோடி.
ஹைதராபாத் அணியின் மொத்த வீரர்கள் - 25. செலவிடப்பட்ட தொகை 79.35 கோடி
பெங்களூரு அணியின் மொத்த வீரர்கள் - 24. செலவிடப்பட்ட தொகை 79.85 கோடி
ராஜஸ்தான் அணியின் மொத்த வீரர்கள் - 23. செலவிடப்பட்ட தொகை 78.35 கோடி
பஞ்சாப் அணியின் மொத்த வீரர்கள் - 21. செலவிடப்பட்ட தொகை 79.80 கோடி
கொல்கத்தா அணியின் மொத்த வீரர்கள் - 19. செலவிடப்பட்ட தொகை 80 கோடி
* உலகின் நம்பர்.1 டி20 அணியான பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல்லில் இல்லை.
உலகின் நம்பர்.1 டி20 பவுலர் இஷ்க் சோதி ஏலத்தில் விலை போகவில்லை.
உலகின் நம்பர்.1 டி20 பேட்ஸ்மேன் காலின் மன்ரோவின் ஏலத் தொகை 1.9 கோடி மட்டுமே.
உலகின் நம்பர்.1 டி20 ஆல்-ரவுன்டர் ஷகிப் அல் ஹசனின் ஏலத் தொகை 2 கோடி மட்டுமே.
இருப்பினும், ஐபிஎல் தான் உலகின் நம்பர்.1 டி20 லீக்.
நாடு வாரியாக அதிகம் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:
இந்தியா - 113
ஆஸ்திரேலியா - 17
இங்கிலாந்து - 8
தென்னாப்பிர்க்கா - 8
நியூசிலாந்து - 7
வெஸ்ட் இண்டீஸ் - 7
ஆப்கானிஸ்தான் - 4
வங்கதேசம் - 2
இலங்கை - 2
நேபாள் - 1
ஐபிஎல் வரலாற்றில், ஒரே அணிக்காக (பெங்களூரு), இதுவரை (11 ஆண்டுகள்) ஆடிவரும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.