/tamil-ie/media/media_files/uploads/2022/02/IPL-Auction.jpg)
IPL Auction Update : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கு உலகளவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 14 சீசன்கள் முடிந்துள்ளது. உலகளவில் பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் விளையாட வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏலத்தின் அடிப்பமையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகின்றனர். வழக்கமாக இதுவரை 8 அணிகள் பங்கேற்று வந்த இந்த தொடர்ந்து தற்போது லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் இணைந்துள்ளது. இந்நிலையில் 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இன்று பெங்களூரில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஏலத்தில் முதல்நாளான இன்று பல வீரர்கள் ஏலம் போயியுள்ளனர்.
இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒவ்வொரு அணியிலும் 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்கள் இடம்பெறுவார்கள். இதில் ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணியிலும் 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் 217 வீரர்கள் தேவைப்படும் நிலையில், ஏலத்தில், 590 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 370 பேரும், இந்திய வீரர்கள் 220 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று மதியம் 12 மணியளவில் ஐபிஎல் ஏலம் தொடங்கியது. .
ஐபிஎல் ஏலத்தின் ஆச்சரியங்கள் :
ஆச்சரியப்பட வைத்த ஸ்ரோயாஸ் அய்யர்
ஏலம் தொடங்கியதில் இருந்து வீரர்களை வாங்க அணிகள் அனைத்தும் ஆர்வம் காட்டிய நிலையில், இந்திய வீரராக ஸ்ரோயார்ஸ் அய்யர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அடிப்படை விலையாக 2 கோடியில் தொடங்கிய ஸரோயாஸ் அய்யரின் வலை கடைசியில் 12.25 கோடிக்கு முடிந்தது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/IYAr.jpg)
2020 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக அந்த அணியை ப்ளே அப் சுற்றுக்கு கொண்டு சென்ற ஸ்ரோயார்ஸ் அய்யர் கடந்த சீசனில் காயம் காரணமாக முதல்கட்ட போட்டிகளில் இருந்து விலகினார். தொடர்ந்து ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் 2-வது சீசனில், ஸ்ரோயார் அய்யர் களமிறங்கினாலும் பண்ட் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதால் வீரராக மட்டுமே களமிறங்கினார். தற்போது கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ள ஸ்ரோயாஸ் அய்யர் கேப்டனாக செயல்படவும் வாய்ப்புள்ளது.
மீண்டும் சென்னை அணிக்கு யூடர்ன் அடித்த வீரர்கள்
கடந்த பல சீசன்களாக சென்னை அணியின் ஒரு அங்கமாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான டுவைன் பிராவோ 4.4 கோடிக்கு மீண்டும் சென்னை அணியே ஏலம் எடுத்துள்ளது. பிராவோவை தக்கவைக்காத சென்னை அணி மீது ரசிகர்கள் சற்று கோபத்தில் இருந்தாலும் பிராவே மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/CSK.jpg)
அதேபோல் கடந்த சீசனில் சென்னை அணியில் இணைந்த ராபின் உத்தப்பா அவரின் அடிப்படை விலையான 2 கோடிக்கே சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதிரடி ஆட்டக்காரரான அம்பத்தி ராயுடு 6.75 கோடிக்கு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். இதன் மூலம் சென்னை அணியில் இருந்த ஏலத்தில் சென்ற 3 வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
Back to rob our 💛! Waiting to 🥳 again! 😍#SuperAuction #WhistlePodu 🦁 @robbieuthappa pic.twitter.com/UAFSiORvON
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) February 12, 2022
கோடிகளில் குவிந்த இஷான் கிஷன்
மும்பை அணிக்காக விளையாடி வந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தற்போது 15.25 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை மீண்டும் மும்பை அணியே ஏலத்தில் எடுத்துள்ளது. தொடக்க விலையான 2 கோடியில் தொடங்கிய ஏலத்தின் தொடக்கத்தில் சென்னை அணி இணைந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சென்னை அணி விலகிய நிலையில், ஐதராபாத் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி உருவானது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/ishan-kishan-1200.jpg)
இரண்டு அணிகளும் மாறி மாறி விலையை ஏற்ற கடைசியில் மும்பை அணி 15.25 கோடிக்கு இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் யுவராஜ் சிங் உள்ளார்.
ஆச்சரியப்பட வைத்த வெளிநாட்டு வீரர்கள்
கடந்த சீசன்களில் மும்பை அணியில் விளையாடி வந்த நியூசிலாந்தை சேர்ந்த டிராட் போல்ட், 8 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்த ககிசோ ரபாடா, 9.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணிக்காக விளையாடிய பேட் கம்மின்ஸ் 7.25 கோடிக்கு மீண்டும்கொல்கத்தா அணிக்கே திரும்பியுள்ளார்.
தவான், அஸ்வினை கைவிட்ட டெல்லி
கடந்த சீசனில் டெல்லி அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியில் முதலிடத்தில் இருந்த ஷிகர் தவான் டெல்லி அணியால் தக்கவைக்கப்படாத நிலையில், ஏலத்திலும் அவரை எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் தவான் 8.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Dhavan-aswit.jpg)
அதேபோல், கடந்த இரு சீசன்களில் டெல்லி அணியில் அங்கம் வகித்த அஸ்வின், தக்கவைக்கப்படாத நிலையில், அவரை ஏலத்தில் சென்னை அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் அன்வினை ஏலத்தில் கேட்ட சென்னை அணி ஒருகட்டத்தில் ஒதுங்கிக்கொண்டது. இதனால் 5 கோடிக்கு அஸ்வினை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.
டெல்லி அணிக்கு தாவிய டேவிட் வார்னர்
கடந்த சீசனில் ஐதாபராபாத் அணியில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட டேவிட் வார்னர் தற்போது டெல்லி அணியால் 6.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதேபோல் டெல்லி அணியில் இருந்த இருந்த சிம்ரான் ஹெட்மயர் 8.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
தீபக் சஹாருக்கு பெரிய விலை கொடுத்த சிஎஸ்கே
சென்னை அணியில் ஓப்பனிங் பவுலாக பவர்பிளே விக்கெட் வீழ்த்துவதில் திறமைசாளியாக தீபக் சஹார், சென்னை அணியால் தக்கவைக்கப்படாத நிலையில், அவரை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தற்போது சென்னை அணியால் தீபக் சஹார் வாங்கப்பட்டிருந்தாலும், அதற்கு சென்னை அணி பெரிய விலை கொடுத்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Deepak.jpg)
சமீப காலமாக பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கி வரும் தீபக் சஹாருக்கு ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. ஆனால் எந்த வீருக்கும் எதிராகவும் ஒரு கட்டத்தில் ஏலம் கேட்பதை நிறுத்திக்கொண்ட சென்னை அணி தீபக் சஹாருக்கு 8 கோடிக்கு மேல் சென்ற பின்னும் ஏலத்தின் கடைசி நிலைத்து நின்று 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் தீபக் சஹார்.
மும்பையை விட்டு வெளியேறிய பாண்டியா பிரதர்ஸ்
கடந்த சீசன்களில் மும்பை அணியில் அங்கம் வகித்த ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்டியா பிரதர்ஸ் தற்போது மும்பை அணியில் இருந்து பிரிந்துள்ள நிலையில், ஹர்திக் அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற ஏலததிலல் லக்னோ அணி குர்ணால் பாண்டியாவை 8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Pandya.jpg)
ஐபிஎல் ஏலத்தின் அதிர்ச்சிகள் :
ஏலத்தில் விலை போகாத மிஸ்டர் ஐபிஎல்
ஐபிஎல் தொடரின் மன்னன் என்று வர்ணிக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. தொடக்கத்தில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வந்த அவர், கடந்த 2020 ஐபிஎல் தொடரில் அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. அதன்பிறகுகடந்த சீசனில் களமிறங்கிய அவர் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால் சென்னை அணியில் தக்கவைக்கப்படாத அவரை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்தொடக்கத்திலேயே ஏலத்தில் வந்த சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இது சென்னை அணி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியின் தல தோனி, சின்ன தல ரெய்னா என்று அழைத்து வந்த ரசிகர்களுக்கு பெரிய இழப்பாக உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Raina.jpg)
அதேபோல் கடந்த முறை டெல்லி அணியில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் ஏலத்தில் விலை போகவில்லை. கடந்த முறையும் அவர் ஏலம் போகாத நிலையில் கடைசி நேரத்தில், டெல்லி அணியால் அவரின் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதேபோல் தற்போதும் அவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்திய வீரரான உமேஷ்யாதவ் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோரும் ஏலத்தில் விலை போகவில்லை. மேலும் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர், வங்கதேசத்தில் ஷாகிப் அல்ஹசன் ஆகியோரும் விலைபோகவில்லை.
‘டூபிளசிஸை நழுவவிட்ட சிஎஸ்கே
சென்னை அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரரான பாப் டூபிளசிஸ், பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சென்னை அணியில் சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார். ஆனால் அவரை சென்னை அணி தக்கவைக்காத நிலையில்ஈ, ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் விலை 4 கோடியை கடந்த போது சென்னை அணி ஏலம் கேட்பதை நிறுத்திக்கொண்டது. இதனால் டுபிளசிஸ் 7 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்ககப்பட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Dub.jpg)
மயங்கி விழுந்த தொகுப்பாளர்
ஏலத்தை நடத்திய ஹூட் எட்மோட்ஸ் ஏலம் நடந்துகொண்டிருக்கும்போது திடீரென மேடையில் இருந்தபடி மயங்கி விழுந்தார். இதனால் ஏலம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்த மாறுதல் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. அவருக்கு பதிலாக தற்போது சாரு ஷர்மா ஏலத்தை நடத்தி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.