Advertisment

IPL Cricket 2024 : இறுதிக்கட்டத்தில் லீக் போட்டிகள்... ஒவ்வொரு அணிக்கும் ப்ளேஅப் வாய்ப்பு எப்படி? விரிவான அலசல்

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளின் ப்ளேஅப் வாய்ப்பு எப்படி என்பதை பார்ப்போம்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2024 Captain

ஐபிஎல் 2024 கேப்டன்கள்

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர். கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு வீரர்களும் தங்களது திறமைகளை இந்த தொடரில் நிரூபித்து இந்த கிரிக்கெட் தொடர் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

Advertisment

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்

2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி 17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் வழக்கம்போல் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், டெல்லி, லக்னோ, குஜராத், பஞ்சாப் ராஜஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறன. இந்த தொடரில் தற்போதுவரை அனைத்து அணிகளும் 10 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், டெல்லி மற்றும் மும்பை அணிகள் 11 போட்டிகளில் விளையாடியுள்ளது.

புள்ளிப்பட்டியலை பொருத்தவரை, 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை குவித்துள்ள ராஜஸ்தான் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது, அந்த அணி அடுத்து வரும் 4 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலே ப்ளே அப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதேபோல் 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி 2-வது இடத்திலும், 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள லக்னோ, ஐதராபாத் அணிகள் 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன.  

ப்ளே அப் வாய்ப்பு – முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 4 அணிகள் மட்டுமே ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில், 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் அணியாக கிட்டத்தட்ட ப்ளே அப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ராஜஸ்தான் அணி அடுத்து வரும் தனது 4 போட்டிகளில் டெல்லி, சென்னை, பஞ்சாப், மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக விளையாடி உள்ளது.

RR KKR
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் பெற்று 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி அடுத்து வரும் 4 போட்டிகளில் 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அடுத்து தனது 4 போட்டிகளில் லக்னோ, மும்பை, குஜராத், ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 3-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி தனது ப்ளேஅப் சுற்றை உறுதி செய்ய அடுத்து வரும் 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்து வரும் 4 போட்டிகளில் கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி மற்றும் மும்பை அணிகளுடன் லக்னோ மோத உள்ளது.

SRH LSG.
சன்ரைசஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

சன் ரைசஸ் ஐதராபாத்

லக்னோ அணியை போல் 6 வெற்றி பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணி அடுத்து வரும் 4 போட்டிகளில், மும்பை, லக்னோ, பஞ்சாப், குஜாத் அணிகளுடன் மோத உள்ளது. இதில் 3 போட்டியிலாவது ஐதராபாத் அணி வெற்றி பெற வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் இருந்த சென்னை அணி தனது கடைசி 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ள சென்னை இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், மற்றும் பெங்களூரு அணிகளுடன் சென்னை அணி அடுத்து மோத உள்ளது,

CSK DC
டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

தற்போதுவரை 11 போட்டிகளில் விளையாடிய இரண்டு அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 6-வது இடத்தில் உள்ளது. இந்த அணி மீதமுள்ள 3 போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஅப் வாய்ப்பினை பெற முடியும். டெல்லி அடுத்த தனது 3 போட்டிகளில் ராஜஸ்தான் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

10 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்து வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். வெற்றியோடு மட்டுமல்லாமல் ரன்ரேட் அடிப்படையில் தான் இவர்களின் ப்ளேஅப் வாய்ப்பு உறுதி செய்யப்படும் நிலை உள்ளது. சென்னை பெங்களூர், ராஜஸ்தான் சன்ரைசஸ் அணியுடன் மோத உள்ளது.

PBKS GT
குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்

குஜராத் டைட்டன்ஸ்

10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கும். அதே சமயம் இந்த 4 போட்டிகளிலுமே அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அடுத்து வரும் 4 போட்டிகளில் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணிகளுடன் குஜராத் மோத உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

ப்ளேஅப் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்ட நிலைக்கு சென்றுள்ள அணிதான் மும்பை இந்தியன்ஸ். 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் 3 போட்டிகளில் ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ என டாப் ஆர்டரில் உள்ள அணிகளுடன் மும்பை அணி மோத உள்ளது. இந்த 3 போட்டிகளிலுமே மும்பை வெற்றி பெற்றாலும், மற்ற அணிகள் வெற்றி தோல்விகளை வைத்தே இந்த அணியின் ப்ளேஅப் வாய்ப்பு இருக்கும்.

MI RCB
மும்பை இந்தியன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது. இந்த அணி அடுத்து குஜராத், பஞ்சாப், டெல்லி, சென்னை ஆகிய அணிகளுடன் மோத உள்ளது. இந்த போட்டிகள் அனைத்திலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வி மற்றும் ரன் ரேட் அடிப்படையில் தான் பெங்களூர் அணியின் ப்ளேஅப் வாய்ப்பு அமையும்.

மும்பை அணியின் ப்ளேஅப் வாய்ப்பு எப்படி?

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள ராஜஸ்தான் கொல்கத்தா அணிகள் ஏற்கனவே 14 புள்ளிகளை பெற்றுவிட்டதால், அடுத்து உள்ள 2 அணிகளை தான் மும்பை அணி குறி வைக்க வேண்டும். இதில் மே 8-ந் தேதி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள லக்னோ, 4-வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 14 புள்ளிகளை பெற்றுவிடும். .இதனால் 4-வது இடம் மட்டுமே காலியாக இருக்கும்.

MI Mumbai Indians
மும்பை இந்தியன்ஸ்

அதன்பின் மும்பை அணி தனது மீதுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெறும் பட்சத்தில், லக்னோ ஐதராபாத் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி தனது அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளை பெற வேண்டும். தொடர்ந்து தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகளை தவிர மற்ற அணிகள் யாவும் 12 புள்ளிகளை தாண்ட கூடாது.

இத்தகைய சூழ்நிலை அமைந்து, மும்பை அணி தனது அடுத்த 3 போட்டிகளிலும் பெரிய வெற்றியை பெற்று ரன்ரேட் அதிகமாக வைத்திருந்தால் 4-வது அணியாக ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. ஆனால் இது நிகழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment