ஐபிஎல் உரிமத்தின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை முதல் 10 ஆண்டுகளுக்கு சோனி டெலிவிஷன் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. அடுத்த 5 ஆண்டுக்கான (2018 முதல் 2022 வரை) ஐ.பி.எல். கிரிக்கெட் டெலிவிஷன் ஒளிபரப்பு மற்றும் இண்டர்நெட், மொபைல் உள்ளடக்கிய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்துக்கான டெண்டரை இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் கோரி இருந்தது. ஒளிபரப்பு உரிமத்தை பெற பேஸ்புக், அமேசான், ரிலையன்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி உள்பட 24 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.
டெண்டர் மனுக்கள் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று பிரித்து பார்க்கப்பட்டது. இதில் அதிக தொகைக்கு விண்ணப்பித்து இருந்த நிறுவனமான ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை பெற்றது. ரூ. 16,347 கோடி தொகைக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. 2018-2022 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் இந்தியா ஒளிபரப்பும்.
Here are the final figures for IPL Media Rights for the period from 2018-2022. #IPLMediaRights pic.twitter.com/2y1m0X4701
— IndianPremierLeague (@IPL) 4 September 2017
சோனி நிறுவனம் 11,050 கோடிக்கு விண்ணப்பித்திருந்தது. இது இரண்டாவது அதிகபட்ச மதிப்புள்ள டெண்டராகும். மூன்றாவதாக 3,900 கோடிக்கு ஃபேஸ்புக் விண்ணப்பித்திருந்தது.
The @facebook team at @IPL Media Rights tender process.
Catch the action -
???? LIVE Streaming
➡️ https://t.co/cILsSXX4tA pic.twitter.com/jaw7SGSthf
— BCCI (@BCCI) 4 September 2017
விண்ணப்பித்திருந்த 14 நிறுவனங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 'பாம்டெக்' நிறுவனத்தின் அடிப்படை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அதன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அதேபோல், கத்தாரைச் சேர்ந்த 'BeIN' விளையாட்டு நிறுவனமும் நிதித்துறை சார்ந்த ஆவணங்களை தாக்கல் செய்யாததால் அதன் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
சூப்பர்ஸ்போர்ட், யுப் டிவி, இகோநெட், ஓஎஸ்எம் ஆகிய நிறுவனங்களின் டெண்டர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், அவை கோரியிருந்த தொகை குறைவாக இருந்ததால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்த ஏல உரிமையை கைப்பற்றியது.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், இரண்டு வருட தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மீண்டும் களமிறங்குகின்றன.
குறிப்பாக, ஒவ்வொரு வருடமும் குறைந்தது பிளேஆஃப் சுற்று வரை முன்னேறி, அனைத்து அணிகளுக்கும் எப்போதும் பெரும் சவாலாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருகை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் தோனியே சென்னை அணியின் கேப்டனாக்கப்படுவார் எனவும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.