Tamil New Year 2023 – Chennai Super Kings Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் முன்னிலையில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றி 2ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி அடுத்ததாக, வருகிற திங்கள் கிழமை (ஏப்ரல் 17ம் தேதி) இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இதற்காக அணியில் உள்ள வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
தமிழ் புத்தாண்டு
இந்நிலையில், சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருவிழாவாகவும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், தமிழ் புத்தாண்டு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14 ஆம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக தெரிவித்துள்ளது. இந்த மங்களகரமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த சிறப்புப் பதிவில் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து புதிய அவதாரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! ✨
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2023
Wishing you all a Happy Tamil New Year! 🥳#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/K2uiAasAOo
மேலும், கிரிக்கெட் வீரர்கள் மூவரும், தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் கழுத்தில் மாலை அணிந்து, தங்கள் சொந்த மைதானமான சேப்பாக்கத்திலிருந்து வெளியேறுவது வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துடன் கூடிய கேப்டசனில், “எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளனர். இந்த பதிவு சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil