/tamil-ie/media/media_files/uploads/2023/04/tamil-indian-express-2023-04-14T174553.339-1.jpg)
RCB vs CSK: CSK CEO Kasi Viswanathan Gives Update About MS Dhoni's Knee Injury and Ben Stokes' Availability Tamil News
CSK CEO Kasi Viswanathan Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இதுவரை நடந்த 4 போட்டிகளில் 2ல் வெற்றி, 2ல் தோல்வி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. சென்னை அணி வருகிற திங்கள் கிழமை (ஏப்ரல் 17ம் தேதி) இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இதற்காக அணியில் உள்ள வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையை அவர் எடுத்துக் கொண்டு வருவதாகவும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தோனி தொடர்ந்து விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/tamil-indian-express-2023-04-14T174727.105.jpg)
“தோனிக்கு முழங்காலில் காயம் இருப்பது நிஜம்தான். ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடுவார். ஸ்டோக்ஸ் நன்றாக தேறி வருகிறார். வரும் 30-ம் தேதி நடைபெறும் போட்டிக்கு அவர் உடற்தகுதியுடன் தயாராக இருப்பார். அது முன்கூட்டியே கூட நடக்கலாம். அதே போல தீபக் சஹார் மே மாதத்தின் முதல் வாரத்தில் களத்திற்கு திரும்புவார்” என அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.