பெரும்பாலும் கிரிக்கெட்டில், நீண்ட காலத்திற்கு ஒரு அணியின் நீடித்த வெற்றிக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு இடையே இருக்கும் “ஒற்றுமையே” முக்கிய காரணம் என்று குறிப்பிட்டு கூறப்படுகிறது. அவ்வகையில், கடந்த ஐந்து தசாப்தங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரு சிறந்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஜோடி என்று நினைவு கூறும் போது ஆலன் பார்டர்-பாப் சிம்ப்சன், ஹான்சி குரோன்ஜே-பாப் வூல்மர், ஸ்டீவ் வா/பாண்டிங்-ஜான் புக்கானன், சவுரவ் கங்குலி-ஜான் ரைட், எம்எஸ் தோனி-கேரி கிர்ஸ்டன் மற்றும் விராட் கோலி-ரவி சாஸ்திரி ஆகியோர் நம்முடைய நினைவலைகளில் தோன்றுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல டி20 லீக்குகள் தோன்றியுள்ள நிலையில், அந்த தொடர்களில் பயிற்சியாளர் – கேப்டன் ஆகியோருக்கு இடையே உள்ள சவால்கள் குறுகிய காலத்தில் எப்படி ஒரு நல்லுறவை ஏற்படுத்துகிறது மற்றும் முறிக்கிறது என்பது முக்கிய பார்க்கப்படுகிறது. அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஃப்ளெமிங் ஜோடி இதுவரை அப்படியான பெரும் சவால்களையோ, பிரச்சனைகளையோ சந்திக்காத ஜோடியாக இருந்து வருகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில், 2009 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை தொடரும் தோனி-பிளெமிங் கூட்டணி, நீண்ட வெற்றி விகிதத்தையும், ரெக்கார்டுகளையும் வைத்துள்ளது. இதை தற்போது எந்தவொரு கூட்டணியாலும் யாராலும் முறியடிக்க முடியாது. இந்த கூட்டணி நான்கு சாம்பியன் பட்டங்களையும், ஐபிஎல் வரலாற்றில் அதிக சாதனை படைத்த அணி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
ஐபிஎல்லில் இரண்டாவது வெற்றிகரமான கேப்டன் – பயிற்சியாளர் ஜோடி என்றால் ரோஹித் சர்மா மற்றும் மஹேல ஜெயவர்த்தனா ஜோடியை குறிப்பிடலாம். இது ஜோடியின் கீழான மும்பை அணி மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. 3வது வெற்றி கூட்டணியாக கெளதம் கம்பீர் மற்றும் ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோர் உள்ளனர். இவர்களது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 சாம்பியன் பட்டங்களை வென்றது.
முரண்பாடாக, கடந்த 15 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகளில் ஒருவர் கூட இந்திய தலைமை பயிற்சியாளர் இல்லை. இதேபோல், ஐசிசி நடத்திய தொடர்களில் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒருவர் கூட இந்திய தலைமை பயிற்சியாளரராக செயல்படவில்லை. இது எதிர்காலத்தில் நிறைவேறும் என்றாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றதன் மூலம், அந்த சூழல் உருவாக ஒரு புதிய தொடக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு உழைத்த கேப்டன் – பயிற்சியாளர் கூட்டணியில் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவோ அல்லது கேப்டன் ஹர்திக் பாண்டியாவோ தலைமைப் பயிற்சியாளர் அல்லது கேப்டனாக இருந்த அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் களமிறங்கிய முதல் ஆட்டம் முதல் சிறப்பாக செயல்பட்டனர்.

“முதல் வருடத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறோம். நாங்கள் சாம்பியனாகிவிட்டோம், பெருமைப்படமால் இருக்க முடியாது. எங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு அவ்வளவு வலுவாக இல்லை என்று மக்கள் சொன்னார்கள். ஆனால் நாங்கள் கோப்பையை வென்றதால், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.”என்று கேப்டன் பாண்டியா கூறினார்.
கேப்டன் பாண்டியா பயிற்சியாளர் நெஹ்ராவை வெகுவாகப் பாராட்டியபோது, நெஹ்ரா சங்கடமாக உணர்ந்து, நேர்காணலில் பெருங்களிப்புடன் இருந்தார். “அப்படி எதுவும் இல்லை, அது பொய்” என்று நெஹ்ரா முகத்தில் ஒரு குறும்பு புன்னகையை தவழ விட்டார்.
எனவே, அவர்களை டிக் செய்தது எது? “நானும் என் சகோதரனும் (க்ருனால்) நாங்கள் எதிலும் கையெழுத்திடுவதற்கு முன்பு உரையாடிக் கொண்டிருந்தோம். நான் சொன்னேன், என்னைப் புரிந்துகொண்டு என்னை ஒரு நபராக அறிந்து, என்னிடமிருந்து சிறந்ததைப் பெறக்கூடிய ஒருவர் ஆஷிஷ் நெஹ்ரா. எனவே, என்னைப் பொறுத்தவரை, அவருடன் விளையாடுவதும், அவருடன் அதிக நேரம் செலவிடுவதும் எப்போதுமே வேடிக்கையாக இருக்கும். எதுவாக இருந்தாலும் அவருடன் இருப்பதை நான் எப்போதும் ரசிக்கிறேன், ”என்று அவரது பயிற்சியாளரும் முன்னாள் அணி வீரருமான ஒருவர் கூறியுள்ளார்.
நமது கிரிக்கெட் மனமும் இதே பாணியில்தான் செயல்படுகிறது. அவர் மக்களை (மற்றும்) கவனிப்பதில் அதிக நேரம் செலவிடுபவர், அது ஒரு அற்புதமான குணம். ஒவ்வொரு நபருக்கும் அவர் போதுமான நேரத்தை வழங்குவதை உறுதிசெய்கிறார், ”என்று நெஹ்ரா கேப்டன் பாண்டியா குறித்து விவரித்துள்ளார்.
சந்தேகத்திற்கு இடமின்றி, ஐபிஎல் போன்ற ஒரு போட்டியில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே உள்ள நம்பிக்கை மிகவும் முக்கியமான அம்சமாகும். சர்வதேச கிரிக்கெட்டில், கேப்டனும் பயிற்சியாளரும் ஒருவரையொருவர் விரும்புவது அவசியமில்லை என்றாலும், ஐபிஎல்லின் குறுகிய கால அவகாசம் கிட்டத்தட்ட ஒரு முன்நிபந்தனையாகிறது.
ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்பு, கொல்கத்தா பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ், அணி இன்னும் கோப்பையை வெல்லாதபோது கேப்டன் கம்பீருடன் தனது சமன்பாட்டை வெளிப்படுத்தினார். “நாங்கள் ஒரே மனநிலையைப் பகிர்ந்து கொள்கிறோம், அதே போல் சிந்திக்கிறோம் என்பதை நான் உணர்கிறேன்,” என்று பெய்லிஸ் ஐபிஎல் அமைப்பில் சேர்ந்த பிறகு தனது முதல் ஊடக உரையாடலில் கூறி இருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில், கம்பீர்-பேலிஸ் ஜோடி ஐபிஎல்லில் ஷாருக்கானுக்கு இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்தது.
“எங்களுக்கும் நீண்ட சந்திப்புகள் இல்லை. ஏனென்றால் விஷயங்கள் சரியாக நடக்காதபோது நீங்கள் பின்வாங்கக்கூடிய திட்டமிடலாக இருக்க வேண்டும், ”என்று மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தன, சோனி நெட்வொர்க்கில் 2020 இல் பிட் ஸ்டாப் நிகழ்ச்சிக்காக ரோகித் சர்மா உடனான தனது கூட்டணி பற்றி வெளிப்படுத்தி இருந்தார்.
பாண்டியா-நெஹ்ரா ஜோடி ரோஹித்-ஜெயவர்த்தனே ஜோடியைப் போன்றது. இவர்கள் அதிக திட்டமிடல் மற்றும் சந்திப்புகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். இருப்பினும், கேப்டன் பாண்டியாவிற்கு இயல்பான தலைமைத்துவ பாணியானது மஹி பாய் மற்றும் நெஹ்ராவால் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் அவரது சொந்த வழியில் ஃப்ளெமிங்கைப் போலவே உள்ளது.
இருவரும் நிரூபிக்கப்பட்டவர்கள் மற்றும் விளையாட்டின் புத்திசாலித்தனமான சிந்தனையாளர், அவர்கள் சிறந்த மனித-மேலாளர்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஃப்ளெமிங் அமைதியாக இருக்கும்போது, நெஹ்ரா எதிர் எதிராக இருக்கிறார். ஆனால் இருவரும் தங்கள் கேப்டன்களின் மேல் குருட்டு நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். பாண்டியா-நெஹ்ரா ஜோடியில் தோனி-ஃப்ளெமிங் வழிகளின் சாயல்களைப் பார்க்கலாம்.
2008 ஆம் ஆண்டில் தோனி மற்றும் ஃப்ளெமிங் இருவரும் சென்னையில் சக வீரர்களாக களமாடியவர்கள். இதேபோல், தனது 30வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வந்த நெஹ்ராவுக்கு சக வீரராக பாண்டியா அறிமுகமாகி இருந்தார். ஐபிஎல் 2018க்குப் பிறகு, “எம்எஸ் தோனி தான் என்னைக் கையாளுகிறார்,” என்று ஃப்ளெமிங் புன்னகையுடன் கூறியிருந்தார். “இது மனித மேலாண்மை பற்றியது. அவர் களத்தில் இறங்கும்போது, அந்த விஷயங்களைச் செய்யலாம். நிறைய நம்பிக்கையும் உள்ளது, அவருடன் இருப்பது ஒரு நல்ல உறவாகும், ”என்று தோனியின் தலைமைத்துவ பாணி குறித்து அவர் குறிப்பிட்டு இருந்தார்.

பாண்டியா-நெஹ்ரா ஜோடியைப் பொறுத்தவரை, இந்த ஐபிஎல்லில் ஒரு கனவுத் தொடக்கத்தைப் பெற்றுள்ளது என்றே கூறலாம். ஆனால் ஐபிஎல்லில் ஒரு சீசனில் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ஷ்டமும் முடிவுகளும் அடிக்கடி மாறுகின்றன என்பதை அவர்களுடன் நாமும் அறிந்ததுதான். அனைத்து திறமையான கேப்டன்-பயிற்சியாளர் கூட்டாணியும் சில மோசமான சீசன்களை சந்தித்து, கடந்து வந்துள்ளனர். வரவிருக்கும் சீசன்களில் பாண்டியா-நெஹ்ரா எதிர்கொள்ள வேண்டிய ஒரு சோதனை இதுவாக இருக்கிறது. மேலும் அவர்கள் ஒருவரையொருவர் பரஸ்பர மரியாதைக்குரிய வழிகளில் இன்னும் வைத்திருக்க முடிந்தால், ஐபிஎல்லில் சென்னை, மும்பை, மற்றும் கொல்கத்தா அணிகளைப் போல், அவர்களது குஜராத் அணியும் இன்னும் பலமுறை சாம்பியன் பட்டங்களை வெல்ல இயலும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
பாண்டியாவை கேப்டனாக ஆக்கியபோது பலர் மனதிலும் சந்தேகங்கள் ஏராளம். ஆனால், அவை அனைத்தையும் தவறென்று தவிடுபொடியாக்கி நிரூபித்தார். அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார், போட்டியின் சூழ்நிலைகளை கவனமாக ஆராய்ந்தார். மேலும், அணியில் உள்ள வீரர்களுக்கு எப்போதும் ஊக்கமளித்து வந்தார்.
2014 ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியா விற்கப்படவில்லை. 2022ல் அவர் குஜராத் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல வைத்துள்ளார். ஐபிஎல்லில் விற்கப்படாத வீரராகத் தொடங்கி, கோப்பைக்கு ஒரு அணிக்கு கேப்டனாக வென்று கொடுத்த முதல் வீரர் ஹர்திக் பாண்டியா என்கிற பெருமையை அவர் தற்போது பெற்றிருக்கிறார்.
Emotions, insights & a recap of the maiden IPL triumph in their maiden IPL season! ☺️ 🏆
— IndianPremierLeague (@IPL) May 30, 2022
On the mic with the @gujarat_titans' title-winning Captain @hardikpandya7 & Head Coach Ashish Nehra. 👏 👏 – By @RajalArora
Full interview 🎥 🔽 #TATAIPL | #GTvRR https://t.co/mzJxEOwIAT pic.twitter.com/KnYtoojKTt
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil