Advertisment

பாண்ட்யா vs சஞ்சு சாம்சன்: கோப்பையை வெல்லும் பலம் எந்த அணிக்கு?

IPL 2022 Final: GT vs RR Match Prediction, strength and week in tamil: நடப்பு தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த இரண்டு ஆட்டங்களிலுமே குஜராத் அணி தான் வெற்றியை ருசித்தது.

author-image
Martin Jeyaraj
New Update
GT vs RR IPL 2022 Final preview; Live Streaming, Date, Head to Head, predicted 11

Gujarat Titans vs Rajasthan Royals - IPL 2022 Final

IPL 2022 Final Tamil News: இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வந்த 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் இணைப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. இதில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Advertisment

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாகவும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது அணியாகவும், 2 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3வது அணியாகவும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறின. தொடர்ந்து வாழ்வா? சாவா லீக் ஆட்டத்தில் தோல்வி கண்ட டெல்லி கேபிட்டல்ஸ், மற்றும் தகுதி புள்ளிகளை பெறாத பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் நடையை கட்டினார்.

பிளே ஆஃப் சுற்றின் முதலாவது தகுதிச் சுற்றில் (மே 24ம் தேதி அன்று) பட்டியலில் முதல் மற்றும் 2வது இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி தும்சம் செய்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பின்னர் மே 25ம் தேதி நடந்த எலிமினேட்டர் சுற்றில் பட்டியலில் 3வது மற்றும் 4வது அணிகளாக இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான், தொடக்க வீரர் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்மூலம் தற்போது ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இந்த இறுதிப்போட்டியில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பாண்ட்யா vs சஞ்சு சாம்சன்

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸை வழிநடத்தி வரும் ஹர்டிக் பாண்டியா அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். லீக் சுற்றில் நடந்த 14 ஆட்டங்களில் அந்த அணி 4ல் மட்டும் தோல்வி கண்டு 10 வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப்க்கு முன்னேறியது. சில ஆட்டங்களில் அதிஷ்டத்தால் வெற்றி பெற்றது என்றாலும், அதற்குப்பின் இருந்த அந்த அணியினரின் உழைப்பு அளப்பரியது.

இந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு பல அணிகள் தங்கள் அணியை மறுகட்டமைப்பு செய்திருந்தன. ஆனால், அறிமுக அணியான குஜராத் முதலில் முக்கிய வீரர்கள் தேர்வு, பின்னர் மெகா ஏலத்தில் வீரர்கள் தேர்வு, அதன்பின்னர் கேப்டன் தேர்வு என ஒவ்வொரு படியாக கடந்து, தீவிர பயிற்சி மேற்கொண்டு நெடுந்தூர பயணத்திற்குப் பிறகு தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. ரஷித் கான், அல்சாரி ஜோசப் போன்ற ஆல்ரவுண்டர்கள் அணிக்கு மேலும் வலு சேர்க்கிறார்கள். சுழலில் ரஷித் கான் வழக்கம்போல் மிரட்டி வருகிறார். அவருடன் சாய் கிஷோர் உறுதுணையாக இருக்கிறார். லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் போன்ற வீரர்கள் வேகத்தில் பட்டையை கிளப்புகின்றனர்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 வெற்றி 5 தோல்விகளுடன் லீக் சுற்றில் 2ம் இடத்தை பிடித்ததோடு நிறைவு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 4 சதம் 4 அரைசதம் என 824 ரன்களை குவித்து வலுவான ஃபார்மில் உள்ளார். மேலும், அவர் நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியையும் வசப்படுத்தி உள்ளார்.

பட்லர் தவிர, ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் ஹாட்ரிக் அரைசதம் அடித்த ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வினும் அணியில் இருப்பதால் பேட்டிங் வரிசை கூடுதல் பலம் பெற்றுள்ளது.

பந்துவீச்சில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுழல் மன்னன் யுஸ்வேந்திர சாஹல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பை வசப்படுத்தியுள்ளார். அவருடன் இணைந்து நெருக்கடி கொடுக்கும் அஸ்வினும் தனது மாயாஜால சுழலில் சிக்க வைத்து கதிகலங்க செய்கிறார். டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் வேகத் தாக்குதல் தொடுத்து மிரட்டி வருகின்றனர்.

  1. ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி தேதி

நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 29) நடைபெறும் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்கொள்கிறது.

  1. ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி நடைபெறும் இடம்

குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானம் இந்தாண்டு தொடக்கத்தில் தான் திறக்கப்பட்டது.

  1. ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி நேரம்

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு, இரவு 8 மணிக்குத் தொடங்கிறது.

  1. ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி ஒளிபரப்பு

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், லைவ் ஸ்ட்ரீமிங் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் உள்ளது.

5. நேருக்குநேர்…

நடப்பு தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த இரண்டு ஆட்டங்களிலுமே குஜராத் அணி தான் வெற்றி பெற்றது. எனவே, நாளை நடக்கும் இறுதிப்போட்டியிலும் அந்த அணியே ஆதிக்கம் செலுத்த முயற்சி காட்டும். இதற்கு முட்டுக்கட்டை போடவே ராஜஸ்தான் தீவிரம் காட்டும். எனவே இவ்விரு அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், யாஷ் தயால், அல்சாரி ஜோசப், முகமது ஷமி

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஓபேட் மெக்காய்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ipl Finals Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment