IPL 2022 CSK vs SRH Highlights in tamil: 15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கிய 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சென்னை அணியில் ராபின் உத்தப்பா – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் உத்தப்பா 15 ரன்னிலும், 3 பவுண்டரிகளை துரத்திய ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
களத்தில் இருந்த மொயீன் அலி – அம்பதி ராயுடு ஜோடி அடுத்தடுத்த விக்கெட் இழப்பை தடுத்து அதிரடி கலந்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதில் 4 பவுண்டரிகளை விரட்டிய ராயுடு 27 ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட மொயீன் அலி 35 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 48 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த வீரர்களில் ஷிவம் துபே மற்றும் எம்.எஸ். தோனி 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் ஜடேஜா 23 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதனால், ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 9, 2022
After being put to bat first, #CSK post a total of 154/7 on the board.#SRH chase coming up shortly.
Scorecard – https://t.co/8pocfkHpDe #CSKvSRH #TATAIPL pic.twitter.com/arrfmQkuYm
பந்துவீச்சில் தொடக்க முதலே நெடுக்கடி கொடுத்தவந்த ஐதராபாத் அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், ஐடன் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 155 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் கேன் வில்லியம்சன் அபிஷேக் சர்மா ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சென்னை 10 ஓவர்களை கடந்த போதிலும் விக்கெட் வீழ்த்த திணறி வந்தது.
இந்த ஜோடியில் பொறுப்புடன் ஆடி வந்த வில்லியம்சன் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கிடையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ராகுல் திரிபாதியுடன் சேர்த்து சிறப்பாக விளையாடி வந்த அவர் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 75 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டி வந்த ராகுல் திரிபாதி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும், அந்த அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. சென்னை அணிக்கு இது 4வது தோல்வியாகும்.
.@SunRisers win by 8 wickets to register their first win in #TATAIPL 2022.#CSKvSRH pic.twitter.com/aupL3iKv5v
— IndianPremierLeague (@IPL) April 9, 2022
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்:
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்
Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai 16 May 2022
Chennai Super Kings 154/7 (20.0)
Sunrisers Hyderabad 155/2 (17.4)
Match Ended ( Day – Match 17 ) Sunrisers Hyderabad beat Chennai Super Kings by 8 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் சேர்த்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 71 ரன்களுடனும், ராகுல் திரிபாதி 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா அரைசதம் விளாசினார். அவர் 32 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விளாசி அரைசதத்தை பதிவு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 12 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 44 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 27 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடிது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியில் அதிரடியாக விளையாடி அணியின் அதிரடியாக உயர்த்திய மொயீன் அலி அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.
ஐதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது 155 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.
Innings Break!After being put to bat first, #csk post a total of 154/7 on the board.#srh chase coming up shortly.Scorecard – https://t.co/8pocfkHpDe #cskvsrh #tataipl pic.twitter.com/arrfmQkuYm
— IndianPremierLeague (@IPL) April 9, 2022
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்களை சேர்த்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தி வந்த மொயீன் அலி 34 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளை சிதறவிட்டு 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை சேர்த்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தி வந்த அம்பதி ராயுடு 4 பவுண்டரிகளை துரத்தி 27 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்களை சேர்த்துள்ளது.
அதிரடி காட்டி வரும் சென்னை அணியில் மொயீன் அலி 39 ரன்களுடனும் – அம்பதி ராயுடு 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்களை சேர்த்துள்ளது.
மொயீன் அலி 22 ரன்களுடனும் – அம்பதி ராயுடு 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்களை சேர்த்துள்ளது.
மொயீன் அலி, – அம்பதி ராயுடு ஜோடி களத்தில் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரியை ஓடவிட்டு 16 ரன்கள் சேர்த்த நிலையில் நடராஜன் வீசிய ஓவரில் போல்ட்-அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பா 1 பவுண்டரியை ஓடவிட்டு 15 ரன்கள் சேர்த்த நிலையில் சுந்தர் வீசிய 3.1 வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களத்தில் உள்ளனர்.
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி
The XI with a new 🦁 in! #cskvsrh #whistlepodu #yellove 💛 pic.twitter.com/I4gbdbywEA
— Chennai Super Kings (@ChennaiIPL) April 9, 2022
15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கும் 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
மொத்த போட்டிகள் – 16
சென்னை சூப்பர் கிங்ஸ் – 12
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 4
சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளின் முந்தைய ஆட்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
கடைசி ஐந்து போட்டிகளின் முடிவுகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மிட்செல் சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், அம்பதி ராயாடு, ராபின் உத்தப்பா, மிட்செல் சான்ட்னர், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டெவோன் கான்வே, ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், மஹே பிரிட்டோரியஸ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே, கேஎம் ஆசிஃப், சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சுப்ரான்ஷு சேனாபதி, கே பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், பிரியம் கார்க், விஷ்ணு வினோத், கிளென் பிலிப்ஸ், ஆர் சமர்த், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், மார்கோ ஜான்சன், ஜே சுசித் , ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், சீன் அபோட், கார்த்திக் தியாகி, சௌரப் திவாரி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக், டி நடராஜன்
15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கும் 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – ஐதரபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.