IPL 2023 play-off Tamil News: 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விளையாடி வரும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டியின் அட்டவணையை பி.சி.சி.ஐ அறிவித்தது. அதன்படி, பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
மே 23ம் தேதி தகுதிச் சுற்று 1 மற்றும் மே 24ம் தேதி எலிமினேட்டர் போட்டி சென்னையில் நடக்கிறது. மே 26ம் தேதி தகுதிச் சுற்று 2 மற்றும் மே 28ம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.
எந்த அணிக்கு வாய்ப்பு இருக்கு?
தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 4 அணிகளுக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பு குறைவாக உள்ள அணிகளாக உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil