IPL Cricket DIPL covid scare,IPL 2022,Covid Scare in IPL 2022,Delhi Capitel players Under Quarantine: நடப்பு ஐபிஎல் தொடரில் 3-வமு முறையாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 26-ந் தேதி தொடங்கியது. ஏற்கனவே இருந்த 8 அணிகள் மற்றும் லக்னோ, குஜராத் என இரண்டு அணிகளுடன் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாடும் இந்த தொடர் கொரோனா அச்சுத்தல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் மட்டுமே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீராகளுக்கு இன்று காலை நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அந்த வீரர் தலைவலி மற்றும் லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாகும் அவர் ஒரு வெளிநாட்டு வீரா என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமான இன்று நடைபெறும் ஆர்டி-பிசிஆர் சோதனையின் முடிவுகள் வரும்வரை டெல்லி அணி, புனேவுக்கு புறப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவுறுத்தியுள்ளது. ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவுகள் பாசிட்டீவாக உறுதிசெய்யப்பட்டால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொற்று பாதிக்கப்படுவது இது 3-வது முறையாக இருக்கும்.
ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஒரு நாள் கழித்து, மசாஜ் செய்யும் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மற்ற அணியில் தனிமைப்படுத்தப்பட்டனர்
புனேயின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை மாலை பஞ்சாப் கிங்ஸஸ டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளது. அணி முழுவதும் கொரோனா தொற்று பரவுவரத தடுக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் டெல்லி கேபிடல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆட்டத்தில், மோதிய ஆட்டத்தில், இரு அணி வீரர்களுக்கும் இடையில் கைகுலுக்கல் அல்லது கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மேலும் வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பொதுவாக போட்டி முடிந்து கலைந்து செல்வதற்கு முன்பு ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள் ஆனால் டெல்லி வீரர்கள் இப்படி அரட்டை அடிக்கும்போது போது சமூக விலகலைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு்ளளது. மேலும் மாஸ்க் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ப்ளேயிங் லெனில் வாயப்பு கிடைக்காமல் வெளியில் ஸ்டாண்டில் இருந்து ஆட்டத்தைப் பார்க்கும் வீரர்கள், மற்றும் அணி நிர்வாகிகள் சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் போட்டி முழுவதும் முகமூடி அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“