சுழறன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா! - jasprit bumrah Tamil News: Bumrah becomes first Indian pacer to take 250 T20 wickets | Indian Express Tamil

சுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா!

Jasprit Bumrah sets new T20 landmark, he becomes first Indian pacer to achieve THIS record Tamil News: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்கிற புதிய சாதனையை பும்ரா படைத்து அசத்தியுள்ளார்.

சுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா!
Jasprit Bumrah – ஜஸ்பிரித் பும்ரா

Jasprit Bumrah news in tamil: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக உயர்ந்துள்ள இவர், இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். மிகத்துல்லியமாக பந்துகளை பேட்ஸ்மேன்ஸ்களை திணறடிக்கும் இவர் இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 123 விக்கெட்டுகளையும், 70 ஒருநாள் போட்டிகளில் 113 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 27 சர்வேதேச டி20 போட்டிகளில் 67 விக்கெட்டுகளையும், 119 ஐபிஎல் தொடருக்கான ஆட்டங்களில் 142 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இவை தவிர, கிரிக்கெட் அரங்கில் தனது சுழறன்று வீசும் சூறாவளி வேகப்பந்துவீச்சில் பல மகத்தான சாதனைகளையும் பும்ரா பதிவு செய்துள்ளார். ஒரே ஆண்டில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளராக பும்ரா வலம் வருகிறார்.

2021-2023 ஆண்டுகளில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பும்ரா 40 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். சர்வதேசப் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இவர் 9வது இடத்தில் (100 விக்கெட்டுகள் – 57 ஆட்டங்கள்) உள்ளார்.

மேலும், அதிக மெய்டன் ஓவர்களை வீசிய பந்துவீச்சாளர்களில் பும்ரா முதலிடத்தில் உள்ளார். இப்படியாக இவரின் வேகப்பந்துவீச்சு சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்நிலையில், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்கிற புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

பொதுவாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதன்படி, அஷ்வின் (274 விக்கெட்), சாஹல் (271 விக்கெட்), புயூஷ் சாவ்லா (270 விக்கெட்), அமித் மிஷ்ரா (262 விக்கெட்) ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் டி20 ஆட்டங்களில் 250-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் தான், டி20 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 250 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இந்த சாதனையை அவர் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். 223 விக்கெட்களுடன் இந்த பட்டியலில் புவனேஸ்வர் குமார் 2-வது இடத்தில் உள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Jasprit bumrah tamil news bumrah becomes first indian pacer to take 250 t20 wickets