News about IPL, MS Dhoni in tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (மார்ச் 31-ந் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் களமாட 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அகமதாபாத் மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த சீசனில் நடந்த 2 லீக் ஆட்டங்களிலும் சென்னையை குஜராத் தோற்கடித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தொடரை வெற்றியுடன் தொடங்கவும் சென்னை அணி திட்டமிட்டு வருகிறது. அதேவேளையில், சொந்த மைதானத்தில் அரங்கேறும் ஆட்டம் என்பதால் குஜராத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும். எனவே இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
தோனிக்கு காயமா?
இந்நிலையில், சென்னை
A memory for eons to come! Super thanks for making it, fans! 💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/FZYouEsde0
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2023
இது தொடர்பாக ஸ்போர்ட்ஸ்ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோனி நிகர அமர்வை எடுக்க தயங்கினார் மற்றும் அவரது இடது காலை ஓரளவு பாதுகாக்க முழங்காலில் ‘நீ கேப்’ (kneecap) அணிந்திருந்தார். அவரது நிலையை மதிப்பிடுவதற்காக தனது காலை நீட்டி தரையில் அழுத்தினார். பின்னர் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தார். அவர் தனது முழங்காலில் அசௌகரியத்தை உணர்ந்தார் மற்றும் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டார் மற்றும் ஒரு ஓட்டத்தை முடிக்க முடியாமல் தென்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளது. எனினும், அவரது காயம் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
இதனிடையே, பயிற்சி ஆட்டத்தின் போது தோனி சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார். இதைப் பார்க்க குவிந்திருந்த ரசிகர்கள் எழுப்பி சத்தம் விண்ணை முட்டியது. மேலும், அவர் மைதானத்திற்குள் நுழையும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil