Advertisment

ரியான் பராக் முதல் ரஸ்ஸல் வரை: அவ்வளவு வொர்த் இல்லை; நம்பி மோசம் போன அணிகள்!

நான்கு போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள ரியான் பராக் மொத்தமாகக் கூட 4 சிக்ஸர்களை அடிக்கத் தவறி வருகிறார்.

author-image
WebDesk
New Update
Riyan Parag to Andre Russell; 5 Overrated Cricketers In IPL 2023 Tamil News

Top 5 Overrated Cricketers - Exposed In IPL 2023

IPL 2023, 5 Overrated Cricketers Tamil News: 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் - 2023) போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆட்டமும் கடைசி ஓவருக்குச் சென்றிருப்பதாலும், ரசிகர்கள் தங்கள் நகம் கடிக்கும் மற்றும் பி.பி -யை எகிற வைக்கும் கடைசி பந்து வெற்றி தோல்விகள் ஐ.பி.எல் தொடரை அதன் உச்சத்தில் வைத்துள்ளது. மேலும், போட்டியின் கடைசி ஐந்து பந்துகளை ரிங்கு சிங் சிக்ஸர் அடித்து நொறுக்கியது முதல், சந்தீப் ஷர்மா சரியான யார்க்கரை வீச அதை தோனி பறக்கவிடாத வரை, பரபரப்பான கிரிக்கெட் அதிரடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

Advertisment

இருப்பினும், சில வீரர்கள் நடப்பு சீசன் தொடங்குவதற்கு முன்பே நிறைய நம்பிக்கையை அளித்துள்ளனர். ஆனால் முதல் சில வாரங்கள் சென்ற நிலையில், அவர்கள் பெரிய அளவில் சோபிக்க தவறி தோல்வியடைந்துள்ளனர். அவ்வகையில், இந்த ஆண்டு ஐபிஎல்-லில் அதிகம் பேசப்பட்ட மற்றும் சொத்தாக கருதப்பட்ட வீரர்களையும், அவர்கள் இடம்பிடித்துள்ள அணிகளையும் இங்கு பார்க்கலாம்.

பிருத்வி ஷா

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா அதிக ரன்களை சேர்க்க திணறி வருகிறார். டெல்லி அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால், அந்த அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பெரும் பின்னடைவை சந்திக்க பிருத்வி ஷா-வின் மோசமான ஃபார்ம் முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

publive-image

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவரால் 34 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. ரசிகர்களும் அவர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். மேலும், அணியும் அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து கழற்றி விட்டது.

ரியான் பராக்

நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, ரியான் பராக் சமூக ஊடகங்களில் ஒரு தைரியமான அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் போட்டியின் ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்களை அடிப்பதாக உணர்கிறேன் என்று கூறினார். இருப்பினும், நான்கு போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர், மொத்தமாகக் கூட 4 சிக்ஸர்களை அடிக்கத் தவறி வருகிறார். அவர் ஆடிய முதல் 4 போட்டிகளில், 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் ஒரு போட்டியில் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் கழற்றி விட்டது.

publive-image

கடந்த காலங்களில் ரியான் பராக்-கின் மந்தமான ஆட்டத்திற்காகவும், அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த அணி நிர்வாகத்தையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அவருக்கான ராஜஸ்தான் அணியின் முதலீடு ஒரு மோசமான முடிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மயங்க் அகர்வால்

கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்திய மயங்க் அகர்வால், இந்த ஆண்டு தொடருக்கு முன்னதாக அவரை அணி நிர்வாகம் கழற்றி விட்டது. மினி ஏலத்திலும் அவர் பெரிய அளவில் விலை போகவில்லை.

publive-image

அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கிய நிலையில், பேட்டிங் செய்ய அவருக்குப் பிடித்த இடத்தை (தொடக்க வீரர்) கொடுத்தது. தனது ஃபார்மைக் கண்டுபிடிக்க தவறி வரும் அவர், 4 போட்டிகளில் சிறந்த 27 ரன்களுடன், ரசிகர்களையும் ஐதராபாத் நிர்வாகத்தையும் ஏமாற்றியுள்ளார்.

தீபக் சாஹர்

ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் மிகவும் விலையுயர்ந்த வீரர்களில் ஒருவராக தீபக் சாஹர் இருக்கிறார். அவரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணி எடுத்தது. ஆனால், காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரைத் தவறவிட்டார்.

publive-image

இந்த ஆண்டில் அவர் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் ரசிகர்களால் மிகவும் உயர்வாக மதிப்பிடப்பட்ட நிலையில், உண்மையில் நினைத்த எதிர்பார்ப்புகளை அவர் வழங்கவில்லை. 3 போட்டிகளில் விளையாடிய அவர் 94 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. மீண்டும் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார்

ஆண்ட்ரே ரஸ்ஸல்

மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்ட்ரே ரஸ்ஸல் தோல்வியின் விளிம்புக்கு சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பலமுறை கை கொடுத்து துக்கியுள்ளார். இருப்பினும், கடந்த சில ஐபிஎல் சீசன்களில் அவர் ஒரு வெளிர் நிழலாகவே இருந்து வருகிறார்.

publive-image

ரஸ்ஸல் தன் விருப்பப்படி எல்லையைத் தாண்டி, மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பார். காயம் காரணமாக, அவர் இந்த நாட்களில் அரிதாகவே பந்துவீசுகிறார் மற்றும் அவரது பேட்டிங் கிளிக் ஆகவில்லை. இந்த சீசனில் கொல்கத்தா அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் இடம்பிடித்து வருகிறார். ஆனால், 5 ஆட்டங்களில் அவர் 60 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Ipl Ipl Cricket Ipl News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment