Ireland vs India 2022 Tamil News: சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட இந்தியா, தொடர் முழுதும் அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யாமல் விளையாடியது. இப்போது அதே அணியுடன் அயர்லாந்து சென்றுள்ள இந்தியா அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இது பல விஷயங்களில் ஒத்ததாக இருந்தாலும், இரண்டு முக்கிய வழிகளில் வேறுபட்டு இருக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இதனால், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா அணிக்கு கேப்டனாக செயல்பட இருக்கிறார். இதேபோல், ராகுல் டிராவிட் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார். எனவே, ஹர்திக் மற்றும் லக்ஷ்மண் தலைமையின் கீழ் களமிறங்க உள்ள இந்தியாவின் ஆடும் லெவன் எப்படி இருக்கும்? யார் யாருக்கு அந்த அணியில் இடம் கிடைக்கும்? என ரசிகர்கள் மத்தியில் எழும் பல கேள்விகளுக்கு இங்கு விடையளிக்க முயன்றுள்ளோம்.
3 மற்றும் 4வது இடத்தில் பேட் செய்ய போவது யார்?
ஸ்ரேயாஸ் மற்றும் பண்ட் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், அவர்கள் களமாடும் 3 மற்றும் 4 வது இடங்களை எந்த வீரர்களை கொண்டு நிரப்புவது என்பது இந்தியாவின் மிகவும் கடினமான தேர்வாக இருக்கும். அந்த 2 இடத்திற்கு மட்டும் அணியில் 5 வீரர்கள் இருக்கிறார்கள். அந்த ஐந்து பேரில், தீபக் ஹூடா மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முழு தென்ஆப்பிரிக்கா தொடரையும் பெஞ்சிலே செலவிட்டவர்கள். அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இணைகிறார்கள்.
தனது முன்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சூர்யகுமார் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை தவறவிட்டார். காயத்தில் இருந்து மீண்டுள்ள அவருக்கு அணியில் நிச்சயம் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏன்னென்றால், 12 சர்வதேச டி20யில் விளையாடி இருக்கும் சூர்யகுமாரின் சராசரி 39.00 ஆக உள்ளது. மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 165.56 ஆக உள்ளது. இது ஷ்ரேயாஸை விட அதிகமாகும். மேலும், அவரின் தரமான அதிரடி ஆட்டம் இந்திய அணி மிடில்-ஆர்டருக்கு வலு சேர்க்கும்.
ஆனால், இன்னும் காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கு மீதமுள்ள நான்கில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதில் சஞ்சு சாம்சனும், இந்திய அணியில் இதுவரை அறிமுகமாகாத ராகுல் திரிபாதியும் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டிருகிறார்கள். இருவரும் தங்கள் இன்னிங்ஸின் தொடக்கத்தில் பந்துவீச்சை தும்சம் செய்யும் அதிரடியை வெளிப்படுத்துகிறார்கள். மேலும், அவர்களின் திறமை மற்றும் விருப்பத்திற்காகவும் அறியப்படுகிறார்கள். இதேபோல் அவர்கள் இருவரும் வேகம் மற்றும் சுழலுக்கு எதிராக சமமாக சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் அதில் சஞ்சு குறிப்பாக ஈர்க்கக்கூடிய ஸ்ட்ரைக்-ரேட் எண்களைப் பெற்று இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 3-வது இடத்தில் நிலையான ஃபார்மில் இருந்து, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஹூடா இந்திய அணிக்கான வாய்ப்பை பெற்றார். எக்ஸ்ட்ரா கவரில் பந்தை ஓட விடுவதை தவிர, அவர் ஆஃப் ஸ்பின் வீசுபவராகவும் இருக்கிறார். மற்ற சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் ஸ்டாக் பந்தை வேறு திசையில் திருப்புவதன் மூலம் இந்தியா இதைப் பயனுள்ளதாகக் கருதலாம் (இருப்பினும், லெக்பிரேக் என்பது ரவி பிஷ்னோயின் ஸ்டாக் பந்து என்று நீங்கள் கருதினால் மட்டுமே அது உண்மையாக இருக்கும், அது தவறானது அல்ல).
ஐவரில் வெங்கடேஷ் ஐயர் 3 அல்லது 4-வது இடத்தில் பேட் செய்ய விரும்பாதவராகத் தெரிகிறார். ஏன்னென்றால், அவர் பொதுவாக தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது ஃபினிஷராகவோ பயன்படுத்தப்படுகிறார். ஆனால் அவரது இடது கை பேட்டிங், பண்ட்டின் ஆப்ஷன்ட் போன்றவை அவருக்கு வாய்ப்பை தேடி தருபவைகளாக இருக்கின்றன.
எவ்வாறாயினும், அணி நிர்வாகம், வெங்கடேஷை முதல் நான்கு தேர்வாகக் காட்டிலும் ஹர்திக்கின் பேக்-அப் வீரராக எடுத்துக்கொள்ளும். ஹர்திக் கேப்டனாக இருப்பதால், ஐரிஷ் நிலைமைகளில் இரண்டு சீம்-பவுலிங் ஆல்ரவுண்டர்களுடன் இந்தியா செல்ல முடிவுசெய்யலாம். சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேலை விட்டுவிட்டால் மட்டுமே வெங்கடேஷுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
விக்கெட் கீப்பர் யார்?
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று கீப்பர்கள் உள்ளனர். வழக்கமான கீப்பர் பண்ட் இல்லாததால், இந்த மூவரில் யார் விக்கெட் கீப்பராக களமாடுவார்கள் என்பதை காண ஆர்வமாக இருக்கிறது. ஆனாலும், இவர்களில் யார் அணியில் இடம் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் விக்கெட் கீப்பர் வாய்ப்பு கிடைக்கும். இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான அணியில் இடம்பெறாத சாம்சனை நீக்கி விடலாம். ஏனென்றால், அவர் அப்பர் மிடில் ஆர்டரில் வரையறுக்கப்பட்ட அந்த இடத்திற்காக போட்டியிடும் பல போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்திய அணியில் உள்ள எல்லா ஆட்டக்காரர்களும் டி20 செட்-அப்பிற்குத் திரும்பும்போது, முதலில் தேர்வு செய்யப்படும் மூன்று வீரர்களில் ஒருவராக தினேஷ் கார்த்திக் இருப்பார். ஏன்னென்றால் அவர் தன்னை தானே ஃபினிஷரின் ரோலில் முன்னேற்றி கொண்டவர். இதற்கு, அவரின் ஆட்டத்தை நடப்பு ஐபிஎல் தொடரிலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் புருவம் உயர்த்தி பார்த்த நாமே சாட்சி.
தென்ஆப்பிரிக்கா தொடரின் போது இரு தரப்பிலும் அதிக ரன்கள் எடுத்தவராக தொடக்க வீரர் இஷான் கிஷன் இருந்தார். இந்திய டி20 அணியைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் ரோகித் மற்றும் கே.எல்.ராகுலுக்கு பேக்-அப் வீரராக இருப்பார்.
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்த தெளிவான தகவல், இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியை அறிவித்த பிசிசிஐ வெளியீட்டிலே நம்மால் பார்க்க முடிந்தது. அணியில் மூன்று கீப்பர்கள் இருந்தாலும், தினேஷ் கார்த்திக்கின் பெயருக்கு பக்கத்தில் மட்டுமே "விக்கெட்-கீப்பர்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, அவர் தான் விக்கெட் கீப்பராக களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த தொடரிலாவது அர்ஷ்தீப் மற்றும் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா?
தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்வதற்கான இந்திய அணியை அறிவித்தபோது, இடது கை டெத்-பவுலிங் ஸ்பெஷலிஸ்ட் அர்ஷ்தீப் சிங் மற்றும் மிடில் ஓவர்களில் பயமுறுத்தும் உம்ரான் மாலிக் ஆகியோரின் பெயர்கள் பெரிதும் பேசப்பட்டன. ஆனால் அந்தத் தொடரில் இருவரும் விளையாடவில்லை. 2-0 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கூட அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. ஆனால், இந்த தொடரில் அவர்கள் இருவரும் இடம்பிடித்திருப்பது அவர்களுக்கான சோதனை காலமாக இருக்கலாம்.
இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான தேர்வுகளில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கான இடம் ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விட்டது. சுழல் முன்னணி வீரராக யுஸ்வேந்திர சாஹல் இருப்பார். இந்தத் தொடரின் போது இந்தியா அவர்கள் மூவருக்கும் வெவ்வேறு புள்ளிகளில் ஓய்வு கொடுக்கலாம். மற்றும் அர்ஷ்தீப், மாலிக் மற்றும் பிஷ்னோய் ஆகியோரை சோதிக்கலாம். இந்த தொடர், அறிமுகமில்லாத சூழ்நிலையில் இந்தியாவிற்கு அவர்களின் திறமைகளை சோதிக்க சிறந்த வாய்ப்பாக அமையும். விரைவாக செயல்படக்கூடிய அறிமுகமாகாத இவர்களுடன் ரவி பிஷ்னோயும் இன்னும் வெளிநாட்டு மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடவில்லை.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.