தோனி அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் என்ன?

அப்படியெனில், அந்த புதிய விக்கெட் கீப்பருக்கு தானே டி20 போட்டிகளில் இனிமேல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்?. அதைத் தானே, இந்திய அணி நிர்வாகமும் இப்போது செய்திருக்கிறது

தோனி
தோனி

‘சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?’ என்று எங்க ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க. அதுமாதிரி, சோஷியல் மீடியாவில் புழங்குறவங்களுக்கு, செய்திகளை எப்படிச் சொல்லவேண்டும் என்று கற்றுத் தர வேண்டுமா என்ன?

நேற்று மாலை, இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் செய்தியாளர்களை நேரில் சந்தித்து ஒரு அறிக்கை வெளியிடுகிறார். வெஸ்ட் இண்டீஸ் உடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும், அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிடுகிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய டி20 அணி: ரோஹித் ஷர்மா(கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(வி.கீ), க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், பும்ரா, கலீல் அஹ்மத், உமேஷ் யாதவ், ஷாபஸ் நதீம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(வி.கீ), க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், பும்ரா, கலீல் அஹ்மத், உமேஷ் யாதவ்.

இரண்டு தொடரிலுமே தோனியின் பெயர் இடம் பெறவில்லை. உடனே, வெளியான செய்திகளை பார்க்கணுமே.. ‘தோனி இந்திய அணியில் இருந்து நீக்கம்’ , ‘தோனி அணியில் இருந்து புறக்கணிப்பு’ , ‘தோனியை அணியை விட்டு நீக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம்’ என்ற ரேஞ்சுக்கு தலைப்புக்கள் தகதகத்தன.

இதைப் பார்த்த தோனி ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சி. என்னடா இது தோனியை இப்படி டீமை விட்டு நீக்கிட்டாங்க-னு ஒரு கலக்கம்.

அதற்குள், ஒரு குரூப் சமூக தளங்களில் பொங்கி வந்து, ‘தோனியின் கிளவுஸ் இனி அவருக்கு சொந்தமில்லை’ , ‘ஸ்டெம்ப்புகளுக்கு பின்னாடி தோனிக்கு இடமில்லை’ , ‘தோனியை டீமை விட்டு நீக்கியது சரியா, தவறா? உங்கள் கருத்து என்ன’ என்று சீரியஸ் டிஸ்கஷன் நடத்திக் கொண்டிருக்கிறது.

அடங்கப்பா சாமி…! என்று தான் இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மால் நினைக்க முடிந்தது.

தோனி அல்மோஸ்ட் தனது கரியரின் டெஸ்டினேஷனில் நின்றுக் கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை மனதில் கொண்டே, தோனியும் அணியில் நீடிக்கிறார், இந்திய அணி நிர்வாகமும் அவரை டீமில் வைத்துள்ளது.

ஏன் தெரியுமா?. ஸ்டெம்ப்புகளுக்கு பின்னால் நின்று கொண்டு, தோனி செய்யும் மேஜிக்குகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. DRS எனும் தோனி ரிவியூ சிஸ்டம், இன்னமும் தோனியின் கண் அசைவில் தான் உள்ளது. குல்தீப்பாக இருக்கட்டும், சாஹலாக இருக்கட்டும்.. எதிரணி பேட்ஸ்மேன்கள் அவர்களின் பந்தை ஒரே ஒரு சிக்ஸருக்கு தூக்கிவிட்டால் போதும், அடுத்த நொடி தோனி பாயின் ஆலோசனையை கேட்டு பந்து வீசுகிறார்கள். கேப்டன் விராட் கோலி, இன்னமும் தோனியிடம் கேப்டன்ஷிப் பயின்று வருகிறார்.

ஒரு காலத்தில் சச்சின் டீமில் இருந்தால், எப்படி ஒரு பாசிட்டிவ் வைப், வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் நிலவுமோ, அப்படியொரு வைப்ரேஷன் இன்று தோனியால் இளம் கோலி படைக்கு கிடைக்கிறது.

இங்கிலாந்து போன்ற ஸ்விங் கண்டிஷனில், தோனியின் ஆலோசனை விராட் கோலிக்கு நிச்சயம் தேவை என்பதை உணர்ந்தே, தோனி உலகக் கோப்பை வரை அணியில் நீடிக்க வேண்டும் என நிர்வாகமும் விரும்புகிறது, கேப்டன் கோலியும் விரும்புகிறார். இதை பலமுறை அவர்களே சொல்லிவ்ட்டனர். கோலி சொல்லி சொல்லி அலுத்துப் போயிட்டார்.

அதற்கு மேல், அவரை இருக்கச் சொன்னாலும் அவர் அணியில் இருக்கப் போவதில்லை. ஆக, 2019 உலகக் கோப்பைக்கு பிறகு, தோனி சர்வதேச கிரிக்கெட்டே ஆட வாய்ப்பில்லை. இந்தச் சூழ்நிலையில், 2020ல் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. தோனி அதில் விளையாடப் போவதில்லை. அப்படியெனில், அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை இப்போதிலிருந்தே உருவாக்க வேண்டியது அவசியம் தானே. அப்படியெனில், அந்த புதிய விக்கெட் கீப்பருக்கு தானே டி20 போட்டிகளில் இனிமேல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்?. அதைத் தானே, இந்திய அணி நிர்வாகமும் இப்போது செய்திருக்கிறது.

இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல், ‘தோனி அணியில் இருந்து நீக்கம்’, ‘தோனியை கழட்டிவிட்ட இந்திய அணி’ போன்ற பதிவுகளை உளறல்கள் என்று சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வது!.

அப்புறம், அந்த குரூப்புக்கு மற்றொரு கூடுதல் தகவலும் இங்கே… 2014 டிசம்பரில், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது, முதல் போட்டியில் ஆடிய பிறகு, யாருமே எதிர்பார்க்காத வகையில் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதை இந்திய கிரிக்கெட் நிர்வாகமே எதிர்பார்க்கவில்லை.

அவருக்கு என்ன தோன்றுகிறதோ, அதை யார் தடுத்தாலும் செய்வதே தோனியின் ஸ்டைல். அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதுவே இறுதியானது. அவரை அணியில் இருந்து யாரும் நீக்கத் தேவையில்லை. அவருக்கு தெரியும், எப்போது அணியில் இருந்து விலக வேண்டுமென்று. அதற்கு அவருக்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை!.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Is dhoni dropped from team

Next Story
Tamil Thalaivas vs Gujarat Fortunegiants PKL : 36-25 என குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் வெற்றிTamil Thalaivas vs Gujarat Fortunegiants Pro Kabaddi Live Score
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express