Advertisment

கங்குலி மாரடைப்புக்கு காரணம் அரசியல் அழுத்தமா?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் திடீர் மாரடைப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து பல அதிர்ச்சியான தகவல்கள்

author-image
WebDesk
New Update
கங்குலி மாரடைப்புக்கு காரணம் அரசியல் அழுத்தமா?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும், தற்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமாக சவுரவ் கங்குலி, கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு இதயத்தில் அடைப்பு காரணமாக அறுவை செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நாளை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், கங்குலிக்கு உண்மையிலேயே மாரடைப்பு ஏற்பட்டதா,  என பலகட்ட சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், கங்குலியின் நண்பரும், தற்போதைய வங்காளத்தின் யு -23 அணியின் பயிற்சியாளருமான சவுராசிஷ் லஹிரி கூறுகையில்,  கங்குலி தனது வேலையுடன் மிகவும் ஒன்றியிருந்தார். அவர் எப்போதும் உடற்பயிற்சியில் ஈடுபடுவார். ஆனால் வழக்கத்தை விட அதிக நாட்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

மேலும் கடந்த 30-ந் தேதி தன்னை உருவாக்கிய கொல்கத்தா மைதானத்திற்கு வந்த கங்குலி ரணதேப் போஸ் மற்றும் மனோஜ் திவாரி போன்றவர்களுடன் உரையாடிவிட்டு சென்றுள்ளார். அடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அவருக்கு மாரடைப்பு என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கங்குலிக்கு மாரடைப்பு செய்தி அறிந்து கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி வங்காள அணியின் முன்னாள் கேப்டனும்,  தேசிய தேர்வாளருமான சம்பரன் பானர்ஜி்டம் “ஒரு விளையாட்டு வீரருக்கு மாரடைப்பு ஏற்படுவது எப்படி? சவுரவ் போன்ற ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்படி? இதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாலையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை நிர்வாகம், கங்குலி சீராக இருப்பதாகவும், அவர் மருத்துவமனைக்கு வந்த உடனேயே அவர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய சம்பரன் பானர்ஜி, சவுரவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது சாத்தியமில்லை. விளையாட்டு வீரர்களின் வாழ்வில் ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன.  மிகுந்த ஆரோக்கியத்துடன், இருந்த அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நம்ப முடியவில்லை. “கடந்த ஆண்டு மும்பையில் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் நான் அவருடன் இருந்தேன். நாங்கள் ஒன்றாக காலை உணவை சாப்பிட்டோம், அவர் என்னுடன் பேச விரும்பினார். அவர் மாரடைப்பால் பாதிக்கப்படுவார் என்று யாரும் யூகித்திருக்க முடியாது. அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்.”என்று பானர்ஜி கூறினார்.

அதேபோல், “எனக்குத் தெரிந்து சவுரவ்க்கு ஒருபோதும் மது பழக்கம் மற்றும் புகைபழக்கம் இருந்ததில்லை. அவர் தனது உடல் பாதுகாப்பில் தீவிரம் காட்டி வந்தார்.  மேலும் தன்னால் முடிந்தவரை உடற்பயிற்சி செய்வார். ஆனால் அவருக்கு மராடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனாலும் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கலாம். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். மேலும் அவர் ஒருபோதும் அரசியலில் சேர மாட்டேன் என்று அவர் என்னிடம் கூறியிருந்தார்.

ஆனால் சமீப  நாட்களில் அவரை அரசியலில்  சேர  சொல்லி  யாரோ  அவரை  அரசியலுடன் இணைக்க அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதுவே அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று அவர் கூறினார். மேற்கு வங்காளத்தில், சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு  சுழற்சியில் கங்குலி ஆர்வமாக இருந்தார் எனவும், அவருக்கு மராடைப்பு என்றதும், முதல்வர் முதல் ஆளுநர் வரை அவரை நலம் விசாரித்ததும், பிரதமர் மோடி அவரை தொலைபேசியிலவ் நலம் விசாரித்ததும்,  கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் அனைவரும் அவரை நலம் விசாரித்துள்ளனர்..

இதனால் அவர் அரசியலில் நுழைவார் என்ற ஊகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில். வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

இது குறித்து கங்குலியுடன் இணைந்து பயிற்சி பெற்ற லஹிரி, கூறுகையில்,

கங்குலி மிகவும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கிறார். அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட மற்றவர்களைப் போலவே அவரது உடற்தகுதியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு மராடைப்பு என்ற செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தோம், ஆனால் அவர் ஒவ்வொரு நாளும் உடல் நிலையில், முன்னேறி வருவதால் நாங்கள் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ”என்று அவர் கூறினார்.

இது குறித்து கொல்கத்தாவில் மூத்தபத்திரிகையாளர் சுமித் முகர்ஜி கூறுகையில்,

“சவுரவ் கங்குலி சிறந்த பெங்காலி. அவர் ஒரு போராளி, புத்திசாலி, துரதிர்ஷ்டவசமாக, அவருடைய இதயம் தான் இப்போது அழுத்தத்தில் உள்ளது,  விளையாட்டிற்கான நெருக்கடியின் ஒரு வருடத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பாளராக இருப்பது மற்றும் அரசியலுடன் இணைந்திருப்பது. அவர் பாஜக, டிஎம்சி அல்லது சிபிஎம்மில் சேர்ந்தாலும் நாங்கள் அவரை ஆதரிப்போம். நம் பார்வையில், சவுரவ் கங்குலி எந்த தவறும் செய்ய முடியாது. ஆனால் அதுவும் அழுத்தம் தான் என்று அவர் கூறினார்.

Saurav Ganguly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment