scorecardresearch

இந்தியா – பங்களாதேஷ் செமி ஃபைனல்; மழை வருமா? ரிசல்ட் இதோ!

சாம்பியன்ஸ் லீக் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நாளை வங்கதேச அணியை எட்ஜ்பாஸ்டனில் சந்திக்கிறது இந்தியா. இந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அதிகம் மழை பெய்த மைதானங்களில் எட்ஜ்பாஸ்டனுக்கு தான் முதல் இடம். இதனால், இந்தப் போட்டிக்கு மழையால் பாதிப்பு இருக்குமா? என்பது குறித்த வானிலை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, போட்டி நடைபெறும் நாளை(வியாழன்) எட்ஜ்பாஸ்டனில் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுமாம். மழைக்கான வாய்ப்பு இல்லாமல் நல்ல வெயில் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டம் அவ்வப்போது எட்டிப் […]

இந்தியா – பங்களாதேஷ் செமி ஃபைனல்; மழை வருமா? ரிசல்ட் இதோ!
சாம்பியன்ஸ் லீக் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நாளை வங்கதேச அணியை எட்ஜ்பாஸ்டனில் சந்திக்கிறது இந்தியா. இந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அதிகம் மழை பெய்த மைதானங்களில் எட்ஜ்பாஸ்டனுக்கு தான் முதல் இடம். இதனால், இந்தப் போட்டிக்கு மழையால் பாதிப்பு இருக்குமா? என்பது குறித்த வானிலை அறிக்கை வெளிவந்துள்ளது.

அதன்படி, போட்டி நடைபெறும் நாளை(வியாழன்) எட்ஜ்பாஸ்டனில் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுமாம். மழைக்கான வாய்ப்பு இல்லாமல் நல்ல வெயில் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டம் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஆனால், பெரும்பாலும் வெயில் தான் கொளுத்துமாம். நாளை மழை பெய்ய அதிகம் வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீம்ஸ் போட்டு இந்தியாவை கிண்டல் செய்யும் வங்கதேசத்தை நாளை வச்சு செய்ய, நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Is rain threaten india bangladesh semifinal clash