இஷான் கிஷனின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Happy Birthday Ishan Kishan: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் வீரரான இஷான் கிஷான் இன்று (18 ஜூலை) தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்திய அணிக்காக கடந்த 2021ல் அறிமுகமான இவர் ஒரு டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்களை எடுத்துள்ளார்.
Advertisment
இஷான் கிஷன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடினர். அந்த ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசி 210 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் அதிக ரன்கள் (156) எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 6வது அதிக ரன்கள் (பேட்டிங் பொசிஷன் மூலம்) (210) குவித்த என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இஷான் கிஷான் தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். தனது முதலாவது போட்டியில் ஒரு ரன் எடுத்த அவர் வருகிற வியாழக்கிழமை முதல் டிரினிடாட்டில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தீவிரமாக தயாராகி வருகிறார்.
இஷான் கிஷன் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் நிலையில், ஏலத்தில் அவரை 15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்துக் கொண்டது.
'மிஸ் இந்தியா' உடன் டேட்டிங்
இஷான் கிஷன் சூப்பர் மாடல் அதிதி ஹண்டியாவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு சீசன்களில் ஐ.பி.எல்-லில் மும்பை இந்தியன்ஸ் போட்டிகளின் போது அவர் அடிக்கடி இஷான் கிஷனை உற்சாகப்படுத்துவதற்காக மைதானத்திற்கு வந்திருந்தார்.
அதிதி ஹண்டியா மிஸ் இந்தியா 2017 இறுதிப் போட்டியாளர் மற்றும் மிஸ் இந்தியா சூப்பர்நேஷனல் 2018 வெற்றியாளரும் ஆவார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 2.97 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இஷான் கிஷனின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி மும்பை இந்தியன்ஸிலிருந்து ஐ.பி.எல் சம்பாதித்ததன் காரணமாகும். இது கடந்த இரண்டு ஆண்டுகளாக சீசனுக்கு ரூ.15.25 கோடி என்று மாறியது.
இஷான் கிஷானிடம் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் உள்ளனர். ரூ. 92 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு மஸ்டாங், மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் (ரூ. 1.05 கோடி) மற்றும் பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் (ரூ. 72 லட்சம்) போன்ற கார்கள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil