Advertisment

ஆசிய கோப்பை போட்டிக்கு இடையே திடீரென மும்பைக்கு பறந்த பும்ரா: குவியும் வாழ்த்துகள்

பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jasprit Bumrah, Sanjana Ganesan welcome baby boy Angad

'அங்கத் ஜஸ்பிரித் பும்ரா'-வை உலகிற்கு வரவேற்றோம் என்று பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Jasprit Bumrah, Sanjana Ganesan welcome baby boy Angad Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் ஜஸ்பிரீத் பும்ரா. இவர் தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பரில் அணியில் இருந்து வெளியேறினார். இதனால், அவர் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.

Advertisment

இந்நிலையில், பும்ரா தற்போது பாகிஸ்தான் - இலங்கை மண்ணில் நடைபெற்றும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க போட்டியில் பும்ரா அணியில் இடம்பெற்றிருந்தாலும், இரண்டாவது பாதியில் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டதால் அவரால் பந்து வீச முடியவில்லை.

publive-image

தொடர்ந்து நடக்கும் நேபாளத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பியுள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அவருடைய மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து, பும்ரா - சஞ்சனா தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

பும்ரா தனது இன்ஸ்டா பதிவில், "எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நிறைவாக உள்ளன. இன்று காலை நாங்கள் எங்கள் குழந்தை 'அங்கத் ஜஸ்பிரித் பும்ரா'-வை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவிற்கு மேல் இருப்பது போன்று உணர்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயம் கொண்டு வரும் எல்லாவற்றிற்கும் காத்திருக்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய திரும்பியுள்ள பும்ரா ஆசிய கோப்பை தொடரின் 'சூப்பர் 4'சுற்றில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Jasprit Bumrah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment