Advertisment

வாடகை வீடு; வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ ஓட்டும் பும்ராவின் தாத்தா!!

வாடகை வீட்டில் தங்கியிருந்து, வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ ஒட்டு வருகிறார் இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ராவின் தாத்தா.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாடகை வீடு; வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ ஓட்டும் பும்ராவின் தாத்தா!!

இந்திய அணியின் மிகவும் நம்பகமான பந்து வீச்சாளர் என புகழப்படும் பும்ராவின் தாத்தா, வாடகை வீட்டில் தங்கியிருந்து, வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ ஒட்டு வருகிறார்.

Advertisment

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக அசத்தி வருபவர், ஜஸ்பிரித் பும்ரா. ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக இவர் விளையாடியவர். டி-20 போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தர வரிசைப் பட்டியலில், 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ள பும்ரா, சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் வீசிய நோ பால் பரபரப்பைக் கிளப்பியது.

பும்ரா மிகச்சிறந்த பந்து வீச்சாளர். அதிலும் கடைசி கட்டங்களில் தனித்துவமாக செயல்படும் திறன் கொண்டவர். கடைசிக் கட்ட ஓவர்களில் திறமையாகப் பந்து வீசி, பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

இப்படி கிரிக்கெட் உலகின் புதிய உச்சங்களுக்கு பும்ரா சென்று கொண்டிருக்கும் தருவாயில், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அது வேறு யாருமல்ல, அவரது தாத்தா சந்தோக் சிங் பும்ரா தான். இவர், வாடகை வீட்டில் தங்கியிருந்து, தனது வயிற்றுப் பிழைப்புக்காக டெம்போ ஓட்டி வருகிறார்.

இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அகமதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட் வந்தது முதல், சந்தோக் சிங் பும்ரா டெம்போ ஒட்டி வருவதாக தெரிகிறது. மேலும், அவரது கடந்த கால வாழ்க்கை நமது மனதை மிகவும் கஷ்டப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

சந்தோக் சிங் பும்ராவுக்கு மூன்று தொழிற்சாலைகள் இருந்துள்ளன. தனது மகனான ஜஸ்வீர் சிங் பும்ராவுடன் (ஜஸ்பிரித் பும்ராவின் தந்தை) இணைந்து சிறப்பாக தொழில் செய்து வந்துள்ளார். அத்தகைய மகிழ்ச்சியான தருணத்தில், கடந்த 2001-ஆம் ஆண்டில் ஜஸ்வீர் காலமாகியுள்ளார். தனது மகன் ஜாஸ்வீரின் மரணம் சந்தோக் பும்ராவை உலுக்கியெடுத்து விட்டது. அதிலிருந்து மீள முடியாமல், அடுத்தடுத்து தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன்களை அடைக்க தனது தொழிற்சாலைகளை விற்று விட்டார் சந்தோக்.

தொழிற்சாலைகளை விற்ற பின்னர் கடந்த 2006-ஆம் ஆண்டில் உத்தரகாண்டின் உத்தம் சிங் நகரில் குடியேறிய சந்தோக், அங்கு நான்கு டெம்போக்களை வாங்கி புதிய தொழிலை தொடங்க தொடங்கியுள்ளார். ஆனால், இதிலும் நஷ்டம் ஏற்படவே, மூன்று டெம்போகளை விற்றுள்ளார். மீதமுள்ள ஒரு டெம்போவை வைத்து தனது வயிற்றுப் பிழைப்பை கவனித்து வருகிறார் அந்த முதியவர்.

தற்போது 84 வயதான அவர், தனது பேரனையும், அவரது பவுலிங்கையும் தொலைகாட்சியில் கண்டு ரசித்து வருகிறார். பேரனை கட்டித் தழுவிக் கொள்ள ஆசைப்படும் அவர், தனது பேரனை நினைத்து பெருமை கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.

Jasprit Bumrah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment