WIM Julia Lebel-Arias Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28 ஆம் தேதி) தொடங்கியது. அடுத்த புதன் கிழமை (ஆகஸ்ட் 10ம் தேதி) வரை நடைபெற உள்ள இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியில் பங்கேற்றுள்ள வயதான வீராங்கனை என்ற பெருமையை மொனாக்கோ பெண்கள் அணிக்காக விளையாடும் 77 வயது ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார்.

அர்ஜென்டினா நாட்டில் 10 மார்ச் 1946 ஆம் ஆண்டு பிறந்த ஜூலியா முதலில் தனது சொந்த நாட்டுக்காக செஸ் விளையாடினார். அதன் பிறகு பிரான்ஸ் அணிக்காக ஆடினார். தற்போது அவர் மொனாக்கோ அணிக்காக களமிறங்கியுள்ளார். மேலும், தனது 18வது செஸ் ஒலிம்பியாட் விளையாடும் இவர், 4 முறை அர்ஜென்டினா மகளிர் சாம்பியன் மற்றும் 3 முறை பிரெஞ்சு மகளிர் சாம்பியன் பட்டத்தை வாகை சூடியவர் ஆவார்.

செஸ் விளையாட்டில் ஜொலிக்க வயது ஒன்றும் பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஜூலியா சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்கி கலக்கி வருகிறார். இவர் நேற்று நடந்த 5-வது சுற்று ஆட்டத்தில் மடகாஸ்கர் அணி வீராங்கனை ராகோடோனியைன் டியானா ஜோஹன்னாவை 41-வது காய்நகர்த்தலில் வீழ்த்தினார். மடகாஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மொனாக்கோ 4-0 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.
7⃣8⃣ vs 1⃣3⃣
— Santhosh Kumar (@giffy6ty) August 1, 2022
78-year-old Julia Lebel-Arias is the oldest player of the #chessOlympiad22. Her opponent is 13-yr-old Tunisian Laaribi Mariem. Julia represents Monaco. Played for 🇦🇷 & 🇫🇷before. Made her #olympiad debut in '76, it's her 18th! @FIDE_chess @aicfchess 📸Sanjay, DC pic.twitter.com/tYkOCcdZop
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil