Jyothi Yarraji Tamil News: லாக்போரா சர்வதேச தடகள போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி பந்தய தூரத்தை 13.11 வினாடியில் கடந்து புதிய தேசிய சாதனையை பதிவு செய்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி யர்ராஜி (22) பிரிட்டனின் ஜெசிகா ஹன்டரை (13.26) 13.11 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினார்.
முன்னதாக, ஜோதி யர்ராஜி கடந்த 10-ந் தேதி சைபிரஸ் நாட்டில் நடந்த லிமாசோல் இன்டர்நேஷனல் போட்டியில் பந்தய தூரத்தை 13.23 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்து இருந்தார். தற்போது அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதே விளையாட்டு தொடரில், ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில், தேசிய சாதனை படைத்த அம்லன் போர்கோஹைன் 21.27 வினாடிகளில் ஐந்தாவது இடத்தைப்பிடித்தார். சமீபத்தில், இவர் மலப்புரத்தில் நடந்த ஃபெடரேஷன் கோப்பையில் 20.52 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை முறியடித்திருந்தார்.
இதற்கிடையில், இத்தாலியின் க்ரோசெட்டோவில் நடந்த காஸ்டிக்லியோன் சர்வதேச போட்டியில் காற்றின் உதவியுடன் 8.37 மீ (தனிப்பட்ட சிறந்த 8.26 மீ) ஃபெடரேஷன் கோப்பை தங்கம் வென்ற தமிழகத்தின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், ஆடவர் நீளம் தாண்டுதலில் 7.82 மீட்டர் வெள்ளி பதக்கம் வென்றார். இங்கிலாந்து வீரர் ரெனால்ட் பானிகோ, 8.04 மீட்டர் தூரம் தாண்டி 7.94 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.
சமீபத்தில் நடந்த ஃபெடரேஷன் கோப்பையில் மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.84 மீட்டர் வரை கடந்த தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல், இத்தொடரில் 16.18 மீட்டர் தாண்டி ஆறாவது இடத்தைப் பிடித்தார். கியூபாவின் ஆண்டி டயஸ் தனிப்பட்ட சிறந்த 17.64 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரு சீன வீரர்களான யாக்கிங் ஃபாங் (16.81) மற்றும் யாமிங் ஜு (16.80) வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கத்தை வென்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil