Cricket Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் அந்த அணி முதலில் விளையாடிய டி20 தொடரில் முழுதுவமாக இழந்து இந்தியாவிடம் தொடரை பறிகொடுத்தது. தற்போது அந்த அணி 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
T20Is ✅
— BCCI (@BCCI) March 1, 2022
Preps begin for the Tests 👍👍#TeamIndia | #INDvSL | @Paytm pic.twitter.com/SR1VkACfCW
— BCCI (@BCCI) March 1, 2022
100-வது டெஸ்டில் கோலி
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். எனவே, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் சர்வதேச போட்டிகளில் தனது சதத்தை பதிவு செய்து நீண்ட நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த 100-வது டெஸ்ட் போட்டியில் அதைப் பதிவு செய்து, ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என அவரின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி குறித்து பேசியுள்ள இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் (ஸ்டார் ஸ்போர்ட்ஸில்) “விராட் கோலி தனது 100வது டெஸ்டில் விளையாடுவது ஒரு சிறப்பு உணர்வாக இருக்கும் – டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமின்றி, அனைத்து வடிவங்களிலும் அவர் என்ன சாதித்துள்ளார் என்பதை நீங்கள் பார்க்கலாம். அவர் அற்புதமானவர், இதை அவர் கொண்டாடுவார் என்று நம்புகிறேன். அவர் தனது 100வது டெஸ்ட்டை 100 ரன்களோடு கொண்டாடுவார் என்றும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா ஆன்லைன் மூலம் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஒரு வீரர் 100 டெஸ்டில் விளையாடுவது எப்போதுமே சிறப்பான சாதனைதான். விராட் இந்த அணிக்காக நிறைய பங்களித்துள்ளார் மற்றும் அதைத் தொடர்ந்து செய்வார். இது அவரது தொப்பியில் செருகப்பட உள்ள மற்றொரு இறகு. நான் கோலியை வாழ்த்த விரும்புகிறேன் – இது அவரது கடின உழைப்புக்கு ஒரு சாட்சியாகும்.” என்று கூறியுள்ளார்.
🗣️🗣️ @imVkohli playing 100 Test matches is testimony to his hardwork and dedication towards the game: @Jaspritbumrah93 🔊#TeamIndia | #INDvSL pic.twitter.com/6yh13WWkJ3
— BCCI (@BCCI) March 1, 2022
100 டெஸ்ட் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார், யார்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது ஒரு வீரரின் சாதனையாகவும், மிக முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 70 வீரர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். அதில் 15 வீரர்கள் மட்டும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்திய வீரர்களில் இதுவரை 11 வீரர்களை இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இவர்களுடன் 12வது வீரராக முன்னாள் கேப்டன் விராட் கோலி இணைகிறார்.
100 டெஸ்ட் போட்டிகளை விளையாடி இந்திய அணியில் உள்ள ஒரு வீரர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆவார். அவர் தற்போது வரை 105 டெஸ்ட் போட்டிகளை விளையாடி இருக்கிறார்.
இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களில் புஜாரா 95, அஸ்வின் 84, ரஹானே 82, முகமது ஷமி 57, உமேஷ் யாதவ் 52 போட்டிகளிலும் விளையாடி இருக்கின்றனர்.
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
- சச்சின் டெண்டுல்கர் (200)
- ராகுல் டிராவிட் (163)
- விவிஎஸ் லட்சுமணன் (134)
- அனில் கும்ப்ளே (132)
- கபில் தேவ் (131)
- சுனில் கவாஸ்கர் (125)
- திலீப் வெங்சர்க்கார் (116)
- சவுரவ் கங்குலி (113)
- இஷாந்த் சர்மா (105)
- ஹர்பஜன் சிங் (103)
- வீரேந்திர சேவாக் (103)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“