scorecardresearch

காஞ்சிபுரம்: ஸ்குவாஷ் வீராங்கனையிடம் பயிற்சியாளர் பாலியல் அத்துமீறல்; போலீசில் புகார்

காஞ்சிபுரத்தில் ஸ்குவாஷ் வீராங்கனையை பயிற்சியாளர் கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kancheepuram; coach try to rape squash player, arrested Tamil News
Kancheepuram Sports Development Authority of Tamil Nadu’s stadium; coach Murugesan (48) try to rape squash player, jumps from first floor to escape Tamil News

Kancheepuram,  Squash player Tamil News: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து, ஹாக்கி, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வீரர்-வீராங்கனைகளுக்கு தினமும் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

19 வயதான அவர் தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் தொடர்பாக பயிற்சியாளரான முருகேசனிடம் (48) கேட்டுள்ளார். அதற்கு முருகேசன், சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அங்கு வந்து அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் மாணவியிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து, சான்றிதழைப் பெற மாணவி பயிற்சியாளரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தனிமையில் இருந்த பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, பயிற்சியாளர் முருகேசனிடம் இருந்து தப்பிக்க வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். மேலும், அங்கிருந்து தப்பிய மாணவி இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து, புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பயிற்சியாளர் முருகேசனை கைது செய்துள்ளனர். மேலும், பயிற்சியாளர் முருகேசன் மீது அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சியாளராக இருந்த முருகேசன், ரயில்வே சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் மற்ற மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Kancheepuram coach try to rape squash player arrested tamil news

Best of Express