worldcup 2023 | new-zealand | kane-williamson: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.
கேன் வில்லியம்சன் காயம்
இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதிய நிலையில், அந்தப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 245 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை கேப்டன் கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தினார். அவர் 78 ரன்கள் எடுத்து இருந்தபோது, ரன் ஓட முயன்ற போது, ஸ்டம்புக்கு எறியப்பட்ட பந்து அவரது இடது கையில் கட்டைவிரலில் காயம் ஏற்படுத்தியது.
இந்த காயத்தை மருத்துவர்கள் சோதித்த நிலையில், கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வெள்ளிக்கிழமை சென்னையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடும்போது பந்து வீசியதால் கேன் வில்லியம்சனின் இடது கட்டை விரலில் இடப்பெயர்ச்சி இல்லாத எலும்பு முறிவு ஏற்பட்டதை எக்ஸ்ரே உறுதி செய்துள்ளது" தெரிவித்தது.
வில்லியம்சன் விலகல்
இந்நிலையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதால் எதிர்வரும் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும், போட்டியின் கடைசி கட்டத்தில் வில்லியம்சனின் மீண்டும் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நம்பிக்கை தெரிவித்தார்.
அவருக்குப் பதிலாக டாம் ப்ளண்டெல் பெயரிடப்பட்டாலும், வில்லியம்சன் அணியில் இருப்பார். அடுத்த மாதம் அவர் அணியில் இருப்பாரா என பயிற்சியாளர் கேரி ஸ்டெட் பார்ப்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பயிற்சியாளர் கேரி ஸ்டெட் பேசுகையில், "முதலாவதாக, முழங்கால் காயத்தில் இருந்து தனது கடின உழைப்புக்குப் பிறகு திரும்பிய கேனுக்கு இப்படி நிகழ்ந்துள்ளது எங்களுக்கு அனைவருக்கும் மிகவும் அளிக்கிறது.
இது ஏமாற்றமளிக்கும் செய்தியாக இருந்தாலும், ஆரம்பகால நோயறிதல் எங்களுக்கு சில நம்பிக்கையை அளித்துள்ளது. கேன் தெளிவாக எங்கள் அணியின் ஒரு முக்கிய அங்கம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வீரர் மற்றும் கேப்டனாக இருக்கிறார். எனவே போட்டியில் திரும்புவதற்கு எங்களால் முடிந்த எல்லா வாய்ப்பையும் அவருக்கு வழங்குவோம்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.