'அவர் சிறுத்தை போல் பாய்ந்து பீல்டிங் செய்கிறார்': கோலியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் பயிற்சியாளர்!
Former fielding coach R Sridhar about Virat Kohli Tamil News: 'இந்திய வீரர் கோலி சிறுத்தை போல் பீல்டிங் செய்கிறார்' என்று கூறி பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கோலியைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Noticed a lot of positive difference in Virat, his batting, fielding and the overall mindset and headspace said Former fielding coach R Sridhar
R Sridhar - Virat Kohli Tamil News: "கோலி சிறுத்தை போல் பீல்டிங் செய்கிறார். அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது." என்று முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
Advertisment
கேப்டன் பதவியை துறந்த கோலி
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. தனது பணிச்சுமை மற்றும் ஆட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தை கருத்தில் கொண்ட அவர் கடந்தாண்டு நடந்த டி-20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருக்க தான் விரும்புவதாக அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோகித்தை நியமனம் செய்த இந்திய அணி நிர்வாகம், ஒயிட்பால் கிரிக்கெட்டில் எதற்கு 2 கேப்டன்கள் என்று கேள்வியெழுப்பி, அவர் டெஸ்ட் கேப்டனாக தொடரலாம் என்று கூறியது. அணி நிர்வாகத்திற்கும் தனக்கும் இடையே சரியான பேச்சு வார்த்தை தொடர்பு இருக்கவில்லை என்று தென் ஆப்ரிக்கா உடனான தொடருக்கு முன்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் போட்டுடைத்தார் கோலி. அந்த தொடருக்கு பிறகு தான் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், ஒரு சாதாரண வீரராக தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.
விரட்டிய ஃபார்ம் அவுட் சர்ச்சை… முற்றுப்புள்ளி வைத்த கோலி
இந்த சர்ச்சைகள் ஒரு வழியாக ஓய்ந்து முடிந்த நிலையில், கோலியின் பேட்டிங் ஃபார்ம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அவரின் தாற்காலி ஃபார்ம் அவுட், அவரின் 71வது சத தேடல் போன்றவை குறித்து தொடர்ந்து கேள்விகளும், அதைச் சுற்றிய விவாதங்களும் அன்றாட நடந்தன. இந்த ஏச்சு பேச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோலி, சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய கோலி 122 ரன்கள் குவித்தார். மேலும், தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் தனது ஃபார்மை மீட்டு எடுத்திருந்தார் கோலி.
முன்னதாக, இதே தொடரில் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக முக்கியமான 35 ரன்களை அடித்தார். தொடர்ந்து ஹாங்காங்கிற்கு எதிராகவும், பின்னர் மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கைக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். அதன்பிறகு ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் அவர் சதம் விளாசி இருந்தார்.
இந்த ஃபார்மை கோலி சொந்த மண்ணில் நடக்கும் தொடர்களிலும் தொடருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் கோலி. குறிப்பாக, அந்த அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது போட்டியில், சூர்யா குமாருடன் ஜோடி அமைத்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரைசதம் விளாசினார். மேலும் அவர் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 69 ரன்கள் எடுத்து அசத்தினார்.
கோலி தற்போது இந்திய மண்ணில் நடக்க இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும், ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டி-20 உலக கோப்பை தொடருக்கவும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். அவரின் ஆட்டம் தொடர வேண்டும் என்பதே அனைத்து ரசிர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முன்னாள் இந்திய பயிற்சியாளர் புகழாரம்
இந்நிலையில், கோலி 2.0-வை பாராட்டி பேசியுள்ள முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் அவரது பேட்டிங், பீல்டிங் மற்றும் ஒட்டுமொத்த மனநிலை மற்றும் ஹெட்ஸ்பேஸ் ஆகியவற்றில் நிறைய நேர்மறையான வித்தியாசத்தை கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்.காமிடம் பேசிய பயிற்சியாளர் ஸ்ரீதர், "அவர் இப்போது ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார். அவர் முன்பு ஒப்புக்கொண்டது போல், ஒருவேளை சரியான மனநிலையில் இல்லை. ஆனால், இப்போது சரியான இடத்தில் அவர் இருக்கிறார். அவருக்கு கிடைத்த இடைவேளை அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக மாற்றியுள்ளது. அதேபோல் அவரது குடும்பத்துடன் செலவழித்த நேரமும் அவருக்கு பலனைக் கொடுத்துள்ளது. அதை ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் சரியாக என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்த்தோம்.
ஹைதராபாத்தில் ரிங்சைடில் இருந்து அவர் பேட்டிங் செய்வதைப் பார்த்த பிறகு, 'தி கிங் இஸ் பேக்' என்று நீங்கள் நன்றாகவும் உண்மையாகவும் சொல்லலாம். அது அவரின் பெரிய மனநிலை. அவர் சிறுத்தை போல் பீல்டிங் செய்கிறார். அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில், இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பைக்கு செல்வதற்கு இது மிகவும் நல்லது." என்று அவர் கூறியுள்ளார்.