Advertisment

கிரிக்கெட்டில் அதிகம் பயன்படுத்தும் பந்தின் குணம் என்ன தெரியுமா?

கூக்கபுரா Vs டியூக்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kookaburra vs duke balls

Kookaburra vs duke balls

ANBARASAN GNANAMANI

Advertisment

7 ரூபாய்க்கு ஸ்டெம்ப்பர் பந்து வாங்கி, பற்பல் சிக்ஸர்களை பறக்க வைக்க முயற்சி செய்து, அதில் சிலவற்றை சக்சஸ் செய்து, அந்த பந்தை நாலே மேட்சுல நாறு நாறா நொறுக்கி, வாரத்துக்கு 3 ஸ்டெம்ப்பர் பால் வாங்கிய அடியேன் எழுதும் கட்டுரை இது!.

நம்ம ஊருல, வயல் வரப்புல விளையாட ஸ்டெம்ப்பர் பந்தே போதும். ஆனால், அங்க கூக்கபுரா பந்தை வைத்து விளையாட முடியுமா? டியூக் பந்தை வைத்து விளையாட முடியுமா? எஸ்ஜி பந்தை வைத்து விளையாட முடியுமா? இதெல்லாம், அந்த வயசுல எனக்கு தெரியாம போச்சு.. தெரிஞ்சிருந்தா, அப்பவே அப்பாவிடம் விடா அடம் புடிச்சு வாங்கியிருக்கலாம்..! என்ன செய்ய!!

ஆனா ஒன்னு! நான் மேலே சொன்ன அந்த மூணு பந்தையும் வச்சு விளையாடி இருந்தோம்-னா, வாரத்துக்கு  3 ஸ்டெம்ப்பர் பால் வாங்கினதுக்கு பதிலா, மூணு பேட் தான் வாங்கியிருக்கணும்.

விஷயத்திற்கு வருவோம்... பல ஆண்டுகளாக வெறித்தனமா கிரிக்கெட் பார்க்குறோம். ஆனா, கிரிக்கெட்-ல என்ன பால் யூஸ் பண்றாங்க-னு கேட்டா, 'டி20, ஒன்டே மேட்சுக்கெல்லாம் வெள்ளை கலர் பந்தும், டெஸ்ட் மேட்சுல சிகப்பு பந்து யூஸ் பண்ணுவாங்க' என்ற வரையில் தான் நமக்கு தெரியும்.

பட், இந்த பந்துகளுக்கெல்லாம் தான் கூக்கபுரா, டியூக், எஸ்ஜி-ங்கற பேர் வச்சு யூஸ் பண்றாங்க-னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!? நம்மாளுங்க, ஜெயிச்சா, பிளேயர்சை ' தோனி டா' , 'கோலி டா' தலையில தூக்கி வச்சு கொண்டாடுறதும், தோற்றால் 'வீட்டுல கல்ல வுட்டு அடிக்குறதுமே வழக்கமா போச்சு!. அதைத் தாண்டி வேற எதைப்பற்றியும் யோசிக்குறதே இல்ல. கிரிக்கெட்டை அப்படி மேலோட்டமாவே பார்த்துட்டு நாம போயிடக் கூடாது. ஒவ்வொரு விஷயத்தையும் அலசனும்.

யோவ்... ஒரு விளையாட்டைப் போய் ஏன்யா இவ்ளோ சீரியஸா சொல்ற-னு கேட்காதீங்க? அந்த விளையாட்டு தான் இந்தியாவில் கோடிக்கணக்கான பேர் பார்க்கும் நம்பர்.1 விளையாட்டு. அதிலும், நாம தமிழன் ஆச்சே! புகுந்து அலச வேண்டாமா!!.

கிரிக்கெட்டுல ஆரம்ப காலக் கட்டத்துல, சிகப்பு பந்தை தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்போலாம் வெறும் டெஸ்ட் மேட்ச் மட்டும் தானே! காலை-ல 9 மணிக்கு ஆரம்பிச்சுதுனா மாலை 5 மணி வரைக்கும் இழு இழுன்னு இழுத்து ஒருவழியா முடிப்பாங்க. முழுக்க பகல்ல விளையாடுறதால, சிகப்பு பந்தை யூஸ் பண்றதில் எந்தப் பிரச்சனையும் இல்லாம இருந்துச்சு. ஆனால், ஒன்டே மேட்ச் Intro ஆன அப்புறம்,  நைட்டுலயும் மேட்ச் நடந்தது. அப்போ பேட்ஸ்மேன்களுக்கு சிகப்பு பந்து, இருட்டுல சரியா தெரியல.

இந்த பிரச்னைக்கு அப்புறம் தான், வெள்ளை நிற பந்தை அறிமுகம் செஞ்சாங்க. அது நைட் டைம்ல, பேட்ஸ்மேனுக்கு கிளீயரா தெரிஞ்சிச்சு. பிராப்ளம் ஓவர்.

அதேமாதிரி, வெள்ளை பந்தோட கேரக்டரே வேறங்க... 'என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குரியே' என்பது மாதிரி, சிகப்பு பந்தை விட, வெள்ளை பந்து முதல் இன்னிங்ஸில் கடுமையாக ஸ்விங் ஆகும். சிகப்புல அந்த அளவுக்கு ஸ்விங் இருக்காது. அப்புறம், சிகப்பு பந்தை விட, சீக்கிரம் டேமேஜ் ஆவதும் வெள்ளை பந்து தான். இத்தனைக்கும், இரண்டையும் ஒரேமாதிரி தான் தயாரிக்குறோம்-னு கம்பெனிக்காரன் கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றான். ஆனாலும், நம்ம வெள்ளை பய தான் அதிகம் ஸ்விங் ஆகுறான். அதனால், டெஸ்ட் மேட்சுக்கு சிகப்பு பந்து நிரந்தரம் ஆக்கப்பட்டது. இருந்தாலும், இப்போ டே - நைட் டெஸ்ட் போட்டிகள் அறிமுகம் ஆகியிருப்பதால, பிங்க் பால் யூஸ் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க.

டியூக் பந்து:

இப்போ, நம்ம இந்தியன் டீம், இங்கிலாந்துல டெஸ்ட் மேட்ச் விளையாண்டுகிட்டு இருக்காங்க இல்லயா... அந்த மேட்சுல யூஸ் பண்ற பந்துக்கு பேர் 'டியூக்' பால். இந்த பந்துகள் அனைத்தும் இங்கிலாந்துலயே தயாரிக்கப்படுது. கிரிக்கெட் விளையாடுற நாடுகள்ல, இங்கிலாந்தும், இப்போ பங்களாதேஷ் கிட்ட தர்ம அடி வாங்கிக்கிட்டு இருக்குற வெஸ்ட் இண்டீசும் தான் இந்த 'டியூக்' பந்துகளை யூஸ் பண்றாங்க.

publive-image டியூக் பந்து

கூக்கபுரா பந்து:

கூப்புட்றா இல்ல கூக்கபுரா.... இந்த வகை பந்துகள் ஆஸ்திரேலியாவுல தயாரிக்குறாங்க. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இந்த நாடுகள்லாம், அவங்க நாட்டுல எந்த அணி வந்து கிரிக்கெட் விளையாடினாலும் 'கூக்கபுரா' பந்தை வச்சு தான் விளையாடுவாங்க..

publive-image கூக்கபுரா பந்துகள்

என்ன தேடுறீங்க? 'இந்தியா'ங்கற பேர தான? நாம தான், ஒரு படகுல அமெரிக்கா காரன், ரஷ்யா காரன், சீனா காரன், இந்தியா காரன் போனாங்க-னு, மொக்கையா ஒரு ஜோக்கு சொல்லி, அதுல மத்த மூணு நாட்டுக்காரன் செஞ்ச வேலையை விட, இந்தியாக்காரன் கிருத்துரதனமா ஏதாவது ஒன்னு செஞ்சான்னு சொல்லி, சிரிக்க வைப்போமே! அப்புறம், இதுல மட்டும் என்ன... இந்தியா டியூக், கூக்குபுரா என்ற இரண்டு வகை பந்தையும் யூஸ் பண்ணாமல், வித்தியாசமா யாருமே யூஸ் பண்ணாத எஸ்ஜி (SG) எனும் பந்தை தான் யூஸ் பண்ணுறாங்க. இந்தியாவுல தயாரிக்கப்படுற இந்த வகை பந்துகள் தான், இந்தியன் டீம் விளையாடுற மேட்ச், அப்புறம் ரஞ்சி மேட்ச்ல-லாம் யூஸ் பண்றாங்க.

ஆனா, சர்வதேச டெஸ்ட் போட்டிகள்ல போட்டியே கூக்கபுரா Vs டியூக்-கிற்கு மட்டும் தான். இரண்டும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனா, இதோட பெரிய வித்தியாசமே stitching-ல தான் இருக்கு. டியூக் பந்துல உள்ள stitching... அதாவது தையல், அவங்க நாட்டு பவுலர்களின் பாணிக்கு ஏற்றவாறு தயாரிச்சு இருப்பாங்க. அதேமாதிரி, கூக்குபுரா stitching ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கும்.

இந்த கூக்கபுரா பந்து, முதல் 20 ஓவர் வரை, swing மற்றும் seam பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும். அதன்பிறகு, இந்த பந்து ஸ்பின்னர்களுக்கு நல்ல க்ரிப் (Grip) கொடுக்கும். அதேசமயம், பேட்ஸ்மேனுக்கும் வாகாக வந்து ஒத்துழைப்பு கொடுக்கும். டெஸ்ட் மேட்சுல, 80 ஓவர் வரை ஒரு கூக்கபுரா பால் நல்லா தாக்குப்பிடிக்கும்.

டியூக் பந்து முழுக்க வேகப்பந்து வீச்சு சப்போர்ட் பண்ணும். ஆனா, 50 ஓவர் வரை தான் தாக்குப்பிடிக்கும். நம்ம, சேவாக் மாதிரி, ஈவு இரக்கம் இல்லாம, டெஸ்ட் மேட்சுலயும் அடிக்குற மாதிரியான பிளேயர்ஸ் விளையாண்டா,  40 ஓவருக்கு தான் தாங்கும். ஸ்பின்னர்களுக்கு Grip கிடைக்குறது ரொம்ப கஷ்டம். ஆனா, இந்த டியூக் பந்துல தான், நம்ம அஷ்வின் இங்கிலாந்துக்கு எதிரா முதல் மேட்சுல சூப்பரா பவுலிங் செஞ்சாரு. அப்போ அது எவ்ளோ பெரிய விஷயம்-னு இப்போ புரிஞ்சுகோங்க!.

ஆனா, எந்த பாலா இருந்தாலும், ஜட்டிக்குள்ள இருந்து எதையாச்சும் எடுத்து வரும்புல தேய்க்கிறது.... வாயில இருந்து எதையாச்சும் எடுத்து சைடுல தேய்க்கிறது-னு ஏதாச்சும் செஞ்சா... அப்புறம் ஸ்மித், வார்னர் மாதிரி வெளியில உட்கார்ந்து இருக்க வேண்டியது தான்!.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment