/tamil-ie/media/media_files/uploads/2017/09/Kuldeep-Jacqueline-Fernandez.jpg)
பாலைவனத் தீவில் ஒருவேளை தனித்து விடப்பட்டால் அங்கு ஜாக்லின் ஃபெர்னாண்டஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சைனா மேன் என அழைக்கப்படும் குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளராவார். தற்போது, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியை 3-0 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் குல்தீப் யாதவ் நல்ல ஃபார்மில் உள்ளார். அந்த அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை படைத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
#TeamIndia win the 3rd ODI to take an unassailable lead of 3-0 in the five-match ODI series #INDvAUSpic.twitter.com/3yL8LxpO7L
— BCCI (@BCCI) 24 September 2017
ஹார்டிக் விக்கெட்டை இவர் வீழ்த்துவது இது முதல் முறையல்ல கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் இவர் ஹார்டிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவரிடம், அந்த அணியின் ஸ்பான்சர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
அதில் ஒரு கேள்வியாக, பாலைவனத் தீவில் ஒருவேளை தனித்து விடப்பட்டால் எந்த நடிகையை நீங்கள் உடன் அழைத்துச் செல்வீர்கள் என கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளித்த அவர், தன்னுடன் ஜாக்லின் ஃபெர்னாண்டசை அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.