பயிற்சியாளர் பதவியில் இருந்து அணில் கும்ப்ளே விலகல்!

2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் அணில் கும்ப்ளே. அவருடைய பதவிக் காலம் சாம்பியன்ஸ் தொடரோடு முடிவடைந்தது. அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு முன்பாக பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது சிரமம் என்பதால், கும்ப்ளேவே இத்தொடருக்கும் பயிற்சியாளராக தொடர்வார் என […]

2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் அணில் கும்ப்ளே. அவருடைய பதவிக் காலம் சாம்பியன்ஸ் தொடரோடு முடிவடைந்தது. அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது.

இத்தொடருக்கு முன்பாக பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது சிரமம் என்பதால், கும்ப்ளேவே இத்தொடருக்கும் பயிற்சியாளராக தொடர்வார் என பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில், இன்றுடன் கும்ப்ளேவின் ஒப்பந்தம் முடிகிறது. ஆனால், கும்ப்ளே திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீசுக்கு அவர் செல்ல மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தலைமையின் கீழ் கடைசி தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kumble step down as indian men team coach

Next Story
ஐபிஎல்-2017: அதிரடி காட்டிய ரெய்னா… குஜராத் அணிக்கு 2-வது வெற்றி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com