அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்சி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். கடந்த 2007 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது புகைப்படம், லோகோ, பனியன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் உரிமத்தை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி ஒப்பந்தம் செய்திருந்தார் மெஸ்சி. இந்த பணத்திற்கு வரி விலக்கு பெறுவதற்காக இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, உருகுவே போன்ற நாடுகளில் மெஸ்சி முதலீடு செய்தார்.
இது குறித்து ஸ்பெயின் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி, மெஸ்சி வரி ஏய்ப்பு செய்ததை கண்டறிந்தனர். கடந்த ஆண்டு நடந்த இது தொடர்பான விசாரணையில் மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனையும், ரூ.15½ கோடி அபராதமும் விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல அவரது தந்தை ஜார்ஜ் ஹோராசியா மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனயும், ரூ.12 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டணையை எதிர்த்து மெஸ்சி தரப்பில் ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு முன்னதாக வழங்கப்பட்ட தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனினும், ஸ்பெயின் சட்டப்படி வன்முறை சம்பவங்களை தவிர்த்து, 2 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.