டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் தலா 80 ரன்கள் விளாசினார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 158 ரன்கள் குவித்தனர். இந்திய அணியில் டி20 போட்டியில் தொடக்க இணை ஒன்று குவித்த அதிக ரன்கள் இதுவேயாகும்.
150+ opening stands in T20Is:
171* Guptill - Willaimson v Pak, Hamilton, 2016
170 G Smith - Bosman v Eng, Centurion, 2009
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள், இந்திய பவுலர்களின் 'லைன் அன்ட் லென்த்' அட்டாக் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சம் டாம் லாதம் 39 ரன்கள் எடுத்தார். முடிவில் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. சாஹல், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தனது இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடிய நெஹ்ராவுக்கு விக்கெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அவரது பவுலிங்கில் கோலி, ஹர்திக் ஆகியோர் கேட்சுகளை தவறவிட்டனர்.
இருப்பினும் தனது அக்மார்க் சிரிப்பு முகத்துடனே தனது கடைசி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றார் ஆசிஷ் நெஹ்ரா.